Seth Godin எழுதிய Linchpin படித்தேன். எங்கிருந்தாலும் நாம் ஒரு அச்சாணி போல இருக்க வேண்டும் என்கிறார். தற்காலக் கல்வி முறை எப்படி ஒரு மிகப் பெரிய மோசடி என விளக்குகிறார். செய்யும் தொழிலை கலையாகப் பார்த்து, உலகுக்கான பரிசாக அளிக்க வேண்டும் என்கிறார். புத்தகம் கொஞ்சம் வழா வழா கொழ கொழா தான். ஆனால், கரு முக்கியமானது. அவருடைய வலைப்பதிவைப் படிப்பவர்களுக்குப் புதிதாக ஏதும் இருக்காது.
Tagged: seth godin RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
Seth Godin எழுதிய Purple Cow படித்தேன். எல்லா பசுக்களும் வெள்ளையாக இருந்தால் ஊதாப்பூ நிறப் பசுவின் மீதே கவனம் செல்லும். அதே போல், உலகம் முழுக்க ஒரே மாதிரி இருப்பதால் நம்மை, நம் செயல்களை, நாம் விளைவிக்கும் பொருட்களை வியக்கத்தக்கதாக மாற்றிக் கொள்வதே முன்னேற்றத்துக்கு ஒரு வழி என்கிறார். நல்ல கரு. நூற்றுக் கணக்கான எடுத்துக்காட்டுகள் தருகிறார். அதுவே சற்று அலுப்படிக்கவும் செய்கிறது. 120 பக்க நூலை 350 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் சாணித்தாளில் அச்சிட்டிருப்பது ஏமாற்றம்
-
ரவி
Seth Godin எழுதிய Dip படித்தேன். ஒரு முயற்சியை எப்போது கைவிட வேண்டும், எப்போது கைவிடாமல் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார். ஒரு துறையில் உலகிலேயே முதல் ஆளாக இருக்க முடியாவிட்டால் அதை விட்டு விடுவது நல்லது என்கிறார்! நான் வழக்கமாகப் படிக்கும் வாடகை நூலகத்தில் இந்த நூலை வேண்ட, எனக்காகவே இந்த நூலை வாங்கித் தந்தார்கள். நல்ல கடை !
-
விபின்
//நான் வழக்கமாகப் படிக்கும் வாடகை நூலகத்தில் இந்த நூலை வேண்ட//
கோவையில் தானே ரவி ? எந்த கடை என்று சொல்லுங்களேன்.
-
ரவி
R.S.Puram தலைமை அஞ்சலகம் அருகே உள்ள Thiagu Book Centre.
http://www.coimbatoreonline.co.in/yellowpages/detail.php?cat=638
-
விபின்
ஆஹா. தியாகு புக் சென்டராகத்தாத்தான் இருக்கும் என்று நினைத்தேன். நன்றாகவே தெரியும். போய் ரொம்ப நாளாகிவிட்டது. நன்றி ரவி.
-
-
-
-
ரவி
Seth Godin எழுதிய Tribes படித்தேன். 125 பக்கப் புத்தகம் பல நாட்களுக்கு உறங்க விடாமல் சிந்திக்க வைக்கப் போகிறது. கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
சங்கர் கணேஷ் 8:10 pm on January 18, 2010 Permalink |
எங்க வாங்குனீங்க? Online?
ரவி 8:59 pm on January 18, 2010 Permalink |
http://flipkart.com