டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர்.
Tagged: Philosophy RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
bsubra
-
புருனோ
கோழியை கொல்ல அரசு அனுமதி தேவையில்லை
புலியை கொல்லக்க்கூடாது
ஏன் என்று யோசித்தீர்களா
–
அது போல் மாமரத்தை வெட்ட அரசு அனுமதி தேவையில்லை
சந்தன மரத்தை வெட்ட அனுமதி தேவை
-
புருனோ
(விக்கியை) வளர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அந்த பிள்ளையின் நிறமியிலேயே பல குறைகள் இருப்பதால் (அவனது மூத்த சகோதரன் வளர்ந்தவுடன் அந்த குறைகள் வெளிபட்டுவிட்டனவே !!!) கூடவே இன்னொரு பிள்ளையையும் (நால்) வளர்ப்பது அவசியம் என்பது என் கருத்து.
மேலும் ஒரு பிள்ளை கிடைத்தால் அவனையும் வளர்க்க வேண்டும்
–
இங்கு வேண்டாம் குடும்ப கட்டுப்பாடு
-
புருனோ
கண்மருத்துவர் காது மருத்துவம் பார்க்க மாட்டார் என்றால் அந்த ஊருக்கு ஒரு காது மருத்துவர் தேவை என்பதை மறுக்க மாட்டீர்கள்தானே
கண் மருத்துவர் காது மருத்துவம் பார்க்க வில்லை என்ற நிலையில் நம்ம ஊருக்கு புதிதாக வரும் காது மருத்துவரை வரவேற்க வேண்டுமா இல்லையா
-
புருனோ
விக்கியில் முடியாத பல கட்டுரைகளை எழுத நாலில் இடம் உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
-
நால் விக்கியை விடவும் அதிகம் வீச்சு பெற வாய்ப்புள்ளதுவிக்கி என்பது கர்நாடக சங்கீதம் என்றால் நால் என்பது திரையிசை
திரையிசை கர்நாடக சங்கீத்தை replace செய்ததா இல்லையா என்ற கேள்வி வேறு
திரையிசை, கர்நாடக இசை இவற்றில் எதன் வீச்சு அதிகம் என்ற கேள்வி வேறு
-
புருனோ
சட்டை இறுக்கமாக உள்ளது என்று கூற தையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ, குழம்பில் உப்பு அதிகமாக உள்ளது என்று கூற சமையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ அவசியம் கிடையாது
-
புருனோ
தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. (மேலும் விபரங்களுக்கு http://nanopolitan.blogspot.com/2008/08/at-glance-2008-jee-results.html )
-
ரவி
இந்தத் தத்துவத்தை நிறைய பேர் முன்னாடியே சொல்லிட்டாங்க. இதை bruno quote என்ற போட்ட பதிப்புரிமை மீறலை வன்மையாக கண்டிக்கிறேன்
-
ரவி
தமிழ் வலைப்பதிவு அறிவுசீவிகள் யாரும் இதைக் கண்டு கொள்ளவில்லையே ஏன்? இது மாதிரி முன்பு உங்களுக்கு ஒரு கேள்வி வந்தது. அதன் நியாயத்தை இப்போது உணர்கிறேன்!
-
புருனோ
//இது மாதிரி முன்பு உங்களுக்கு ஒரு கேள்வி வந்தது//
இது தானே
http://payanangal.blogspot.com/2008/04/blog-post_06.htmlமாணவர்கள் மீது அதிக கட்டண சுமையை திணிக்க விரும்பாமல் இப்பள்ளி மூடப்படுகிறது. தனியார் பள்ளிகள் கொள்ளை அடிக்கின்றன / மெட்ரிக் பள்ளிகள் அக்கிரமம் என்றெல்லாம் அழும் / எழுதும் பத்திரிகைகளும், ஊடகங்களும், ஒரு சில பதிவர்களும், இது போன்ற நிகழ்வுகள் குறித்து ஏன் வாய் திறக்க வில்லை ??
-
ரவி
ஆமா
-
-
புருனோ
“தீ சுடும் என்பதை தீக்குள் விரலை விட்டுதான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. அடுத்தவன் சூடு பட்டதை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்”
-
புருனோ
எந்த ஒரு கல்லை உடைக்க வேண்டுமென்றாலும் பல அடிகள் தேவை. அந்த கல் நூறாவது (அல்லது ஆயிரமாவது) அடியில் தான் உடையும். ஆனால் முதல் அடி இல்லையென்றால் ஆயிரமாவது அடி வீண் தான்
-
bsubra
முதல் அடி அடித்தது தொண்டர். ஆயிரமாவது வரைக்கும் அடிக்க முடிந்தவர் தலைவர்?
-
bruno
இல்லை பாபா.
நான் தலைவர் – தொண்டர் என்ற வகையில் மட்டும் இதை கூற வில்லை.
இன்று தொலைகாட்சி வந்துள்ளது என்றால் முதல் அடி மார்கோனி தானே
நூறாவது அடி வைத்து மின்மடல் கண்டுபிடித்ததற்கு முதல் அடி கிரகாம் பெல் தானே
-
நான் கூறியது அந்த அர்த்தத்தில் தான்
-
உங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் முதலில் உங்கள் மேசையை சுத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டுமல்லவா -
bsubra
Gotcha
-
ரவி
ஆயிரமாவது அடி வீண் என்று சொல்வதை விட முதல் அடி இல்லாமல் ஆயிரமாவது அடி இல்லை என்று சொல்லலாமோ?
-
bruno
//ஆயிரமாவது அடி வீண் என்று சொல்வதை விட முதல் அடி இல்லாமல் ஆயிரமாவது அடி இல்லை என்று சொல்லலாமோ?//
முதல் அடி இல்லையென்றால் (ஆயிரமாவது அடிதான் முதல் என்றால்) ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூத்தி ஒன்பதாவது அடியில் தான் பலன் கிடைக்கும்
-
ரவி
இப்ப புரியுது
-
bruno
நான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த காலங்களில் ஏதாவது மாற்றம் செய்ய துவங்கினால் உடனடியாக “இதை முடிப்பது சிரமம் என்று கூறுவார்கள்” அல்லது “இந்த வருட நிதி ஒதுக்கீட்டில் இதை முழுவதும் நடத்த முடியாது” என்று கூறுவார்கள்.
ஆனால் நான் அதற்கெல்லாம் அசந்து விட்டு விடுவது இல்லை !!
உதாரணமாக ஓட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதல் வருடத்தில் என்னால் அறுவை அரங்கு மட்டுமே அமைக்க முடிந்தது. மாதம் ஒருமுறை கோவில்பட்டியிலிருந்து கருவிகளை வண்டியில் கொண்டு வந்து தான் அறுவை சிகிச்சை செய்தோம். அடுத்த வருடம் சில கருவிகள் வாங்கினேன் (அரசு நிதி ஓதுக்கீட்டில் தான்).
எனக்கு பிறகு பணியேற்றவர் மீதி கருவிகளை அடுத்த வருடம் வாங்கினார்.
இன்று அங்கு அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.
-
-
bruno
அதே போல் சுகாதார திட்டத்தில் பணி புரிந்த போது (அரசு மருத்துவமனைகள் கணினிமயமாக்கல் திட்டத்தில் பணிபுரிந்தேன்) நச்சு நிரலிகளின் தொல்லையால் லினக்சு பயன் படுத்தலாம் என்று சொன்ன போது பல துறை பிரிவுகளிலிருந்து எதிர்ப்பு வந்தது.
”எங்களுக்கு பழக்கம் இல்லை” என்று கூறினார்கள். (என்னவோ பிறக்கும் பொழுதே இவர்கள் விண்டோசுடன் பிறந்த மாதிரி)
நான் என் கணினியில் மட்டும் லினக்சு (BOSS Linux from CDAC) நிறுவினேன்.
அதை (கணினி செயல்படும் வேகத்தை) பார்த்து மேலும் சிலர் மாற துணிந்தார்கள். ஒரு மாதத்தில் நிதி பிரிவு, கட்டிட பிரிவு தவிர அனைவரும் மாற தயார். உடனடியாக எல்காட் உதவியுடன் சுசி லினக்சு இயங்கு தளம் நிறுவப்பட்டது. (எப்படி ரவி வோர்ட்பிரஸின் கொ.ப.செவோ அதே போல் எல்காட்டின் அப்பொழுதைய நிர்வாக இயக்குனர் திரு.உமா சங்கர் இ.ஆ.ப லினக்சின் கொ.ப.செ)
தற்பொழுது NIC மின் சம்பள கணக்கு மென்பொருளை லினக்சுவில் தருகிறார்கள். நிதி பிரிவும் மாறினார்கள்
கட்டிட பிரிவை தவிர (ஆட்டோகாட் உபயோகிப்பதால்) அனைத்து கணினிகளும் சுசி லினக்சுவில் இயங்குகின்றன. அது கூட வைன் வைத்து சில பார்த்தோம். ஆட்டோகாடின் பழைய பதிப்புகள் வைனுடன் இயங்குகின்றன. புது பதிப்புகள் இயங்குவதில்லை
-
எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இவை இயங்குவதால் அனைவருக்கும் திருப்தி
அதற்கு முன் இங்குள்ள கணினியிலிருந்து பெண்டிரைவை வீட்டில் உள்ள கணனியில் உபயோகித்தால் வரும் “Warning Message”களினால் அனைவரும் நொந்து போயிருந்தனர். லினக்சு அவர்களுக்கு ஒரு புது அனுபவமாக தெரிந்தது – வேகம், பாதியில் தொங்குவதில்லை (Hanging), பெண்டிரைவை போட்டவுடன் அரை மணிநேரம் scanning என்ற இம்சையில்லை
அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்காக வாங்கப்படவுள்ள சுமார் 3000
கணினிகளும் லினக்சு இயங்குதளத்தில் இயங்க சுகாதார சிறப்பு செயலரிடம் அனுமதி பெறுவது எனக்கு எளிதானது.(இதன் மூலம் சுமார் 1.5 கோடி மிச்சம். அந்த பணத்தில் மேலும் 750 கணினிகள் வாங்க மற்றும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் இரு இணைப்புகள் (ஒன்று கம்பி, மற்றொன்று கம்பியில்லா) என்று திட்டமிட்டுள்ளோம்.
-
ரவி
புருனோ, சின்ன வயசில புத்தகம் எழுதுறீங்க, அரசு வேலைகள்ல முன்முயற்சி எடுக்கிறீங்க. உங்கள பார்த்தா வியப்பா இருக்கு. உங்களைப் போல், உமாசங்கரைப் போல் இன்னும் நிறைய பேர் தமிழ்நாட்டுக்குத் தேவை.
**
நீங்க உபுண்டு பயன்படுத்திப் பார்த்து உங்க கருத்து சொல்லுங்க. 256 MB RAM தேவைப்படும். மத்தபடி, விண்டோசு பயனர்களுக்கு எந்த வித குழப்பத்தையும் தராத இலகுவான லினக்சு. நான் WordPressக்கு மட்டும் கொ.ப.செ – னு நினைச்சிடாதீங்க
-
bruno
CDAC BOSS மற்றும் Suse Linux இரண்டுமே அரசு பணியாளர்களுக்கு குழப்பம் தரவில்லை.
அவர்களுக்கு தேவை
1. உலாவி
2. கடிதம் தட்டச்ச ஒரு மென்பொருள்
3. கணக்கு போட ஒரு மென்பொருள்இதற்கு ஓபன் ஆபிசு மற்றும் நெருப்பு நரி போதும் என்பதால் யாருமே கண்டுகொள்வதில்லை.
-
bruno
உபுண்டு பயன்படுத்தி விட்டு கூறுகிறேன்
-
புருனோ
ஒரு செயலை ஆரம்பிக்க நினைத்தில் சிறிய அளவில் தான் துவங்க முடியும் என்ற பட்சத்தில் சிறிய அளவிலாவது துவங்கிவது நலம்.
பெரிதாக, அகலமாகத்தான் துவங்குவேன் என்று அடம் பிடித்து காத்திருக்க தேவையில்லை
அதே போல் பல காரியங்களை துவக்க நமக்கு சந்தர்ப்பம் இருக்கும். நம்மால் முடிக்க இயலாது என்று தெரியும்.
நம்மால் முடிக்க இயலவில்லை / இயலாது என்ற கவலையில் துவங்காமல் இருக்க கூடாது.
நாம் துவக்கியதை வேறு யாராவது முடிப்பார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்
-
புருனோ
-
mayooresan 1:17 am on November 20, 2008 Permalink |
இத கேட்டபின்னரும் யாராவது டொரன்ட் பக்கம் போவானுகளா????
ஆனாலும் நான் போவன்.. அஞ்சா நெஞ்சமாக்கும்
bsubra 10:13 am on November 21, 2008 Permalink |
ரவி 6:38 am on November 24, 2008 Permalink |
நல்ல உவமை