Tagged: malcolm gladwell RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 10:12 pm on April 28, 2010 Permalink | Reply
    Tags: malcolm gladwell, what the dog saw, ,   

    What the Dog Saw படித்தேன். சிந்திக்க வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. தாராளமாகப் படிக்கலாம்.

     
  • ரவி 2:37 pm on April 20, 2010 Permalink | Reply
    Tags: malcolm gladwell, tipping point, , ,   

    Tipping Point படித்தேன். சிறிய மாற்றங்கள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார். எனக்கு ரொம்பப் பிடித்த Broken windows கோட்பாடு பற்றிய எடுத்துக்காட்டும் வருது. ஒரு உளவியல் நூலை இந்த அளவுக்கு விறுவிறுப்பா எழுத முடியுமா? அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

     
    • கார்த்திக் 10:19 am on April 21, 2010 Permalink | Reply

      அவரோட Blink ரொம்ப அருமையா இருந்துச்சு.

    • கார்த்திக் 10:24 am on April 21, 2010 Permalink | Reply

      ஆமா ஒரே நேரத்துல ரெண்டு புக், அதுவும் non-fiction, படிக்க உன்னால மட்டும் எப்பிடி முடியுது?

      நான் இது வர மூணு non-fiction தான் படிச்சுருக்கேன் ;)

      Blink
      Brief History of Time
      Standing on Shoulders of Giants

      • ரவி 10:40 am on April 21, 2010 Permalink | Reply

        கொஞ்சம் வெட்டியா இருக்கேன்னு வைச்சுக்கலாம் :) தூரத்தில் உள்ள வாடகை நூலகத்தில் போய் வாங்கிட்டு வருவதால் ஒரே மூச்சுல 2,3 புத்தகம் எடுத்து ஒரு வாரத்துக்குள்ள திருப்பிக் கொடுக்க வேண்டியதும் ஒரு காரணம். அவரோட புத்தகங்கள் விறுவிறுப்பா இருப்பது இன்னொரு காரணம். வீட்டுல இருக்கிற ஏகப்பட்ட non-fiction நூல்கள் அப்படியே கிடக்கு.

        இப்ப அவரோட Blink, What the dog saw எடுத்து வந்திருக்கேன்.

  • ரவி 2:36 pm on April 20, 2010 Permalink | Reply
    Tags: malcolm gladwell, outliers, ,   

    Outliers படித்தேன். பிறவி மேதைன்னு யாரும் கிடையாது. சரியான வாய்ப்பு கொடுத்தால் எல்லாரும் சாதிக்க முடியும்கிறார். இது தான் இட ஒதுக்கீட்டுத் தத்துவமோ? ஒரு ஆளின் வெற்றிக்கு சமூக, வரலாற்று, புவியிட அமைவும் காரணமாக இருக்கலாம்னு சொல்றாரு. IQ அல்லது தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றில் சிறு வேறுபாடுகள் பொருளற்றவை என்கிறார். கல்லூரி வாழ்க்கை முடித்த எல்லாருக்கும் இது புரியும். படிக்க வேண்டிய புத்தகம்.

     
    • சந்தோஷ் குரு 4:30 pm on May 11, 2010 Permalink | Reply

      எனக்கு இந்த புத்தகத்தில் மிகவும் பிடித்த விஷயம் ”பத்தாயிரம் மணி நேர உழைப்பு” கருத்துதான். புரிந்து கொள்ள மிகவும் சாதாரண விஷயம் தானே இது, ஆனால் எத்தனை முறை “அவன் பெரிய ஆளுடா”, “அவன் ப்ராடஜி” என்று எண்ணி என்னுடைய பலநூறு மணி நேரங்களை சோம்பி தூங்கியிருப்பேன் அல்லது சும்மா இருந்திருப்பேன்.ம்ம்ம்ம்ம்ம்ம்

      • ரவி 9:55 pm on May 11, 2010 Permalink | Reply

        ஆமா மிக எளிய கருத்து தான். புத்தகத்தில் உள்ள கருத்தில் நம் வாழ்க்கையில் நேரடியாக அறிந்த பலருடன் கூட பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால், ரகசியம் தெரிந்த பிறகும் கூட செயற்படுத்துவது இலகு இல்லையே.. இன்றில் இருந்து 10000 மணி நேரம் என்று இலக்கு வைத்தால் கூட மலைக்க வைக்கிறது !!

        • சந்தோஷ் குரு 2:31 am on May 13, 2010 Permalink | Reply

          உண்மைதான். இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடிச்சு மால்கம் க்ளேட்வெல்லோட பெரிய ரசிகனாகிட்டேன். அடுத்தது Tipping Point, Blink, What the Dog Saw மூன்று புத்தகமும் படிக்கபோகிறேன் :-)

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel