Tagged: விதி RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 12:10 pm on November 22, 2009 Permalink | Reply
    Tags: , விதி   

    “ஒரு விதியும் இல்லை” என்பதே அரசியலில் உள்ள ஒரே விதி.

     
  • ரவி 5:39 am on December 3, 2008 Permalink | Reply
    Tags: அஞ்சலி, தியாகம், , , விதி   

    சம்பளம் பெற்று கடமையைச் செய்யும் காவலர்கள், படையினர் தீவிரவாதிகளை எதிர்க்கொண்டு இறந்து தியாகி ஆகிறார்கள். இதற்கு முன் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்களில், இந்தியாவில் பிறந்த ஒரே குற்றத்துக்காக, குப்பைத்தொட்டி அருகிலும் இரயில் குண்டுவெடிப்புகளிலும் இறந்து போன முகமற்ற எண்ணற்றோரின் பெயர் என்ன? படையினருக்கும் தாசு விடுதியில் உயிரிழந்தோருக்கும் வரிந்து கட்டி அஞ்சலி செலுத்துவோர் இதற்கு முன் எங்கே போய் இருந்தனர்?

     
  • புருனோ 11:38 am on July 31, 2008 Permalink | Reply
    Tags: அரங்கநாதன்_தெரு, , தி.நகர், விதி, விதிமீறல்   

    விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ள தி.நகர் அரங்கநாதன் தெருவில் ஒரு சிறு தீவிபத்து ஏற்பட்டால் கூட நடக்கும் அசம்பாவிதங்கள் பயங்கரமாக இருக்கும் (தள்ளுமுள்ளுவிலேயே பலர் பாதிக்கப்படக்கூடும்)

     
  • bsubra 2:09 pm on July 23, 2008 Permalink | Reply
    Tags: Cabinet, , Law, Minister, MP, Polls, எண்ணம், , , மந்திரி, விதி   

    நான் சட்ட அமைச்சரானால்:

    1. மந்திரியாக பதவியேற்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகளாவது லோக் சபா எம்.பி. ஆக இருத்தல் அவசியம்

    2. எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இரு முறைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் இருந்து தேர்தலில் நிற்க முடியாது.

    3. இருபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மந்திரி பதவி/எம்.எல்.ஏ/எம்.பி ஆக இருக்க முடியாது. கட்டாய ஓய்வு தரப்படும்.

    ஆகிய சட்டங்கள் அமலாக்கப்படும்.

     
    • Ramya Ramani 2:20 pm on July 23, 2008 Permalink | Reply

      பள்ளி இறுதி தேர்வு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்

      குண்டர்களாக இருந்திருப்பின் கண்டிப்பாக போட்டியிட இயலாது

      இது ஒத்துவருமா??

    • bsubra 7:04 pm on July 23, 2008 Permalink | Reply

      ‘நான் படிப்பது மனுசனத்தாண்டா’ என்று ரஜினி பாடியதை நம்புபவன் :D CAT/SAT மாதிரி ஏதாவது ‘அரசியல் பால பாடத் தேர்வு’ வைக்கலாம். கொஞ்சம் வரலாறு, இந்திய சட்டம், அரசியல் அமைப்பு குறித்த எளிமையான கேள்விகள் போதுமானது?

      குண்டர்களாக இருந்திருப்பின் கண்டிப்பாக போட்டியிட இயலாது—

      ஒரு கேஸ் உள்ளே போட்டாலே போலீஸ் ஆவதற்கான தகுதி இழப்பது போல் இதுவும் தவறாக பயன்படுத்தப்படலாம்?

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel