Tagged: வாழ்க்கை RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 7:56 pm on November 24, 2008 Permalink | Reply
    Tags: settling, தலைமுறை அழுத்தம், வாழ்க்கை,   

    பணி ஓய்வில் கிடைத்த பணத்தில் வீடு கட்டி “settle” ஆன போன தலைமுறை, திருமணத்துக்கு முன்பே வீடு கட்டி “settle” ஆக வேண்டும் என்று இந்தத் தலைமுறையிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

     
    • mayooresan 5:38 am on November 25, 2008 Permalink | Reply

      ஏதோ பயங்கரமா அவசரப்படுற மாதிரித் தெரியுது.. ஏதோ எல்லாம் நல்லபடியா நடந்தா எங்களுக்கும் சந்தோஷம் தானே ;)

  • ரவி 6:43 am on November 24, 2008 Permalink | Reply
    Tags: , , வாழ்க்கை   

    கணக்குப் போட்டுப் பார்க்காமல், காதலுக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு ஆழமான காதல் வருவதற்கான உச்ச வயது என்னவாக இருக்கும்?

     
    • mayooresan 8:53 am on November 26, 2008 Permalink | Reply

      எதுக்கு மேல் என்று கேட்பது தப்பு. எதுக்கு கீழ் என்று கேட்கவேண்டும்.

      என்னைப் பொறுத்தவரையில் 15 – 18 வயதுக்குளதான் அப்படியான எதையும் எதிர்பார்க்காத மூர்க்கமான காதல்.

    • ரவி 11:38 pm on November 27, 2008 Permalink | Reply

      //15 – 18 வயதுக்குளதான் அப்படியான எதையும் எதிர்பார்க்காத மூர்க்கமான காதல்.//

      இதில் தீவிரம் இருக்கும். ஆனால், பக்குவம்?

      //எதுக்கு மேல் என்று கேட்பது தப்பு. எதுக்கு கீழ் என்று கேட்கவேண்டும்.//

      உச்சபட்ச வயது என்பது எதற்கு கீழ் என்று கேட்பது தான் :) உங்க விடைப்படி அப்ப 18க்கு கீழ் தான் :( கொஞ்சம் உயர்த்தி கல்லூரிக் காலம் முடியும் வரை எனச் சொல்லலாமா? அதற்கு மேல் “இது நமக்கு ஒத்து வருமா” என்று matureஆ !!! யோசித்துப் “பழகிப் பார்ப்பதைத்” தான் அதிகம் காண இயல்கிறது.

  • ரவி 7:56 pm on October 25, 2008 Permalink | Reply
    Tags: , வாழ்க்கை   

    தமிழக வாழ்க்கைக்கான குறிச்சொற்கள் / அடிக்கடி பயன்படும் சொற்கள்: மழை, கொசு, வெயில், போக்குவரத்து நெரிசல், குடும்பம், நண்பர்கள், மின்வெட்டு, இல்லை, sir, madam, தொலைக்காட்சி, திரைப்படம், நூல்கள், விலைவாசி

     
  • bsubra 8:44 pm on August 4, 2008 Permalink | Reply
    Tags: இறப்பு, , , , , , மரணம், , வாழ்க்கை   

    பா ராகவன் :: யுவர்ஸ் ஒபீடியன்ட்லி

    இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது

    (குதிரைகளின் கதை தொகுப்பு)

     
  • bsubra 8:31 pm on August 4, 2008 Permalink | Reply
    Tags: , , , , , , , வாழ்க்கை   

    பா ராகவன் :: மூன்று காதல்கள்

    அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள்.

    (குதிரைகளின் கதை தொகுப்பு)

     
  • ரவி 6:38 am on July 31, 2008 Permalink | Reply
    Tags: நலம், வலைப்பதிவுகள், வாழ்க்கை   

    அக்கா : ” சாப்பிட்டியா, தூங்கினியா, வெளிய போனியா, உடம்பு நல்லா இருக்கா, வலைப்பதிவுல மறுமொழி வந்ததா?” !!!!

     
  • ரவி 6:37 am on July 31, 2008 Permalink | Reply
    Tags: உடல் நலம், சாவு, நோய், முதுமை, வாழ்க்கை   

    2 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக “தனக்கு சாவு வராதா” என்று இருக்கும் முதியவரின் உடல் நிலை மிகவும் மோசமாகி வருகிறது என்பது நல்ல செய்தியா கெட்ட செய்தியா?

     
  • ரவி 7:54 am on July 17, 2008 Permalink | Reply
    Tags: ஊடகத் தாக்கம், வாழ்க்கை   

    ஊடகங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் இல்லாமல் ஒரு நாள் ‘வாழ்ந்து’ பார்க்க வேண்டும். ரொம்பவே மூளையை மழுங்கச் செய்கின்றன :(

     
  • ரவி 7:13 am on July 15, 2008 Permalink | Reply
    Tags: உறவுகள், குடும்பம், , மனிதர்கள், வாழ்க்கை, வெளிநாட்டு வேலை   

    ஒரு கோடி + சொத்து. 17 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை. வேலையை விட்டு ஊருக்குத் திரும்பினால் இரண்டு பையன்களுடன் தானும் தற்கொலை செய்து கொள்வதாக மனைவி மிரட்டுகிறார்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel