Tagged: வாழ்க்கை RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 10:07 pm on August 18, 2011 Permalink | Reply
    Tags: , வரதட்சணை, வாழ்க்கை   

    நண்பன் 1, 2: தங்கள் வசதிக்கு மீறிய இடத்தில் தங்கள் அக்காவைத் திருமணம் செய்து வைத்ததால் ஆன செலவுக்குப் பல ஆண்டுகளுக்கு மீளா வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    நண்பன் 3: பொறியியல் பட்டப்படிப்பு முடித்த தங்கை, 50 பவுன் நகை போட்டு கட்டிக் கொடுத்தால் மட்டுமே தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கறாராக சொல்லி விட்டதால், பல இலட்சம் கடன் வாங்கி நகை சேர்த்துக் கொண்டிருக்கிறான். தங்கையின் திருமணத்துக்கு 15 இலட்சம் செலவு ஆகும் என்றால், அதற்குப் பிறகு இவன் எப்போது திருமணம் செய்வது?

    குடும்பச் சொத்து ஏதாவது இருந்தால், அதற்கு உரிய தொகையை பெண்ணுக்குச் சீதனமாகத் தருவது புரிந்து கொள்ளத் தக்கது. ஆனால், வசதிக்கு மீறிய இடத்தில் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதும், பெண்களே கூடப் பிறந்தவன் தனக்குச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதும் என்ன நியாயமோ?

     
  • ரவி 7:55 pm on August 10, 2011 Permalink | Reply
    Tags: 30 நாட்கள், , , பழக்கம், வாழ்க்கை   

    தொடர்ந்து 30 நாட்கள் ஒரு விசயத்தை விடாது செய்தால், புதிய பழக்கத்தை உருவாக்கலாம் என்கிறார்கள். Matt Cutts இது போல் செய்து பார்க்கும் பிரபலங்களில் ஒருவர்.

    சரி, நாமும் ஒரு 30 நாட்கள் அரிசி சோறு சாப்பிடாமல், எடையைக் குறைப்போம் – வயிற்றைக் காப்போம் என்று 15 நாட்கள் தாக்குப் பிடித்தேன். அதற்கு மேல் முடியவில்லை :( அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    • 30 நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்வது.
    • 30 நாட்கள் தொடர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கு என ஒரு மணி நேரமாவது ஒதுக்குவது.

    நாளையில் இருந்து தொடங்கவா? :)

     
    • Hari 2:12 pm on August 11, 2011 Permalink | Reply

      For exercise u need atleast 3 months to make it consistent and yield visible results.

      • ரவி 3:44 pm on August 11, 2011 Permalink | Reply

        Can i forget your jogging in Anna University grounds :)

        First let me try the first month :)

    • ரவி 7:44 pm on September 3, 2011 Permalink | Reply

      உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போவதுடன் புதிதாகச் சில நூல்களையும் படிக்கத் தொடங்கி உள்ளேன். ஒரு நாள் கூட விடாமல் தொடர்ச்சியாகச் செய்யும் பழக்கம் இன்னும் வரவில்லை. இருந்தாலும் நல்ல மாற்றம் தான் :)

  • ரவி 8:42 pm on October 31, 2009 Permalink | Reply
    Tags: இல்வாழ்க்கை, , குடி, குடிப்பழக்கம், வாழ்க்கை   

    மாலை நடைக்குச் செல்லும் போது, சுமை தாங்கிய ஒரு பெண் என்னைக் கடந்து சென்றாள். ஒரு தெருவோர ஆஞ்சநேயர் கோயிலைக் கண்டு அவள் வாய் விட்டு வேண்டியது: “ஆண்டவா, என் புருசன் தினம் குடிச்சு கொடுமைப்படுத்துறான். நாளைக்காச்சும் அவனைக் கொன்னுடு” !

     
    • கலை 3:20 am on November 1, 2009 Permalink | Reply

      :( எவ்வளவு மனம் சங்கடப்பட்டிருந்தால், அந்தப் பெண் அப்படி வாய்விட்டு அரற்றியிருப்பாள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

    • செந்தழல் ரவி 5:20 pm on March 4, 2010 Permalink | Reply

      நல்லாருக்கு

  • ரவி 9:39 pm on October 26, 2009 Permalink | Reply
    Tags: , , வாழ்க்கை, விழுமியம்   

    பள்ளி வாழ்க்கை மதிப்பெண்களைச் சுற்றி. பள்ளிக்குப் பிறகான வாழ்க்கை பண (எண்ணிக்கையைச்) சுற்றி !

     
  • புருனோ 4:06 pm on August 27, 2009 Permalink | Reply
    Tags: , சாணி, , ராணி, வாழ்க்கை   

    http://muralikkannan.blogspot.com/2009/08/blog-post_27.html

    ராணி மாதிரி வாழணும்னு கனவு கண்டேன். சாணி மாதிரி என்னைய ஆக்கிட்டியேன்னு வீட்டுக்காரி தெனமும் வார்த்தையாலே கொல்லுறா.

     
  • புருனோ 4:03 pm on August 27, 2009 Permalink | Reply
    Tags: , அறிவுரை, , சந்தோஷம், துக்கம், துன்பம், நீரோடை, வாழ்க்கை   

    http://muralikkannan.blogspot.com/2009/08/blog-post_27.html

    // இப்படி சின்ன சின்ன சந்தோஷத்திலேயே கவனம் செலுத்திக்கிட்டு இருந்தா பத்து வருஷம் கழிச்சு நாம பெரிய பெரிய கவலையோடயே இருக்க வேண்டி வரும். சொசைட்டியில இருந்து அவ்வளோ பின்தங்கிப் போயிருவோம். வயசு ஆகுறதுக்குள்ள சீக்கிரமா செட்டில் ஆகப் பாரு.//

     
  • ரவி 10:49 pm on January 14, 2009 Permalink | Reply
    Tags: , , மணி, வழி, வாழ்க்கை   

    ஒவ்வொருவரு நாளும் யாராவது இருவர் என்னிடம் நேரம் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் வழி கேட்கிறேன்.

     
  • ரவி 10:47 pm on December 4, 2008 Permalink | Reply
    Tags: இணைய நட்பு, , , வாழ்க்கை   

    இணையத்தில் கிடைத்த நண்பர்களைப் பார்க்கப் போறேன்னா வீட்டுல ஏன் மேலயும் கீழயும் பார்க்குறாங்க :) ?

     
    • புருனோ 8:33 am on December 5, 2008 Permalink | Reply

      நீங்க மொட்டையா வளர்மதி, அதிஷா, பாலபாரதி என்று பெயர் கூறியிருப்பீர்கள் :) ;)

    • ரவி 12:35 am on December 9, 2008 Permalink | Reply

      :)

  • ரவி 5:30 am on December 3, 2008 Permalink | Reply
    Tags: , , வாழ்க்கை   

    பிறர் நம் மேல் வைத்திருக்கும் அன்பை அளப்பது / அறிவது எப்படி? அளக்க இயலுமா?

     
    • Nirmala 4:24 am on December 24, 2008 Permalink | Reply

      According to me, the right time to measure someone’s love is when you are down due to some problem.

      Also, during such situation, one who really loves you acts this way,

      1. They take the position of you and think on behalf of you.
      2. They get hurt when they see that you are hurt (Vice versa also applicable)

      True love cannot be measured most of the time, it can only be felt.

    • ரவி 6:06 am on December 24, 2008 Permalink | Reply

      //True love cannot be measured most of the time, it can only be felt.//

      ம்ம்

  • ரவி 10:18 pm on November 27, 2008 Permalink | Reply
    Tags: வாழ்க்கை   

    நண்பர்கள் எதைச் சொன்னாலும், “இதை எல்லாம் வலைப்பதிவுல எழுதீடாதடா” என்று சேர்த்துச் சொல்லியே வதைக்கிறார்கள் :( அட.. இதையும் எழுதித் தொலைக்கிறேனே ! எழுத்தாளரின் வாழ்க்கையில் இதெல்லாம் சகசமப்பா :)

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel