Tagged: வலைப்பதிவர்கள் RSS

  • புருனோ 5:36 am on February 5, 2010 Permalink | Reply
    Tags: , , , , , வலைப்பதிவர்கள்,   

    சமீபத்தில் ஒரு பதிவரின் திரைப்படம் குறித்து எழுதியிருந்த இடுகை பிடித்திருந்ததால் “நல்ல நடை. சொல்ல வந்ததை தெளிவாக கூறியுள்ளீர்கள்” என்று மறுமொழி எழுதினேன்.

    அடுத்த சில நிமிடங்களிலேயே, மற்றொரு பதிவர் என்னை தொலைபேசியில் அழைத்து “ஏன் பாராட்டுகிறீர்கள். நீங்கள் எல்லாம் பாராட்டினால் அவன் பந்தா தாங்காது. இதெல்லாம் ஒரு எழுத்தா” என்ற ரீதியில் தாக்க ஆரம்பித்து விட்டார். “ஐயா சாமி, எனக்கு பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்று கூறுவேன்; பிடிக்க வில்லை என்றாலோ அல்லது அதில் எதாவது கருத்தில் எனக்கு முரண்பாடு என்றாலோ அதை கூறுவேன். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் மறுமொழியில் கூறுங்கள்” என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது

     
    • ரவி 1:21 pm on February 5, 2010 Permalink | Reply

      என்ன கொடுமை இது? ஒரு வகையில் விருதுகள், இந்த வாரப் பதிவர் போன்ற விசயங்கள் வலையுலகில் அரசியல் புக காரணமாயிருக்கின்றன.. வலைப்பதிவுலகையும் (சிறு) பத்திரிக்கை உலகு மாதிரி ஆக்கிடுவாங்களோ..

  • ரவி 1:03 pm on July 25, 2008 Permalink | Reply
    Tags: வலைப்பதிவர்கள்   

    சில பதிவர்கள் வேற வேற பேரில பல இடங்கள்ல எழுதுற மாதிரி ஒரே மன whiskyயா இருக்கு ! இல்ல பலரின் சிந்தனை, ரசனை, எழுத்து நடை ஒரே மாதிரி இருக்கா?

     
    • bruno 10:02 am on July 31, 2008 Permalink | Reply

      யாரைச்சொல்கிறீர்கள்.

      ??

      திடீரென்று காணாமல் போகும் பதிவர்கள் ஒரு வேளை வேறு பெயரில் எழுதலாம்

    • ரவி 11:37 am on July 31, 2008 Permalink | Reply

      அய்.. பெயரைச் சொன்னா நாங்க மாட்டிக்குவமில்ல ;)

    • bsubra 5:39 pm on July 31, 2008 Permalink | Reply

      மண்ட வெடிச்சுடும் போல இருக்கே… துப்பு துப்புங்க :D

  • ரவி 3:51 pm on July 17, 2008 Permalink | Reply
    Tags: வலைப்பதிவர்கள்   

    அடையாளம் காட்டாத, மறுமொழிப் பெட்டியை மூடி வைத்துவிட்டு எழுதும் வலைப்பதிவர்கள் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். கூடுதல் சுதந்திரமாக உணர்வார்களோ?

     
    • புருனோ 6:38 am on August 5, 2008 Permalink | Reply

      அடையாளம் காட்டது வேறு – இதில் பல சிக்கல்கள் இருக்கலாம். உதாரணம் – அலுவலக கட்டுப்பாடு. ஊடகத்துறையில் இருக்கும் பல பதிவர்கள் தங்களின் நிர்வாகத்திற்கு பயந்தே அடையாளம் காட்டாமல் எழுதுகிறார்கள்

    • புருனோ 6:41 am on August 5, 2008 Permalink | Reply

      ஆனால் மறுமொழியை மூடிவைப்பது என்பது அவர்கள் எழுதும் கருத்து மேல் அவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது

    • ரவி 7:58 am on August 5, 2008 Permalink | Reply

      புருனோ, மறுமொழியைப் பெட்டியை மூடுவதும் அடையாளம் காட்டாததும் அவரவர் விருப்பம். அடையாளமிலிகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், நல்லா எழுதுறவங்க தங்க படம் எல்லாம் பெரிசா போட்டு தங்களை பெரிய எழுத்தாளர்களா நிறுவ முயலுகையில், அவர்களின் உந்துதல் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.

      தன்னுடைய உணர்வுகள், கருத்துகளை ஒரு இடத்தில் பதிந்து வைத்தால் போதுமே? வருகிற மறுமொழிகளை ஒழுங்குபடுத்தி ஒரே இடத்தில் பதில் அளிப்பது நேரம் எடுக்கும் வேலை. பொறுமை, நேரம் இல்லாதவர்கள் பெட்டியை மூடுவதில் தவறில்லை.

      ஆங்கில வலைப்பதிவுகளில் இடுகை ஒரு பக்கம் friendfeed, disqus என்று மறுமொழிகள் இன்னொரு பக்கம் என்றும் சிதறி வருகின்றன. இடுகையைத் துவங்குபவர் ஒரு விவாதப் பொருளுக்கான முதல் அடியை வைக்கிறார். அடுத்தடுத்த விவாதங்களும் அவரது முன்னிலை, ஒப்புதலுடனே நடக்க வேண்டும் என்றில்லை. வலுவான இன்னொரு விவாதக் களம் இருந்தால், அவரே அங்கு வருகை தந்து பதிலளிக்க வேண்டிய நிலையும் வரும்.

      நிகழ் வாழ்க்கையிலும் கூட எல்லா படைப்புகளையும் படைப்பாளி முன்னேவா விமர்சிக்கிறோம்? படம் பார்த்து விட்டு வீட்டில், தெருவில், கல்லூரியில் தானே விமர்சிக்கிறோம். nature is distributed by design :)

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel