வம்சம் பார்த்தேன். துணிச்சலான சோதனை முயற்சி. இன்னும் நேர்த்தியாகச் செய்திருந்தால் இன்னொரு தேவர் மகனோ உதிரிப்பூக்களோ கிடைத்திருக்கும். படம் சில இடங்களில் ஆவணப்படம் போலவும் தொலைக்காட்சித் தொடர் போலவும் பள்ளிக்கூட நாடகம் போலவும் கட்டு இழப்பது தான் பெரிய குறை. இந்த அளவுக்கு ஒரு மாவட்டத்து மண்ணையும் மக்களையும் பழக்கவழக்கங்களையும் விரிவாக பதிவு செய்த தமிழ்ப் படங்கள் குறைவு. நான் வளர்ந்த புதுக்கோட்டை மாவட்டம் என்பதால் இன்னும் ஈடுபாட்டோடு பார்க்க முடிகிறது. ஒரு முறை பார்க்கலாம். இயக்குநர் பாண்டிராசு “ஒரு பட அதிசயமாக” இல்லாமல் அடுத்த படத்தை இன்னும் நேர்த்தியாகத் தர வேண்டும்.