Tagged: வன்முறை RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 8:40 pm on October 31, 2009 Permalink | Reply
    Tags: , குழந்தைமை, தணிக்கை, , , வன்முறை   

    அக்கா மகன் பேராண்மை படம் பார்த்தான். அதில் வரும் காட்டு யானையைக் கண்டு பயப்படுகிறான். ஆனால், கொத்துக் கொத்தாக ஆட்களைக் கொல்வதை பயம் இல்லாமல் ரசித்துப் பார்க்கிறான் :( பாதிப்படத்தில் அக்காவைக் கடிந்து படத்தை நிறுத்தினேன். வீட்டுக்கு வீடு திருட்டு வட்டுகள் வந்த பிறகு தணிக்கையில் தரும் சான்றிதழ்களுக்கு என்ன பயன்?

     
    • கலை 3:22 am on November 1, 2009 Permalink | Reply

      :( . கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவது ஒருவேளை, யானையைப் பார்ப்பதை விட வெகு சாதாரணமாகி விட்டதுபோல இருக்கு :( .

  • anbudan_bala 1:14 am on December 14, 2008 Permalink | Reply
    Tags: , மனித உரிமை, வன்முறை   

    காதலிக்க மறுத்த மாணவி மற்றும் அவளது தோழியின் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்று விட்டனர். இதே போல் (பெண்கள் மீது ஆசிட் வீசறதை சொல்றேன், போலீஸ் சுடறதைப் பத்தி இல்ல!!!) ஆந்திராவிலேயே பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிட வேண்டியது.

    என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் அவர்களை சுட்டுக் கொண்றிருக்கலாம் என்று சில போலி ‘மனித உரிமை’ காப்பாளர்கள் கூவினாலும், இவ்வாலிபர்களைப் போன்ற ஆணாதிக்க அரக்கர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும் என்று தோன்றுகிறது.

    “பெண்கள் மீது வன்முறையை பிரயோகித்தால் உனக்கு சாவு தான்” என்ற மெஸேஜ் இந்த ஆணாதிக்க சமுதாயத்தை சென்றடைய இது போன்ற instant தண்டனை தேவை தான், ஒரு சில நாதாறிகள் “Law of the Jungle”, “Human Rights Violation” என்று கூப்பாடு போட்டாலும் !!!

     
    • அரவிந்தன் 3:27 am on December 14, 2008 Permalink | Reply

      //ஒரு சில நாதாறிகள் “Law of the Jungle”, “Human Rights Violation” என்று கூப்பாடு போட்டாலும் !!!//

      இந்த தளத்தின் தலைப்பு போலவே மேற்ச்சொன்ன வரிகள்..

      உங்களிடமிருந்து இப்படி ஆத்திரத்தில் அள்ளித்தெளித்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை

    • anbudan_bala 8:52 am on December 14, 2008 Permalink | Reply

      //உங்களிடமிருந்து இப்படி ஆத்திரத்தில் அள்ளித்தெளித்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை
      //
      It is because of their ‘History’ that such strong words were used by me. These so called activists and liberals value terrorists and criminals’ lives more than the victims’ lives. One can understand the true pain only if he/she is the victim, I think !

    • ரவி 6:13 am on December 15, 2008 Permalink | Reply

      இயற்கையே தானாய் தண்டிப்பதைத் தானே poetic justiceனு சொல்ல முடியும்?

    • செல்வா 7:53 am on December 15, 2008 Permalink | Reply

      ‘பாலா உங்கள் வெஞ்சினம் புரிகின்றது, நேர்மையானது. ஆனால் உங்களிடம் வேறு ஒரு தலைப்பில் ஒரு கேள்வி:

      //“பெண்கள் மீது வன்முறையை பிரயோகித்தால் உனக்கு சாவு தான்” என்ற மெஸேஜ் இந்த ஆணாதிக்க சமுதாயத்தை சென்றடைய இது போன்ற instant தண்டனை தேவை தான், ஒரு சில நாதாறிகள் “Law of the Jungle”, “Human Rights Violation” என்று கூப்பாடு போட்டாலும் !!!//

      “பெண்கள் மீது வன்முறையாக நடந்து கொண்டால் உனக்கு சாவுதான் என்ற செய்தி ஆணாதிக்க சமுதாயத்தை சென்றடைய இதுபோன்று உடனே விழும் தண்டனை தேவைதான்..”

      என்பதுபோல எழுதலாமே.. ஏன் இந்த “மெஸேஜ்” , “வன்முறையை பிரயோகித்தல்” போன்ற மிக செயற்கையான சொல்லாட்சிகள்? வன்முறையை பிரயோகித்தல் என்பதைவிட வன்முறையாக நடந்துகொள்ளுதல், வன்முறையைக் கையாளுதல் என்று இயல்பாய் பலவாறு சொல்லலாமே. இவை நட்புடன் உங்களுக்கு தெரிவிக்கும் கருத்துதான். எண்ணிப்பார்க்கத்தான் கட்டாயம் ஏற்க அல்ல. இது என்ன ஒரு குட்டி எண்ணப் பதிவுதானே என நினைக்கலாம், இப்படித்தான் சிறுகச்சிறுக நாம் நம் மொழியையும் நம் பண்பாட்டையும் இழந்துவருகின்றோம். நன்றி

    • அன்புடன் பாலா 10:06 am on December 16, 2008 Permalink | Reply

      செல்வா,
      நீங்கள் கூறியது புரிகிறது. ஏற்றுக் கொள்கிறேன். வெஞ்சினத்தினால் கொஞ்சம் செயற்கைத்தனம் ஏற்பட்டிருக்கலாம் !!!

    • அன்புடன் பாலா 10:08 am on December 16, 2008 Permalink | Reply

      ரவி,
      இயற்கை போலீஸை கருவியாக பயன்படுத்தி அந்தப் பதர்களுக்கு தண்டனை வழங்கியதாகவும் எடுத்துக் கொள்ளலாம் !!!

    • புருனோ 12:27 pm on December 16, 2008 Permalink | Reply

      பதர்கள் என்பது சரி

      ஆனால் தண்டனை சரியா என்று தெரியவில்லை

    • ரவி 4:29 am on December 17, 2008 Permalink | Reply

      //இயற்கை போலீஸை கருவியாக பயன்படுத்தி அந்தப் பதர்களுக்கு தண்டனை வழங்கியதாகவும் எடுத்துக் கொள்ளலாம் !!!//

      :)

      இதை உறவினர்கள் அமர்த்திய அடியாட்களுக்குப் பதில் சமூகம் அமர்த்திய காவலர்களைக் கொண்டு பழிக்குப் பழி (அல்லது அதற்கும் மேல்) வாங்கியதாகவே பார்க்க இயலும்.

      குற்றவாளிகள் தாங்களாகவே எங்காவது தடுக்கி அமிலத் தொட்டியில் விழுந்திருந்தாலோ இயற்கையான (!) சாலை விபத்தில் மாட்டி இருந்தாலோ கவித்துவ நீதி என நினைக்கலாம்.

      குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனை எது, தரும் வழிமுறை யாது என்பது விவாதத்துக்குரியது. ஆனால், போட்டுத் தள்ளுவதை எல்லாம் கவித்துவ நீதி என்று பார்க்கத் தொடங்கினால் விபரீதமாகத் தான் போய் முடியும். ஐயத்துக்கு உட்பட்ட வகையில் காவலர்கள் குற்றவாளிகளைக் கொல்லுவதும் குற்றமே. கவித்துவ நீதி என்ற பெயரில் அதைப் புனிதப்படுத்தத் தேவையில்லை.

    • அன்புடன் பாலா 8:41 am on December 19, 2008 Permalink | Reply

      //கவித்துவ நீதி என்ற பெயரில் அதைப் புனிதப்படுத்தத் தேவையில்லை.
      //
      புனிதப் படுத்தவில்லை! அப்படிக் கூறி தண்டனை நியாயமானது / அவசியமானது (சில நேரங்களில்) என்று என்னைப் போன்றோர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை சமூகத்தில் நிலவுகிறதே :(

  • ரவி 11:55 pm on November 25, 2008 Permalink | Reply
    Tags: , , வன்முறை   

    இந்தக் காலத்து ஆண் குழந்தைகள் நிறைய வன்முறை விரும்பிகளாக இருப்பது ஏன்? ஊடகம்? கூட்டுக் குடும்பங்கள் குறைவு? நகர்மயமாதல்? நுகர்வுப் பண்பாடு?

     
    • mayooresan 8:35 am on November 26, 2008 Permalink | Reply

      சிறுவர் மீதான அழுத்தம் இப்போது அதிகம். அந்தக் காலத்தில் சிறுவர் சிறிது படித்து நிறைய நேரம் பொழுதை இயறகையுடனும் பாட்டி பாட்டன் போன்ற உறவினருடனும் கழித்தனர். ஆனால் இன்று எந்த நேரம் பார்த்தாலும் கல்வி, வகுப்பு அது இது என்று ஓயாமல் சிறுவர்களை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றார்கள்.

      அழுத்த சக்தி ஒரு நாள் இயக்க சக்தியாக மாறுவது விஞ்ஞானத்தில் சரி என்றால் சிறுவனில் பிழையாக வாய்ப்பில்லை தானே?

    • புருனோ 5:19 am on November 28, 2008 Permalink | Reply

      //? ஊடகம்? கூட்டுக் குடும்பங்கள் குறைவு? நகர்மயமாதல்? நுகர்வுப் பண்பாடு?//

      அனைத்தும்

  • ulagam 3:00 am on November 14, 2008 Permalink | Reply
    Tags: , காவல், வன்முறை   

    நெஞ்சு பொருக்கு தில்லையே –இந்த
    நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்,
    மேல் சாதி, கீழ் சாதி என்பார் –இதை
    மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;

    கொஞ்ச நேரமா அடித்தார்கள்? –ஒரு
    நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
    சாதிவெறி பிடித்த மாணவர்களே –நீங்கள்
    நாளைய இந்தியாவின் தலைவர்களா
    இல்லை தலைவலிகளா? –இதை
    நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!

    மேலும் படிக்க http://balachandar.net/blog305-2008-11-14.html

     
    • Anonymous 12:18 pm on November 14, 2008 Permalink | Reply

      பொறுக்குதில்லையே…

  • புருனோ 10:44 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , , , , , வன்முறை,   

    கடந்த பத்தாண்டுகளாக ஏழை பணக்காரன் இடைவெளி அதிகரித்துள்ளதா, அல்லது குறைந்துள்ளதா

    விளக்க முடியுமா

     
  • புருனோ 10:43 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , , , , , வன்முறை,   

    ஒரு அரசன் நிஜத்தில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வராத இறைவன் ஒரு ஏழை மனதில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு செல்வதாக கூறும் கதையின் உளவியல் என்ன

    விவிலியத்தில் புனித மத்தேயுவின் தொழில் வரி வசூலிப்பது. (கஞ்சா கடத்துவதோ கிரிலை உடைத்து திருடுவதோ அல்ல). அரசு உத்தியோகம் தான். ஆனால் அந்த தொழிலின் நிலையைப்பாருங்கள்

    Matthew was a tax-collector, a profession that was despised in Palestine at that time.

    Many of them collected as much money as they could in any way that they could in order to become rich very quickly.

    Tax-collectors were considered to be so dishonest that they could not testify in courts of law.

    When Jesus called Matthew to follow him, he may have been calling Matthew back to his roots, to a knowledge of a better way of life that became better and better for him as he followed Jesus.

    The Pharisees disliked the fact that Jesus would eat with anyone, especially tax collectors.

    Perhaps the many stories of banquets to which no one came in the book of Matthew reflected the tax collectors’ lives. They were wealthy people who could give large, elaborate dinner parties, but anyone who thought he was respected in the community would refuse to come.

    பணம் வேறு, நாணயம் வேறு என்றூ நீண்ட காலமாகவே கட்டமைக்கப்பட்டு, ஏழையாக இருப்பவன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை ”அமுக்கப்பட்டு” ஏழைகள் தான் கடவுளின் குழந்தைகள் என்று மதங்கள் கூட கூறியது ஏன் ??

    அன்று கலிலியோவில் வரி வசூலிப்பவர்களை சமுகம் எப்படி பார்த்ததோ, அதன் பின்னர் அரசு ஊழியர்களை எப்படி பார்த்ததோ, இன்று மென்பொருள் நிறுவன ஊழியர்களையும் பாடுபட்டு காசு சம்பாதிக்கும் சுய தொழில் முனைவோரையும் அப்படி தான் பார்க்கிறது

     
  • புருனோ 10:42 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , , , , , வன்முறை,   

    பணத்தை நோக்கி மக்களின் கவனம் திரும்ப கூடாது என்பதற்காக பல கதைகள் / அறிவுரைகள் கூறப்பட்டன

    அவற்றில் முக்கியமானவை

    1. பணத்தால் மருந்து வாங்கலாம். உடல் நலனை வாங்க முடியாது

    2. பணக்காரன் நிம்மதியாக தூங்குவதில்லை. ஏழை மகிழ்ச்சியாக இருக்கிறான்

    இது போன்ற கட்டமைப்பின் விளைவுகளையே நாம் இன்று காண்கிறோம்

    தன்னுடன் பள்ளியில் படித்த வகுப்பு தோழன் இன்று குளிர்சாதன் வகுப்பில் பயணம் செய்யும் போது தான் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய வேண்டியுள்ளதே என்ற கடுப்பு பரவியுள்ளதால் தான் கற்றது தமிழ், சிலந்தி என்று திரைப்படங்கள் வருகின்றன

     
  • புருனோ 10:42 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , , , , , வன்முறை,   

    பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே

    1. கடவுள் ஏழைகளை விரும்புகிறார் என்று கூறி அவர்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள்

    2. பணம் வைத்திருப்பது பாவம் என்று கூறி அவர்களை சம்பாதிக்கவே விடவில்லை

    3. பணம் இருந்தாலும் பக்திதான் பெரிது. எனவே நீங்கள் ஏழை என்றால் கடவுள் உங்களைத்தான் முதலில் கவனிப்பார். அதனால் கவலைப்படாதீர்கள் என்பது நமது மதங்கள் நமக்கு சொல்லும் பாடம்

     
  • புருனோ 10:41 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , , , , , , வன்முறை,   

    கடவுள் ஏழைகளை விரும்புகிறார் என்று கூறி கூறி அவர்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள்

    இது mass psychology தான்.

    நேர்மறை சிந்தனையை விட எதிர்மறை சிந்தனையே அதிகம் கவனம் பெறுவதற்கு காரணம் நம் ஊடகங்களே

    இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் ஏன் பா.ஜ.கவிற்கு எதிரானது என்று ஆராய்ந்தால் கிடைக்கும் பதில்கள் சுவாரசியமானவை

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel