அறிமுகமில்லாத இருவர் உரையாடிக் கொண்டிருக்கும் அபத்தமாக நுழைந்து ஏதோ பேசுவது, அசட்டுத்தனமாக சிரிப்பது, தாழ்வுணர்ச்சியுடன் செயல்படுவது என்று ஒரு சராசரி இந்தியக் குணத்தை இவர் இயல்பாக வெளிப்படுத்தினாலும் நமக்குத்தான் சங்கடமாக இருக்கிறது.
Tagged: மேற்கோள் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
bsubra
-
bsubra
மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:
“புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.
பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).
உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா.
அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”
-
ரவி
புலிகள் இயக்கத்தினர் போலீசாரிடம் பிடிபடும்போது, தமிழகத்திற்கு கெடுதல் செய்யக் கூடாது என்ற உத்தரவு எங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், எங்கள் இயக்கத்தினர் போலீசாரிடம் பிடிபட்டால், போலீசாருக்கு ஒத்துழைப்பு தருவோம்.
-
bsubra
பா ராகவன் :: யுவர்ஸ் ஒபீடியன்ட்லி
இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது
(குதிரைகளின் கதை தொகுப்பு)
-
bsubra
பா ராகவன் :: மூன்று காதல்கள்
அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள்.
(குதிரைகளின் கதை தொகுப்பு)
-
bsubra
இரண்டே அறைகள் கொண்ட வீடு :: யுவன் சந்திரசேகர்
தற்காலத் தமிழிலக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கும் புதிய போக்குகள், எழுத்தாளர்களெல்லாம் பத்தியாளர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் ரசவாதம், கவிதைகளில் பெரும் தேக்கம் வந்து சேர்ந்திருப்பது, புத்தகங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரசுரமாவதும் அவற்றைப் பற்றி மிகையான கூறுகளில் விளம்பரங்களும் மதிப்புரைகளும் வெளியாகி, அப்பாவி வாசகனைக் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும், ஜனநாயகமயமாகும் எல்லாத்துறையிலும் இயல்பாகவே பதர்கள் அதிகரித்துவிடுவது என்று அலைந்து கொண்டிருந்தது பேச்சு.
இசைத்துறையும் விதிவிலக்கில்லை என்றும் சாஸ்திரிய சங்கீதமும் திரைப்பட பாடல்களும் கூட இந்த ஸ்திதிக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தோம்.
(வார்த்தை – ஜூன் 2008)
-
bsubra
பா.ரா. ஆயில் ரேகையில் இருந்து… “புத்திசாலி நவீன இலக்கியவாதிகள் தமிழ் சினிமாவுக்கு டயலாக் எழுதப் போகும்போது ஒரு மாதிரி பட்டும் படாமலும் ஸ்டேட்மெண்ட் விடுவார்கள் இல்லியா? அந்த மாதிரி. நான் உலக உத்தமன்தான். அவன் அயோக்கியன்தான். ஆனால், நானும் அவனும் சேரும் இந்த ஒரு விஷயம் மட்டும் புனிதப் பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பது மாதிரி.”
-
bsubra
பா ராகவனின் ஆயில் ரேகையில் இருந்து: பனங்கள், தென்னங்கள், கன்னங்கள் என்று எதிலெல்லாம் மெல்லிய கிக் கிடைக்கிறதோ, அதிலெல்லாம் ஈத்தைல் ஆல்கஹால் இருக்கிறதென்று அர்த்தம். (கன்னங்கள்? சந்தேகப்படாதீர்கள். நம் கண்ணுக்குத் தெரியும் மாபெரும் ஹைட்ரோகார்பன் ப்ராடக்ட், மனித உடல்தான்.)
dYNo 5:49 am on November 11, 2008 Permalink |
>>சராசரி இந்தியக் குணத்தை<<
ஸ்வஸ்திக் அண்ணாச்சி தன் குணத்தையெல்லாம் இந்தியர்கள் குணம்னு நினைச்சுகிட்டாரோ?