இன்று மதியம் அலுவலக நேரத்தில் செல்லிடப்பேசியில் ஒரு அழைப்பு
நான் : வணக்கம் சொல்லுங்க
அழைத்தவர் : சார் இந்த மொபைல்ல தமிழ் எப்படி படிக்கிறதுன்ங் சொல்லுங்க
நான் : நீங்க ஒரு மெயில் அனுப்புங்க, நான் விரிவா பதிலனுப்புறேன்
அழைத்தவர் : இல்ல சொல்லுங்க
நான் : இல்ல சார், இப்ப வேலைல இருக்கேன். இது கொஞ்சம் தெளிவா பேச வேண்டிய விஷ்யம். அதான் மெயில் அனுப்ப சொல்றேன்
அழைத்தவர் : பரவால்ல சார் இப்பவே சொல்லுங்க
நான் : நீங்க மெயில் அனுப்புங்க
அழைத்தவர் : நான் அனுப்பினேன் சார், ஆனா பதில் வரல
நான் : இன்னைக்கு காலைல வர பாத்தேன் மெயில் வரலயே
அழைத்தவர் : அதான் சார் நீங்க பதில் அனுப்ப மாட்டீங்க
நான் : ????
அழைத்தவர் : அதான் இப்பவே சொல்லுங்கன்னு சொல்றேன்
நான் : இல்லை நீங்க திரும்ப அனுப்புங்க
அழைத்தவர் : அப்படியா, அப்ப இப்ப சொல்ல மாட்டீங்களா
நான் : இல்லை, நீங்க மெயில் அனுப்புங்க
அழைத்தவர் :எனக்கு மெயில் எல்லாம் அனுப்ப தெரியாது
நான் : நேத்து அனுப்புனீங்களே
அழைத்தவர் : அது நான் இல்லை. வேற ஒருத்தர் அனுப்பினார்
நான் :சரி, அவரையே திரும்ப அனுப்ப சொல்லுங்க
அழைத்தவர் : உங்க அட்ரஸ் என்ன
நான் :அது தான் நேத்து அனுப்புனீங்களே
அழைத்தவர்
?
நான் :அதே அட்ரஸ் தான் சார்
அழைத்தவர் :அத எங்கேயோ வச்சிட்டேன்
நான் :பரவாயில்லை sent items சென்று பார்த்தால் இருக்கும். திரும்ப அனுப்புறீங்க
அழைத்தவர் :என்னவோ சார். தமிழ் எப்படி படிக்கிறதுன்னு கேட்டா இவ்வளவு குறுக்கு விசாரனை பண்ணுறீங்க. வெறுப்பா இருக்கு சார்
நான் :பரவாயில்லை சார். நீங்க அனுப்புங்க, நான் பதில் அனுப்புறேன்
அழைத்தவர் :அப்ப நீங்க போன்ல எதுவுமே பதில் சொல்ல மாட்டீங்களா
நான் :சின்ன சந்தேகமுன்னா சொல்லலாம். நீங்க கேட்டது படத்தோட சொன்னாத்தான் புரியும். மெயில் பாத்துட்டு சந்தேகம் இருந்தா கேளுங்க சொல்றேன்
அழைத்தவர் : சரி சார், வேற யாராவது போன்லேயே பதில் சொல்வாங்களா. நம்பர் இருந்தா கொடுங்க
நான் : ???? இப்ப இல்லை. பெறகு தாரேன்
—
யாருடைய அலைபேசி எண்ணை தரலாம் என்று சட்டென்று தோன்றவில்லை
—
ஒரு வேளை அவர் “சார் எனக்கு வாசிச்சா புரியல” என்று கேட்டிருந்தாலோ அல்லது இணைய இணைப்பு இல்லை. மொபைல் மட்டும் தான் இருக்கு என்று கூறியிருந்தாலோ கண்டிப்பாக அவருக்கு நேரம் செலவழித்து விளக்கியிருப்பேன்
சுகாதாரம் , உடல் நலம் குறித்து சந்தேகம் கேட்கும் பலர் “நான் ஒழுங்கா மெயில் செக் பண்ண மாட்டேன்” என்று கூறியுள்ளார்கள் அவர்கள் யாரென்று தெரியாவிட்டால் கூட அவர்களுக்கு நீண்ட நேரம் தொலைபேசியில் விளக்கியுள்ளேன்
ஆனால் இது போன்ற நேர்மை குறைவான நபர்களை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது
ரோஸாவசந்த் 10:27 pm on August 27, 2009 Permalink |
அன்புள்ள ப்ரூனோ,
ராஜா பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் எந்த விதத்திலும் சிக்கலானதோ, ஆழ்ந்த ஆராய்சிக்கோ, நீண்ட பரிசீலனைகள் மற்றும் சிந்தனை அசைபோடல்களுக்கு பின் வந்ததல்ல என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். அதனால் சாருவின் உதவியின்றி நீங்களே சொந்த சிந்தனையின் மூலமே இந்த கருத்துக்களை அடைந்திருப்பதாக சொல்வதை முழுமையாக நம்புகிறேன். சாரு ஏற்கனவே மீண்டும் மீண்டும் பலமுறை -பதில் சொன்ன பிறகும்- உளரிவிட்ட கருத்துக்கள் சிலதை நீங்கள் மீண்டும் சொன்னதால் அவ்வாறு சொன்னேன். அது தரம் தாழ்ந்த விமர்சனம் என்று நினைக்கும் அளவிற்கு புண்பட்டிருந்தால் மிகவும் மன்னிக்கவும். மற்றபடி ராஜாவின் இசையை முன்வைத்து நீங்கள் விமர்சனத்தை முன்வைத்தால் ( ஆஸ்கார் -இந்தியில் வெற்றி போன்றவை பற்றியல்லாமல், உதாரணமாய் ̀ராஜாவின் சிம்ஃபனி’ பற்றி நீங்கள் எழுப்பும் கேள்வி) நிச்சயம் கணக்கில் கொள்வேன்.
புருனோ 4:26 am on August 28, 2009 Permalink |
//ராஜா பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் எந்த விதத்திலும் சிக்கலானதோ, ஆழ்ந்த ஆராய்சிக்கோ, நீண்ட பரிசீலனைகள் மற்றும் சிந்தனை அசைபோடல்களுக்கு பின் வந்ததல்ல என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.//
அன்புள்ள ரோசா வசந்த
ராஜா பற்றி நான் கூறிய கருத்துக்கள் இவைதான்
1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
3. இந்தி பாடல் கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ராஜா. இந்தி பாட்டுக்களை கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களை கூட தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ரஹ்மான்
4. ராஜாவால் வெற்றி பெற முடியாத இந்தி திரையுலத்தை கூட ஆக்கிரமித்தவர் ரஹ்மான்
5. ராஜாவை எந்த சர்வதேச இசையமைப்பாளரும் இசையமைக்க அழைக்கவில்லை. ரஹ்மானை அழைத்தார்கள்
6. அதே போல் இந்தியாவிலேயா ராஜா மட்டும் தான் சிறந்தவர் என்றும் ரஹ்மான், நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான் என்று கூறுவது தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது
இதில் எந்த கருத்தை நீங்கள் ”ஆழ்ந்த ஆராய்சிக்கோ, நீண்ட பரிசீலனைகள் மற்றும் சிந்தனை அசைபோடல்களுக்கு பின் வந்ததல்ல” என்று கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை
எனவே உங்களது ஆதரமற்ற மழுப்பல் வாதத்தை நான் வன்மையான மறுக்கிறேன். நீங்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறீர்கள் என்று சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்
ஒரு வேளை ராஜா பற்றி ராஜா ”ஆழ்ந்த ஆராய்சிக்கோ, நீண்ட பரிசீலனைகள் மற்றும் சிந்தனை அசைபோடல்களுக்கு பின் வராதா கருத்துக்கள்” ஏதாவது நான் கூறியிருந்தால் அது எதுவென்று சுட்டிக்காட்டினால்
ஒன்று என் தரப்பு வாதத்தை வைக்க தயாராக இருக்கிறேன். அல்லது திருத்திக்கொள்ள, திருந்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
ரோஸாவசந்த் 10:19 am on August 28, 2009 Permalink |
ஸாரி புருனோ, நீங்கள் இந்த 6 கருத்துக்களை ஆழ்ந்த ஆராய்ச்சி + நீண்ட பரிசீலனைக்கு பின் வந்தீர்கள் என்பதை என்னால் உணர இயலவில்லை. அப்படி இருக்க இதில் மேலும் நேரத்தை செலவிடாமல் இருப்பதுதான் உசிதமானது என்று தோன்றுகிறது. ஆனால் நீங்கள் அன்புடன் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னதால் இந்த சிறிய பதில். ( ஏதாவது ஒரு கட்டத்தில் சில கருத்துக்களை சொல்லிவிட்டால் அதை மீண்டும் சொல்ல வேண்டி இருக்காது, அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்பதற்காகவும்)
என் கருத்துக்களை என் இரண்டு பதிவுகளில் சில வருடங்கள் முன்னால் எழுதி, நீங்களும் வாசித்து பின்னூட்டம் கூட இட்டிருந்தீர்கள்.
http://rozavasanth.blogspot.com/2006/05/1.html
http://rozavasanth.blogspot.com/2006/06/2.html
இந்தி பாடல்களை கேட்டுகொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை ராஜா கேட்க வைத்தார் என்று சொல்லும் வாதத்தை சில ஆதாரத்துடன் வன்மையாக மறுத்திருந்தேன். உங்கள் பின்னூட்டத்தை பார்த்தால் அதை நீங்கள் ஏற்றுகொண்டதாக தோற்றமளிக்கிறது. இப்போது மீண்டும் கேட்ட 30 வருஷமாக அதே வாதத்தையே மீண்டும் சொல்கிறீர்கள். இந்தியில் இருந்து ராஜா தமிழை காப்பாற்றினார் என்பது போல எம்.எஸ்.வி போன்ற மேதைகளை கேவலப்படுத்தும் வாதம் வேறு கிடையாது. ராஜா என்று ஒருவர் பிறக்காமல் இருந்தால் கூட இந்திப்பாடல் ஆதிக்கத்திலிருந்து தமிழ் நிச்சயாமாய் தப்பியிருக்கும், நம்புங்கள்!
அடுத்து ஹிந்திக்காரர்கள் எல்லாம் இப்போது தமிழ் பாட்டு கேட்டுகொண்டிருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. அடிப்படையில் அடிமை மனநிலையை கொண்டிருப்பவர்களுக்குதான் இந்திக்காரர்கள் இசையை அங்கீகரிப்பது என்பது ஒரு பொருட்டாக இருக்க முடியும். ராஜா தமிழ் திரை உலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கியிருந்த போது, இந்தியில் பப்பிலஹரி கொடிகட்டி பறந்தார். உங்கள் அளவுகோல் படி பப்பிலஹரி ஒரு மேதையாக தெரியலாம். நான் கட்டாயப்படுத்தி உங்கள் கருத்தை மாற்ற முடியாது.
சுமார் 40 ஆண்டுகளாக மிக வளமாக இருந்த ஹிந்தி திரை இசை, 70களிலேயே அலுப்பூட்டும் மோனொடோனஸ் இசையாக மாறி, 80 களில் குப்பையாகி, 80களின் இறுதியில் கழிவாக மாறியிருந்தது. இவைகளை உதாரணத்துடன் விளக்க முடியும். அந்த சூழலில் கூட ராஜாவால் இந்தியில் தடம் பதிக்க முடியவில்லை என்றால் அந்த வெகுரசனை கேவலமானதா அல்லது அது ராஜவின் குறையா?
நான் ரஹ்மான், ராஜா உட்பட யாரையும் ஒப்பிடுவதில்லை. ராஜாவின் இசை மட்டும் போதுமான ஒன்றாக எனக்கும் சமூகத்திற்கும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஜீனியஸ் என்ற வார்த்தைக்குள் ராஜாவை மட்டுமே என்னால் அடக்க முடியும். ஓரளவு இசை அறிவு கொண்டு மற்றவர்கள் அளித்த இசை பரிணமித்ததை பாதையை ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியும். ரோஜா, ஜெண்டில்மேன் துவங்கி ̀மஸக்கலி ‘பாடல்வரை அது எவ்வாறு ஏற்கனவே இருந்த இசைகளை மிக திறமையான முறையில், நீண்ட உழைப்பிற்கு பின் manipulate செய்து உருவானது என்று புரிந்து கொள்ளமுடிகிறது. ராஜா அளித்தவைகள் இத்தகைய எந்த புரிதலுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே அவரை மட்டுமே நானும் பலரும் ஜீனியஸ் என்கிறோம். இதில் மாறுபடுவர்களுடன் சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை -ஓரமாக இதை சொல்லிவிட்டு போவதை தவிர.
ராஜா செய்த அனைத்தும் அதிசயம்! ̀செந்தூரப்பூவே’யில் துவங்கி (நான் அன்னக்கிளியில் ராஜாவை துவக்க மாட்டேன்) ̀தென்றல் வந்து தீண்டும் போது’ வரை அனைத்தும் நமது புரிதல்களுக்கு அப்பாற்பட்டது. இதுவரை நாம் அறிந்த genreக்களில் அடங்காமல், அவைகளின் fusion என்றும் வகைப்படுத்த முடியாத ஒன்று. ராஜாவின் காலத்தில் இந்த அதிசயத்தை உணர்ந்தததாக சொல்ல முடியாது. அப்போது அது ஒரு ஹிட் இசை என்ற அளவில் மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகள் கழித்தே இதன் பல அறியாத நுட்பங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் பிடிபட்டதாக சொல்ல முடியவில்லை. அதிசயிக்க மட்டுமே முடிகிறது.
ராஜாவையும் ரஹ்மானையும் ஒப்பிடுவது என்பது மிகவும் அபத்தம். நான் ஒரு அறிவுத்துறையில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால் இதற்கு முன்னால் பங்களித்தவர்களை தாண்டித்தான் ஏதாவது செய்யவேண்டும். அவ்வாறு தாண்டி செய்துவிட்டதால் ஐன்ஸ்டீனை விட நான் பெரிய ஆளாகிவிட முடியாது. அந்த வகையில் ரஹ்மான் ராஜாவை தாண்டி சென்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை வேறு விதமாக பார்க்கலாம். (இதுவும் நேரடி ஒப்பிடல் இல்லை.)
76இல் இருந்து 92 வரை ராஜா, 92இல் இருந்து 2008வரை ரஹ்மான். இந்த 16 வருடங்களை ஒப்பிடுங்கள். புகழின் உச்சத்தில் இருந்தும் ரஹ்மான் இன்னும் 100 படங்களுக்கு கூட இசையமைக்கவில்லை. ராஜாவோ சுமார் 800 படங்கள், எல்லா படங்களிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நாம் அலசவேண்டிய நுட்பம் கொண்ட பிண்ணணி இசை. அந்த கணத்தில் நிகழ்ந்த அதிசயம் போல பாடல்கல். இவை அத்தனையும் ராஜா என்ற தனி மனிதன் முழுமையாக எழுதிக்கொடுத்தது. ரஹ்மானைப்போல விக்கி விநாயக்ராமின் பையனை(பெயர் மறந்து விட்டது) பல வகை தாளங்களை தனித்தனியே போடச்சொல்லி, பதிவு செய்து, அவைகளின் பல கலவைகளை இரவு முழுக்க ஆராய்ந்து ̀அழகான ராட்சசி’யின் தாளமாக தருவது அல்ல. ரஹ்மான் செய்வது மீது எனக்கு எந்த விமர்சனமில்லை. ஆனால் அது நாம் புரிந்து கொள்ளும் சட்டகத்தில் அடக்கும் மிக திறமை + உழைப்புக்கு பின் விளையும் இசை. ராஜா, பலர் கவனித்திருக்க வாய்ப்பு குறைவாக உள்ள, ̀பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் ̀செவ்வரளி தோட்டத்திலே’ அளித்தது இந்த புரிதல்களுக்கு அப்பாற்பட்ட அதிசயம்.
இருந்தாலும் ராஜாவை சினிமாவிற்கு பொருத்தமானவராக இல்லை என்றுதான் என் பதிவில் கருத்து கூறியிருக்கிறேன். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறேன். “சினிமாப் பாடலிசையின் தேவைகளை மிக பொருத்தமாய் (ஒரு விஸ்வநாதனைப் போல, ரஹ்மானைப் போல) அவராய் திருப்தி செய்ய இயலவில்லை என்றும் தோன்றுகிறது” என்பதுதான் என் கருத்து.
இந்த வகையில் ராஜா குறித்தும் மற்றவர்கள் குறித்தும் பேசவும், உரையாடவும் நிறைய உள்ளது. (20 ஆண்டுகளாய் குப்பைகளை உற்பத்தி செய்த) ஹிந்தியில் வெற்றி பெற முடியவில்லை, வெள்ளைக்கார சினிமாக்காரன் ரஹ்மானை கூப்பிட்டான் ராஜாவை கூப்பிடவில்லை என்கிற வாதங்களை முன்வைத்து அல்ல. (உண்மையில் பல மேற்கின் இசை அறிஞர்கள் ராஜாவைத்தான் கொண்டாடுகிறார்கள், ரஹ்மானை அல்ல என்பதுதான் உண்மை. ஆதாரத்துடன் மேற்கோளுடன் சொல்ல முடியும்). மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் சொல்லி விவாதிக்கும் விஷயம் இதுவல்ல. உங்கள் கருத்துக்களை மாற்றும் நோக்கமும் எனக்கில்லை. ராஜா மீதான் வெறுப்பு என்று காரணம் இல்லாம் பரவிகொண்டிருக்கும் அலையில் நீங்கள் விழக்கூடாது என்ற அக்கறையில் நீங்கள் கேட்டதன் பெயரில் இந்த சந்தர்ப்பத்தில் இந்த பதில். நன்றி!
புருனோ 12:56 pm on August 28, 2009 Permalink |
//ஸாரி புருனோ, நீங்கள் இந்த 6 கருத்துக்களை ஆழ்ந்த ஆராய்ச்சி + நீண்ட பரிசீலனைக்கு பின் வந்தீர்கள் என்பதை என்னால் உணர இயலவில்லை. //
அப்படி என்றால் நான் கூறியதில் எது தவறு என்கிறீர்கள். அப்படி தவறு என்றால் நீங்கள் கூறும் கருத்து என்ன. அதற்கு ஆதாரம் தாருங்கள்
கீழ்க்கண்ட கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா
1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
என்ன கொடுமை சார் இது
புருனோ 1:14 pm on August 28, 2009 Permalink |
// ராஜா மீதான் வெறுப்பு என்று காரணம் இல்லாம் பரவிகொண்டிருக்கும் அலையில் நீங்கள் விழக்கூடாது என்ற அக்கறையில் நீங்கள் கேட்டதன் பெயரில் இந்த சந்தர்ப்பத்தில் இந்த பதில்.//
எனக்கு ராஜா மீது வெறுப்பு கிடையாது
ஆனால் அவரது ரசிகர்கள் என்று சிலர் செய்யும் தரந்தாழ்ந்த செயல்கள் மீது தான் வெறுப்பு
உதாரணம் குசும்பனின் http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_24.html இடுகையில் என் பெயரில் ஒரு மறுமொழி மற்றும் ஒரு போலி புரோபைல்
அது ஒரு போலியின் வேலை
ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!
சரக்கிருக்கிறவர்கள் ஆஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்
சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!
வாழ்க வளமுடன் !!
anbudan BALA 4:25 pm on August 28, 2009 Permalink |
Doctor,
////ஸாரி புருனோ, நீங்கள் இந்த 6 கருத்துக்களை ஆழ்ந்த ஆராய்ச்சி + நீண்ட பரிசீலனைக்கு பின் வந்தீர்கள் என்பதை என்னால் உணர இயலவில்லை. //
I suspect that you are not getting what Vasanth is trying to tell you. He simply means that to arrive at these 6 points, one need not spend time doing lot of thinking and research on IR music. Your 6 points are simple statements proclaiming your opinion on IR and plain facts as they exist.
Thats why your response to Vasanth looks inappropriate !!!! Again, it is not my intention to attribute any personal motive to you
anbudan
BALA
ரோஸாவசந்த் 4:33 pm on August 28, 2009 Permalink |
புருனோ, மேலே உள்ள எனது பின்னூட்டத்தை என்னால் நீக்க முடியவில்லை. நீங்கள் அதை நீக்கி எனக்கு உதவ முடியுமா?
புருனோ 7:43 pm on August 28, 2009 Permalink |
//ஸாரி புருனோ, நீங்கள் இந்த 6 கருத்துக்களை ஆழ்ந்த ஆராய்ச்சி + நீண்ட பரிசீலனைக்கு பின் வந்தீர்கள் என்பதை என்னால் உணர இயலவில்லை. //
அப்படி என்றால் நான் கூறியதில் எது தவறு என்கிறீர்கள். அப்படி தவறு என்றால் நீங்கள் கூறும் கருத்து என்ன. அதற்கு ஆதாரம் தாருங்கள்
கீழ்க்கண்ட கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா
1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
என்ன கொடுமை சார் இது
அன்புடன் பாலா 8:59 pm on August 28, 2009 Permalink |
Vasanth,
What is the need here to ask for removal of your comment ? It is neither a personal attack nor abusive !
ராஜாவின் இசையை சிறப்பாக விவரித்து இருக்கிறீர்கள். பலரும் வாசிக்க வேண்டியது இது. அதனால் இதை நீக்கக் கோர வேண்டாம் என்பது என் எண்ணம்.
Pot"tea"kadai 9:13 pm on August 28, 2009 Permalink |
Dr. புருனோவிற்கான ரோசாவஸந்த் அவர்களின் பின்னூட்டம் அவசியமற்றதாக என் பார்வையில் தெரிகிறது. அதனாலேயே ரோசாவும் அதை நீக்குமாறு கேட்டிருக்கலாம்.
ரோசாவின் நீண்ட விளக்கங்களுக்கு நன்றி. ஆனால் நேர விரயம்
பாலா,
//ராஜாவின் இசையை சிறப்பாக விவரித்து இருக்கிறீர்கள். பலரும் வாசிக்க வேண்டியது இது. அதனால் இதை நீக்கக் கோர வேண்டாம் என்பது என் எண்ணம்//
சிறுதிருத்தம்…இசையைப் பற்றித் தெரியாதவர்களும், புரிதல்கள் இல்லாதவர்களும், முன் முடிவுகள் இல்லாதிருப்பவர்களும் வாசிக்க வேண்டியது ரோசாவின் பின்னூட்டம்
புருனோ 9:21 pm on August 28, 2009 Permalink |
இல்ல பாஸ். அந்த மறுமொழி என் கேள்விகளுக்கு விடை அளிக்க வில்லை என்பது தான் என் வருத்தம்