State Bank of Indiaவில் வீட்டிற்காக ஒரு கடன் வாங்க சென்றால், என் ஜட்டி அளவு எண் தவிர்த்து, என்னைப் பற்றிய மற்ற அனைத்து விவரங்களையும் கொடுக்க சொல்லி காய்ச்சி எடுக்குறாங்க. முடியல.
Tagged: புலம்பல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
சந்தோஷ் குரு
-
ரவி
நீ என் முதுகைச் சொறி. நான் உன் முதுகைச் சொறியுறேன். தமிழ் இணையத்தில் இரு பக்க முதுகு சொறிதல்கள் மண்டை காய வைக்கின்றன.
-
சந்தோஷ் குரு
இப்போதெல்லாம் ஆங்கில படத்தில் தமிழ் (அல்லது இந்தி) பாடல்கள் வருவது சகஜம். காட்டாக Inside Manஐ சொல்லாம், வாரணம் ஆயிரம் படத்தையும் சொல்லலாம். என்ன ஒரு honest, bottom of the heart படம் இது. படத்தில் வந்ததோ “மேஜர்” சூர்யாவின் 33 வயது வரை நடந்த கதை தான். அதற்கு மேல் அவர் என்ன செய்திருப்பார். ஒரு நாள் துயிலெழுகிறார், அவர் மனைவி திவ்யா தமிழில் “Honey, its been 4 years, since we had fallen in love” என்று சொல்ல “மேஜர்” சூர்யா சூட்சுமமாக புன்னகைத்துகொண்டே பல் விளக்குகிறார். அவர் பல் விளக்கி துப்பும் நுரையினையும், பிரஷை கழுவுவதையும் க்ளோசப் ஷாட் ஒன்றில் காட்டுகிறார்கள் (ஏனென்று கேட்காதீர்கள், Batman போல இமாலயம் சென்று தில்லி திரும்பிய சூர்யா, பப்லூ குழுவுடன் சண்டை போடும் போது ஒருவருடைய மணிக்கட்டை தக்காளி நறுக்குவதுபோல நறுக்கும் honest, bottom of the heart காட்சியில், துண்டாகும் கையை காட்டுகிறார்கள். அது ஏன் என்று முதலில் கேளுங்க).
சூட்சும சிரிப்புக்கு அர்த்தத்தை திவ்யா கேட்டுக்கும் போது, மேஜர் சிரித்துக்கொண்டே, தன்னுடைய துப்பாக்கி சுடும் திறனை பாராட்டி ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இந்திய அரசாங்கம் அழைத்திருக்கிறது என்கிறார். உடனே ஒரு பாட்டு. அந்த பாட்டின் போது ஐந்து தங்கப்பதக்கங்களை வெல்கிறார். பாட்டு ஒரு நாற்பது நொடிகள் நிற்கிறது. அனைவரும் வாழ்த்துகிறார்கள் (மறந்தும் வாழ்த்துக்கள் என்று சொல்ல மாட்டார்கள், congrats man, cool dude, you made us proud என்று தான் சொல்வார்கள்). மேஜர் சூர்யாவின் குரல் “டாட். இதுக்கும் நீங்க தான் காரணம். சின்ன வயசுல ஒரு நாள் சோர்ந்து ஒக்காந்திருந்தேன். நீங்க தான் வந்து என் கிட்ட, “Kiddo ! Go out. Get some fresh mangoes” சொல்லி, என்னை ஊக்குவிச்சிங்க. அது தான் காரணம். ஐ லவ் யூ டாடி”
அப்புறம் ஆங்கிலத்தில எழுதுன ஒரு கவிதைய, தமிழில் honestஆ, bottom of the heartல மாற்றம் செய்து திரையில் காட்டுகிறார்கள்.
(படம் இதோடு முடிந்து விடாது. இதற்கு தொடர்ச்சியாக “பூரண பொற்குடம்” என்று இன்னோரு படம் எடுப்பார். அதில் மேஜர் சூர்யாவின் மகன் வளர்ந்து, ஆஸ்கர் விருது, நொபேல் விருது, ஞானபீட விருது, சாகித்திய அகாதெமி விருது எல்லாம் பெறுவார். அப்பா சூர்யாவை மிஞ்சி “சிக்ஸ்டீன் பேக்” எல்லாம் போடுவார். பார்த்து நாமும் காசை கரியாக்குவோம்)
-
ரவி
// “டாட். இதுக்கும் நீங்க தான் காரணம். சின்ன வயசுல ஒரு நாள் சோர்ந்து ஒக்காந்திருந்தேன். நீங்க தான் வந்து என் கிட்ட, “Go out. Get some fresh mangoes” சொல்லி, என்னை ஊக்குவிச்சிங்க. அது தான் காரணம். ஐ லவ் யூ டாடி”//
10 நிமிசத்துக்கு ஒருக்கா சூரியா இப்படி சொல்லும் கடியைத் தான் தாங்க முடியல. மேக்னா – சூரியா கதையை மட்டும் முழு நீளமாக எடுத்திருக்கலாம். தன் அப்பா மேல் உள்ள உணர்ச்சியில் கிருசுணன் பாத்திரத்தை நுழைத்துச் சொதப்பி விட்டார். குறைந்தபட்சம் சூரியாவுக்குப் பதில் நாசர், ராசுகிரண் மாதிரி யாரையாச்சும் நடிக்க வைச்சிருக்கலாம்.
அவ்வையார் பத்தி படமெடுத்தாலும் அதில் ரவுடிகள் இல்லாமல் படம் எடுக்க மாட்டார் போல, மேனன்…!!
படம் பிடிச்சிருக்குன்னு சொல்றவங்களைக் கூட மன்னிச்சிடலாம். ஆனால், “இந்தப் படம் உனக்குப் பிடிக்கலைன்னா உனக்கு ரசனையே இல்லை”ன்னு ஒரு நண்பன் சொன்னான். அதைத் தான் என்னால் தாங்கிங்க முடியல
-
santhoshguru
அப்படிப்பட்ட ரசனை எல்லாம் தேவை**ரே இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. ஆஸ்கர் ரவிச்சந்திரன் காசுல ஒருத்தர் ஆட்டைய போட்டுருக்காரு. அம்புட்டுதேன்.
-
-
prakash
திருத்தம். ஆப்பு, ஆஸ்காருக்கு இல்லே, தயாநிதி அழகிரிக்கு
-
prakash
santosh, read one vijay’s comment and gautham’s ( yes, its his) rejoinder in the comment section.
http://www.desipundit.com/baradwajrangan/2008/06/05/interview-gautam-vasudev-menon/
ரவி
தமிழனுக்கு இந்து நாளிதழும் புரியல. தமிழ் விக்கிப்பீடியாவும் புரியலயாம். வண்ணத்திரையும் தினத்தந்தியும் மட்டுமே படிக்கிற பார்க்கிற சமூகமாக மட்டுமே தமிழினம் இருக்கப் போகிறதா?
ரவி
ஜட்டி, அரைக் கால்சட்டை, முழுக்கால் சட்டை, சட்டை, உள்சட்டை, காலணி என்று ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு மாதிரி அளவுகள், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரி அளவுகள் என்று ஏன் இப்படி குழப்புகிறார்கள்?
mayooresan
முதல் உளறல்… ஹி.. ஹி.. இனி தொடர்ந்து அசத்துவமில்ல!
ரவி
8 தளப் பெயர்களுக்குப் பணம் கட்டிட்டு இருக்கேன்
அதில் 2 branding காரணங்களுக்காக !
ரவி 10:36 am on January 9, 2009 Permalink |
வீட்டுக்கடன் வாங்குனா என்ன மிஞ்சும்கிறத குறிப்பா சொல்லுறாங்களோ
ரவி 12:00 pm on January 10, 2009 Permalink |
நண்பர் சொன்னது: இந்தக் காலத்தில் கடன் வாங்கி வீடு கட்டுவது என்பது நமக்கு நாமே சிறை கட்டிக் கொள்வது போல ! பொருளாதார நெருக்கடி நேரத்தில் சொத்துகளை விட காசாக வைத்திருப்பதற்குத் தான் மதிப்பு கூட !!