இன்று மதியம் அலுவலக நேரத்தில் செல்லிடப்பேசியில் ஒரு அழைப்பு
நான் : வணக்கம் சொல்லுங்க
அழைத்தவர் : சார் இந்த மொபைல்ல தமிழ் எப்படி படிக்கிறதுன்ங் சொல்லுங்க
நான் : நீங்க ஒரு மெயில் அனுப்புங்க, நான் விரிவா பதிலனுப்புறேன்
அழைத்தவர் : இல்ல சொல்லுங்க
நான் : இல்ல சார், இப்ப வேலைல இருக்கேன். இது கொஞ்சம் தெளிவா பேச வேண்டிய விஷ்யம். அதான் மெயில் அனுப்ப சொல்றேன்
அழைத்தவர் : பரவால்ல சார் இப்பவே சொல்லுங்க
நான் : நீங்க மெயில் அனுப்புங்க
அழைத்தவர் : நான் அனுப்பினேன் சார், ஆனா பதில் வரல
நான் : இன்னைக்கு காலைல வர பாத்தேன் மெயில் வரலயே
அழைத்தவர் : அதான் சார் நீங்க பதில் அனுப்ப மாட்டீங்க
நான் : ????
அழைத்தவர் : அதான் இப்பவே சொல்லுங்கன்னு சொல்றேன்
நான் : இல்லை நீங்க திரும்ப அனுப்புங்க
அழைத்தவர் : அப்படியா, அப்ப இப்ப சொல்ல மாட்டீங்களா
நான் : இல்லை, நீங்க மெயில் அனுப்புங்க
அழைத்தவர் :எனக்கு மெயில் எல்லாம் அனுப்ப தெரியாது
நான் : நேத்து அனுப்புனீங்களே
அழைத்தவர் : அது நான் இல்லை. வேற ஒருத்தர் அனுப்பினார்
நான் :சரி, அவரையே திரும்ப அனுப்ப சொல்லுங்க
அழைத்தவர் : உங்க அட்ரஸ் என்ன
நான் :அது தான் நேத்து அனுப்புனீங்களே
அழைத்தவர்
?
நான் :அதே அட்ரஸ் தான் சார்
அழைத்தவர் :அத எங்கேயோ வச்சிட்டேன்
நான் :பரவாயில்லை sent items சென்று பார்த்தால் இருக்கும். திரும்ப அனுப்புறீங்க
அழைத்தவர் :என்னவோ சார். தமிழ் எப்படி படிக்கிறதுன்னு கேட்டா இவ்வளவு குறுக்கு விசாரனை பண்ணுறீங்க. வெறுப்பா இருக்கு சார்
நான் :பரவாயில்லை சார். நீங்க அனுப்புங்க, நான் பதில் அனுப்புறேன்
அழைத்தவர் :அப்ப நீங்க போன்ல எதுவுமே பதில் சொல்ல மாட்டீங்களா
நான் :சின்ன சந்தேகமுன்னா சொல்லலாம். நீங்க கேட்டது படத்தோட சொன்னாத்தான் புரியும். மெயில் பாத்துட்டு சந்தேகம் இருந்தா கேளுங்க சொல்றேன்
அழைத்தவர் : சரி சார், வேற யாராவது போன்லேயே பதில் சொல்வாங்களா. நம்பர் இருந்தா கொடுங்க
நான் : ???? இப்ப இல்லை. பெறகு தாரேன்
—
யாருடைய அலைபேசி எண்ணை தரலாம் என்று சட்டென்று தோன்றவில்லை
—
ஒரு வேளை அவர் “சார் எனக்கு வாசிச்சா புரியல” என்று கேட்டிருந்தாலோ அல்லது இணைய இணைப்பு இல்லை. மொபைல் மட்டும் தான் இருக்கு என்று கூறியிருந்தாலோ கண்டிப்பாக அவருக்கு நேரம் செலவழித்து விளக்கியிருப்பேன்
சுகாதாரம் , உடல் நலம் குறித்து சந்தேகம் கேட்கும் பலர் “நான் ஒழுங்கா மெயில் செக் பண்ண மாட்டேன்” என்று கூறியுள்ளார்கள் அவர்கள் யாரென்று தெரியாவிட்டால் கூட அவர்களுக்கு நீண்ட நேரம் தொலைபேசியில் விளக்கியுள்ளேன்
ஆனால் இது போன்ற நேர்மை குறைவான நபர்களை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது
ரவி 1:33 pm on June 16, 2009 Permalink |
என்ன கொடுமை இது, புருனோ
புருனோ 6:46 pm on June 16, 2009 Permalink |
அவர் அடுத்த முறை அழைத்தால் உங்கள் அலைபேசி எண்ணை தரலாமா
manikandan 9:31 am on June 17, 2009 Permalink |
என்னோட நம்பர் கொடுங்க சார்.
ரவி 12:56 pm on June 18, 2009 Permalink |
வேணாம், அழுதிடுவேன்
எனக்கும் கணினியில் தமிழ் எழுதுவது, விக்கிப்பீடியா குறித்து சில வேளை அழைப்பு வருது. பேசுறவங்க பண்போட பேசுற வரைக்கும் உதவுவதில் மகிழ்ச்சியே.
யாத்ரீகன் 6:27 pm on June 17, 2009 Permalink |
இருந்தாலும் டாக்டர் உங்களுக்கு பொறுமை ரொம்ப அதிகம்
.. ஒரு விதத்துல எங்களுக்கு நல்லதுதான்
கார்த்திக் 11:00 pm on June 17, 2009 Permalink |
முதல்ல அவர் நம்பர இங்க பதியுங்க. எல்லாரும் அவரை அழைத்து இது மாதிரி வெறுப்பேத்தலாம்
ரவி 12:55 pm on June 18, 2009 Permalink |
இதை நான் ஆமோதிக்கிறேன்
கார்த்திக் 11:02 pm on June 18, 2009 Permalink |
பசங்க படத்துல இப்படி தான் பண்ணிக் கலாய்ப்பாங்க. தொடர்ச்சியா வெவேறு நம்பர்லிருந்து மிச்டு கால் விட்டு கலாய்கிறவங்களும் உண்டு.
என் நண்பன் ஒருத்தன் இதுக்கு ஒரு நெட்நொர்க்கே வச்சிருக்கான்.
ரவி 12:32 am on June 19, 2009 Permalink |
நம்மளை இந்த networkல் சேர்த்துக்குவாங்களா. பல பேரை கலாய்க்க வேண்டி இருக்கு
மறுமொழி போட்டு கலாய்ப்பதற்கு பல வலைப்பதிவர்களிடம் இந்த மாதிரி network இருக்கு
புருனோ 5:22 am on June 19, 2009 Permalink
// மறுமொழி போட்டு கலாய்ப்பதற்கு பல வலைப்பதிவர்களிடம் இந்த மாதிரி network இருக்கு //
இதுக்கு பேர் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது
கார்த்திக் 8:47 am on June 25, 2009 Permalink
ரவி, இந்த மக்கள் தொண்டை பண்றது நம்ம கிலின் கிலிட்டசு (ஞாபகம் இருக்கா?) மற்றும் அவன் பள்ளி நண்பர்கள்.
ரவி 8:21 pm on June 25, 2009 Permalink |
ஓ.. இது கிலிட்டசு வேலையா? அவனை நல்லாவே நினைவிருக்கு..