Tagged: புரட்சி RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 6:51 pm on April 7, 2011 Permalink | Reply
    Tags: உண்ணா நோன்பு, , , புரட்சி, , மக்கள் போராட்டம்   

    இன்று , அண்ணா அசாரேயின் உண்ணா நோன்பை ஆதரித்து மெழுகுவர்த்தி வெளிச்ச ஊர்வலம் என்று கூப்பிட்டார்கள். எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. இந்தக் காலத்தில் உண்ணா நோன்புப் போராட்டம் என்பது உண்மையாளர்களின் உயிரையும் உடல்நலத்தையும் காவு வாங்குவதில் தான் போய் முடியும். எகிப்து போல இங்கு மக்கள் புரட்சி வராதா என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு மேல் பொறுக்க முடியாது, இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சமூகம் முழுக்க கொடுங்கோலாட்சியின் பாதிப்புகள் தெரியும் வரை பரவலான ஒரு மக்கள் போராட்டம் என்பதும் அதன் வெற்றி என்பதும் சாத்தியப்படாது என்று நினைக்கிறேன்.

     
    • Hari 10:47 am on April 8, 2011 Permalink | Reply

      There is no sound or excitement in Tamilnadu about Anna Hazare’s fasting. May be people knew where it will end.

      If we benefit from an act which became possible by corruption, does it mean we support corruption. For e.g if a hotel paid bribe to start a business, does patronising that hotel means we support corruption?

      • ரவி 5:16 pm on April 8, 2011 Permalink | Reply

        ஊழல் வேறு இலஞ்சம் வேறு.

        ஒரு திட்டத்துக்கு ஒதுக்கப்படும் பணத்தில் ஒரு பகுதியைச் சுருட்டுவது ஊழல்.

        பணமே தேவைப்படாத ஒரு பணிக்குப் பணம் கொடுத்து முடிக்கச் செய்வதும், தன்னிடம் உள்ள குறையை மறைக்க பணம் தருவதும் இலஞ்சம்.

        நாடு இப்ப இருக்கிற நிலைமையில் ஏதாவது ஒரு வகையில் எங்காவது இலஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு பெரிய தொழிலும் நகராது என்று நினைக்கிறேன்.

        தவறுகளை மறைக்க இலஞ்சம் தரும் நிறுவனங்களைப் புறக்கணிப்பது வேண்டுமானால் நடைமுறையில் சாத்தியம் ஆகலாம். எடுத்துக்காட்டுக்கு, மாசு உண்டாக்கும் ஆலைகளின் பொருட்கள்.

  • ரவி 4:50 am on December 1, 2008 Permalink | Reply
    Tags: புரட்சி,   

    நம்ம நாட்டில் புரட்சி வருமான்னு கேக்குறவங்க கிட்ட நிலைமை அந்த அளவு மோசமாகலைன்னு சொல்வதுண்டு. ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ரொம்ப மோசமா பாதிக்கப்படும்போது தான் போராட்டம், புரட்சி எல்லாம் வரும்னு நினைக்கிறேன்.

     
  • vinavu 12:02 am on October 13, 2008 Permalink | Reply
    Tags: , , , , , , , , , புரட்சி, , பொருளாதார, மஞ்சள் கடுதாசி, முதலாளி, முதலாளித்துவம், , வால் ஸ்டிரீட்,   

    அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!

    அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்கட்டுரை போய்ச் சேருவதற்கு உதவி செய்ய முடியும்.

    http://vinavu.wordpress.com

     
  • vinavu 2:48 am on October 8, 2008 Permalink | Reply
    Tags: , , தன்டனை, நீதி, நீதிபதி, நீதிமன்றம், புரட்சி, லஞ்சம்   

    தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது. http://vinavu.wordpress.com

     
  • ரவி 2:37 pm on August 10, 2008 Permalink | Reply
    Tags: , கஞ்சி, , சோத்துக் கட்சி, சோறு, பிழைப்பு, புரட்சி, மாற்றம், ,   

    முதல்ல சோறு, பிறகு கொள்கை என்று சொல்லும் ‘Pragmatist’கள் கடைசி வரை சோறு பொறுக்கிக் கொண்டே இருப்பார்கள். புரட்சி-விடுதலை-மாற்றம்- அதற்கான உழைப்பும் என்றுமே சோற்றுக்குப் பறப்பவர்களிடம் இருந்து வருவதில்லை.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel