Robin Cook எழுதிய Intervention படித்தேன். அவரது முந்தைய புதினங்களில் உள்ள மருத்துவ முக்கியத்துவம் போய் Dan Brown போல கிறித்தவ மர்மங்களுக்குள் புகுந்திருப்பது ஏமாற்றமே.
Tagged: புத்தகம் RSS
-
ரவி
-
ரவி
The Little Prince படித்தேன். அருமை. என்னைச் சுற்றி உள்ள குழந்தைகளில் பலரிலும் குட்டி இளவரசர்களைக் காண முடிகிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய இலக்கியம். பரிந்துரைத்த எழுத்தாளர் S. Ramakrishnan க்கு நன்றி.
-
ரவி
Seth Godin எழுதிய Tribes படித்தேன். 125 பக்கப் புத்தகம் பல நாட்களுக்கு உறங்க விடாமல் சிந்திக்க வைக்கப் போகிறது. கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
-
ரவி
வெள்ளி இரவு http://flipkart.com தளம் மூலம் மூன்று புத்தகங்கள் வாங்கினேன். நல்ல சேவை. தள வடிவமைப்பு, icici இணைய வங்கி மூலம் பணம் கட்டுவது இலகுவாக இருந்தது. இன்று (திங்கள்) பகல் அழகாக பொட்டலம் கட்டி அனுப்பி வைத்து விட்டார்கள்.
-
ரவி
நோபல் பரிசு வென்ற முகமது யூனுசு எழுதிய Banker to the Poor படித்தேன். ஒரு மர்ம நாவலின் விறுவிறுப்போடு வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. எல்லாரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல். ஒரு சிறு பொறி எண்ணம் எப்படி உலகையே புரட்டிப் போடுகிறது என்பது வியக்க வைக்கிறது
-
ரவி
ச. முகமது அலி எழுதி இயற்கை வரலாறு அறக்கட்டளை ( 04259 – 253252 ) வெளியிட்ட “பாம்பு என்றால்?” நூல் படித்தேன். இந்தியாவில் நான்கு வகை பாம்புகளுக்கு மட்டுமே நஞ்சு உண்டு என்பது முக்கிய செய்தி. திரும்பத் திரும்பத் துணுக்குத் தோரணங்களாக வரும் செய்திகள் அலுப்பு தந்தாலும், இயற்கை ஆர்வத்தில் கைக்காசும் பெரும் உழைப்பும் செலுத்தி வெளியிடப்படும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியன.
-
ரவி
செல்லமுத்து குப்புசாமி எழுதிய “பிரபாகரன் – ஒரு வாழ்க்கை” படித்தேன். நடுநிலையான நல்ல அறிமுகம்.
-
ரவி
Made in Japan படித்தேன். ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் மிகச் சிறிய தொடக்கமும் சிந்திக்க வைக்கிறது. சப்பானியர் வாழ்க்கை, சமூக அமைப்பு, தொழில் துறை குறித்து நிறைய அறிய முடிந்தது. கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்.
-
ரவி
The Lost Symbol படித்தேன். டாவின்சி கோடு வார்ப்புரு. முடிவு ஏமாற்றம் தான். 506 பக்கங்கள் படிக்க 11 மணி நேரம். உங்கள் படிக்கும் வேகம் என்ன?
-
ரவி
The Toyota way: 14 management principles from the world’s greatest manufacturer
By Jeffrey K. Liker படித்தேன். ஒவ்வொரு தொழில் முனைபவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல். தொழிலுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சப்பானியர்கள் பண்பாட்டிலேயே ஊறி உள்ள தொழில் நேர்த்தி பற்றி இன்னும் நிறைய படிக்க வேண்டும். -
ரவி
தியோடர் பாசுக்கரன் எழுதிய கானுறை வேங்கை படித்தேன். புனைவல்லா தமிழ்ப் படைப்புகள் விரும்புவோர் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள காட்டுயிர் ஆர்வலர்களான செல்வா, கார்த்திக் பாலா, சிவக்குமார், சுந்தர்.. தூண்டுதலால் காட்டுயிர் ஆர்வம் துளிர் விடத் தொடங்கியுள்ளது.
-
ரவி
Rich Dad Poor Dad படித்தேன். புத்தக்கத்தைப் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், நான் ஏற்கனவே எண்ணிப் பார்க்கும் சிலவற்றை நினைக்க வைத்தது. “பணத்தைச் சேமித்துப் பணக்காரனாக முடியாது” என்பது அதில் ஒன்று.
-
ரவி
படிக்க நினைத்திருக்கும் நூல்கள்:
1. எரியும் பனிக்காடு,
2.உ. வே. சா. எழுதிய என் சரித்திரம்நூலகத்தில் இருந்து எடுத்து வந்து ஆறு வாரம் ஆகியும் 100 பக்கம் தாண்ட முடியவில்லை. சொந்தமாக வாங்கி மெதுவாகப் படிக்க வேண்டும்.
3. India after Gandhi
4. The Little Prince- Antoine de Saint-Exupery- France- Gallimard- 1943
5. Wild Swans: Three daughters of China by Jung Chang
6. Empires of the word – A Language History of the world – by Nicholas Ostler published by Harper Perannial -
ரவி
நான் வித்யா படித்தேன். திருநங்கைகள் பற்றிய புரிதல், வித்யா பற்றிய மதிப்பு பல மடங்கு கூடியது. பாடநூலாக வைக்க வேண்டும்.
-
ulagam
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் http://balachandar.net/blog327-2009-01-20.html
-
ரவி
1. பாதி கடைகளில் கடன் அட்டை, பண அட்டைகளை வாங்கவில்லை. கையில் காசாக இல்லாததால் வாங்க எண்ணிச் சென்ற நூல்களையும் வாங்க வில்லை. அட்டைகள் மூலம் பணம் செலுத்த மொத்த புத்தக காட்சிக்கும் சேர்த்து ஒரு ஏற்பாடு செய்யலாம்
2. அரங்க வரைபடம் கண்காட்சி வரவேற்பரையில் கிடைக்கவில்லை. அரங்க எண்கள் வரிசையில் எந்த logicம் இல்லை. ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து இருக்குமாறு அரங்க எண்கள் வரிசை இருக்க வேண்டும்.
3. நான் வாங்க நினைத்த புத்தகம் எந்த கடையில் கிடைக்கும் என்று தெரியவில்லை. தேடிக் களைத்தேன். இந்த நூல் இந்த இந்த கடைகளில் கிடைக்கும் என்று ஒரு அச்சடித்த பட்டியல் அல்லது ஒரு தொடுதிரைக் கணினி / உதவி மையம்.
4. ஒவ்வொரு கடைக்கும், முடிந்தால் மொத்த கண்காட்சிக்கும் ஒரு “அதிகம் விற்ற நூல்கள்” பட்டியல்.
5. அரங்கிற்கு வந்து செல்ல முக்கிய இடங்கள் வழியாக வாடகைப் பேருந்துகளை இயக்கலாம்.
-
பாலாஜி
உண்மைதான். புத்தக கண்காட்சியில் விற்கவேண்டுமென்று எண்ணம் எந்தப் பதிப்பகத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. பத்ரி போன்றவர்கள் என்ன நினைத்துக்கொண்டு 10 புத்தகங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை.
போன மாதம் நடந்த பெங்களூர் புத்தக விழா சிறப்பாக இருந்தது. நல்ல தமிழ் பதிப்பகங்கள் மட்டும் அங்கு வந்திருந்தன. சென்னையில் கிடைத்தைவிடவும் பெங்களூரில் நிறைய தமிழ் புத்தகங்கள் கிடைத்ததாக இப்போது எனக்குத் தோன்றுகிறது.
-
-
Krishnan
Very valuable suggestions, hope BAPASI implements it at least in the next edition. Another thing to note is abysmal conditions prevailing in the canteen area, no proper disposal system for paper plates, no proper washing place.
சந்தோஷ் குரு
”காந்திக்கு பிந்தைய இந்தியா” (India after Gandhi) என்ற ஆங்கிலப் புத்தகம் கடந்த சில நாட்களாக என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ராமச்சந்திர குஹாவின் (Ramachandra Guha) எழுத்து நடையும், வரலாற்று அறிவும் வியக்க வைக்கிறது.
வரலாற்றினை இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும் அதே நேரம் அதன் விறுவிறுப்பு குறையாமல் வாசிக்கும் அனுபவம், சிலிர்ப்பூட்டுகின்றது. நம் பள்ளி பாடதிட்டத்தில் இதைப்போல வரலாறு கற்பிக்கப்பட்டிருந்தால், எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்.
ரவி
nஆவது முறையா The Alchemist படிச்சுக்கிட்டு இருக்கேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது விசயம் புரியுது. என்னோட விவிலியம் இதான்.
கலை 3:32 pm on September 18, 2009 Permalink |
//உங்கள் படிக்கும் வேகம் என்ன?//
முன்பானா very fast. இப்போ அதையெதுக்கு சொல்ல, hehehehe