Tagged: பாலா RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 12:56 pm on June 17, 2011 Permalink | Reply
    Tags: அவன் இவன், , பாலா   

    அவன் இவன் பார்த்தேன். தாக்கத்தை ஏற்படுத்தாத பிதாமகன் இரண்டாம் பாகம். தீவிரமான கதைகளில் இருந்து விலகி குறுகிய காலத்துக்குள் வணிக வெற்றி பெறும் படம் ஒன்றைத் தரும் அவசரத்தில் எடுத்திருப்பாரோ? இதே கதையை நந்தா ராசுகிரண், சேது விக்ரம், பிதாமகன் சூர்யா பாத்திரப்படைப்பில் அக்னி நட்சத்திரம் மாதிரி எடுத்திருந்தால் படம் கன்னா பின்னாவென்று ஓடியிருக்கும்.

    விசாலின் நடிப்பு கொடுமையாக இருக்கிறது. பாலாவின் மீதுள்ள மதிப்புக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம். ஒரே மாதிரியான கதைகள், மனிதர்கள், காட்சியமைப்புகளில் பாலா சிக்கிக்கொண்டுள்ளார். படம் பார்க்கப் போபவர்களுக்கு ஒரு நற்செய்தி: இந்தப் படத்தில் விசால், ஆர்யா, அவர்கள் காதலிகள் யாரும் இறப்பதில்லை.

    எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டு காத்திருந்து படத்தைப் பார்க்கும் கொடுமையை அனுபவிக்க முடியாமல் முதல் நாள் முதல் காட்சி ஐதராபாத் புறநகர் திரையரங்கு ஒன்றில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். அரங்கு நிறைந்து இருந்தது. ஆந்திரா மக்கள் எல்லா படங்களையும் இப்படி பார்க்கிறார்களா இல்லை விசாலுக்கு அவ்வளவு கூட்டமா தெரியவில்லை.

    பாலா எடுத்த 5 படங்களில் இந்தப் படத்துக்கு 5ஆம் இடம் :)

     
    • Santhosh Guru 10:04 pm on June 17, 2011 Permalink | Reply

      I didnt like the movie at all. I felt, the navarasa scene was the most mokkaiest scene in the whole movie.

      • Hari 2:38 pm on June 20, 2011 Permalink | Reply

        +1 for Santhosh thoughts. Waste of time and money. Even dhanush mappillai was much better.
        Arya was more tolerable than Vishal(who over acted). Navarasa scene was forced. The police treat scene was nice. Why the lead ladies are so dumb in Bala’s movies?

        • ரவி 11:55 am on June 25, 2011 Permalink | Reply

          //Why the lead ladies are so dumb in Bala’s movies?//

          விகடன் கேள்வி பதிலில் இதே கேள்வியை வாசகர் ஒருவர் பாலாவிடம் கேட்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன பதில்: “நான் loosu பொண்ணுங்களா தான் காட்டுறேனே தவிர, ஒரு போதும் கொச்சையாக காட்டுவதில்லை”. ஏற்றுக் கொள்ளக்கூடிய பதில் தான் ! ;)

      • ரவி 11:53 am on June 25, 2011 Permalink | Reply

        பாலா படங்களிலேயே அந்த நவரசக் காட்சி தான் ஆக மொக்கையான ஒன்று :)

    • புருனோ 8:39 am on June 26, 2011 Permalink | Reply

      விஷாலுக்கு நடிக்க தெரியும் என்று நிருபிக்க ஒரு படம் எடுத்துள்ளார்கள்

      # அவன் இவன்

    • புருனோ 8:40 am on June 26, 2011 Permalink | Reply

      தத்துவம்

      ஒரே கதையை நாலு விதமா எடுத்தா அது ஷங்கர்
      நாலு கதையை ஒரே விதமா எடுத்தா அது பாலா

      இதுக்கு மேல வாயை கிளறாதீர்கள :)

    • புருனோ 8:46 am on June 26, 2011 Permalink | Reply

      பல காட்சிகளும் வசனங்களும் (உதாரணம் குர்பாணி, இட ஒதுக்கீடு) வலிந்து திணிக்கப்பட்டுள்ளது அயர்ச்சியாக உள்ளது

  • ரவி 2:32 am on February 24, 2009 Permalink | Reply
    Tags: , கேட்டதில் பிடித்தது, தேவை, பாலா   

    “கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட அவர் மக்களுக்குத் “தேவைப்படுகிறார்” என்பதே உண்மை” – திரைப்பேட்டியில் இயக்குநர் பாலா

     
  • ரவி 2:12 am on February 7, 2009 Permalink | Reply
    Tags: , பாலா, வார்ப்புரு   

    1. தலைவன் கோபக்காரன், வீரன், முரடன், ஏதோ ஒரு விதத்தில் ஒதுக்கப்பட்டவன். சேதுவில் மன நோயாளி, நந்தாவில் சிறுவயதுச் சிறையாளி, பிதாமகனில் சுடு காட்டில் வளர்ந்தவன், நான் கடவுளில் இளந்துறவி.
    2. தலைவி அப்பாவி.
    3. கடைசியில் முதன்மை பாத்திரம் ஒன்று கண்டிப்பாகச் சாகும்.
    4. தலைவன் முதலில் இருந்த இடத்துக்கே திரும்பிச் செல்வான். (சேது, பிதாமகன், நான் கடவுள்)
    5. Montage பாட்டு, சோகப் பாட்டு.

     
    • அன்புடன் பாலா 6:02 am on February 7, 2009 Permalink | Reply

      ரவி,
      பாலாவின் வார்ப்புருவை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி :-)

    • ரவி 9:44 am on February 7, 2009 Permalink | Reply

      அன்புடன் பாலா

      ;)

    • santhoshguru 10:10 pm on February 8, 2009 Permalink | Reply

      கொஞ்ச நாட்கள் முன்பு என் நண்பர்களோடு போட்ட வெ.கூ (வெட்டி கூட்டம்) ஒன்றில் நான் கண்டெடுத்தது இது: Ordinary people in extra-ordinary situation (Sethu, Nanda) or Extra-ordinary people in ordinary situation (Pithamagan, Nanda).

    • புருனோ 10:18 am on March 4, 2009 Permalink | Reply

      கிழித்து தொங்கப்போடும் அளவிற்கு படம் ஒன்றும் மோசமாக இல்லை

      கடைசி வசனத்திற்கு செய்தது போல் தமிழ் அல்லாத பிற வசனங்களுக்கு தமிழில் எழுத்து போட்டிருக்கலாம். ஜெயமோகனிடம் அதை எதிர்பார்க்க முடியாது எனப்து வேறு விஷயம்

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel