முன்தினம் பார்த்தேனே பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. புதிய இசையமைப்பாளர் தமன் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கிறார். ஒரே மாதிரியான இசையைத் தவிர்த்தா நல்லா இருக்கும்.
Tagged: பாட்டு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
கார்த்திக்
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இந்த கர்நாடக சங்கீதம் படிச்சுகினு, ஏதோ இசை எங்களால தான் வாழுதுங்குறாங்களே, அவங்களுக்கு இசை உருவாக்கத் தெரியுமா? இல்ல மத்தவங்க போட்டு தரத பாட மட்டும் தான் தெரியுமா? எனக்கு தெரிஞ்ச வர, எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல. அப்பறம் எதுக்கு இப்படி அலப்பர பண்ராங்கன்னு தெர்ரல!!!
அப்பறம், இந்த ஆலாபனை பண்ராங்களே, இது இவங்க உருவாக்குனதா? இல்ல, அதுவும் மத்தவங்க போட்டு வச்சதுதானா?
-
ரவி
என்ன சொல்லி பாராட்ட?
-
யாத்ரீகன்
ஒருவித குழந்தைதனம் அங்காங்கே தெளிக்கும் அந்த குரல் மிகவும் வசிகரமாயிருக்குதே..
-
கலை
அருமையாக இருக்கு.
-
கலை
தமிழிஷ் தளத்திற்கு இங்கே அழுத்தி போகும்போது, குறிப்பிட்ட இந்த இடுகை வரவில்லையே. எப்படி vote போடுவது?
-
ரவி
ஏற்கனவே அந்த இடுகையை அங்கு யாராவது இட்டிருந்தால் தான் வாக்களிக்கச் சொல்லும். இல்லாவிட்டால், புதிதாக இடுகையைச் சேர்ப்பதற்கான படிவத்தைக் காட்டும். அதைச் சேர்த்து விட்டால், தானாக உங்களின் ஒரு வாக்கைக் காட்டும்.
-
-
ரவி
இந்த ராகம் இன்னின்ன பாட்டுல வருதுங்கிறாங்க. ஆனா, இந்த பாட்டு எல்லாம் கேக்க வேற வேற மாதிரி இருக்கே ஏன்னு புரியல.
-
புருனோ
அதாவது ரவி, PHPல் அமைந்த தளம் என்றாலும் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளதல்லவா. அதே போல் asp தளங்கள் ஒவ்வொன்றும் வேறு மாதிரியல்லவா.
-
புருனோ
வலைபதிவுகளை, blogger, wordpress, movable type, 360, என்று பார்ப்பது போல் சினிமா பாடல்களை ராகங்களை வைத்து பார்க்கலாம்
-
ரவி
ஐயோ.. உவமை தாங்கலியே
-
புருனோ
புரிகிறதா
, புரியவில்லையா
[புரியவில்லை என்றால் மேலும் உவமைகள் வருமோ என்று பயந்து பொய் சொல்ல வேண்டாம்]
-
ரவி
உவமை புரியுதுங்க. பழகிய, பயின்ற கண்களுக்குத் தான் பின்னுள்ள நுட்பம் புரியும்.
-
-
ரவி
இளையராசா தர மறந்த பெண் குரல் பாடல்.
-
ரவி
தனம் பாடல்கள் கேட்டேன். இனி இளையராசாவிடம் இருந்து புதிய மெட்டுகள் வருமா?
நான் கடவுள் படத்திலாவது ஒரு பாட்டும் பின்னணி இசையும் தேறும் என்று காத்திருக்கிறேன். -
ரவி
சத்யம் பாடல்கள் கேட்டேன். Harris Jayaraj வார்ப்புரு அலுக்கத் தொடங்கி விட்டது. காலத்தை வென்று நிற்கும் இசையை தரப் போகிறவருக்காக காத்திருக்கிறேன்.
-
புருனோ
லேசா லேசா தவிர அவரது பாடல்கள் சராசரியாகவே இருக்கின்றன
-
-
ரவி
சரோசா பாடல்கள் கேட்டேன். யுவன் கடைசியா எந்தப் படத்துக்கு நல்லா இசை அமைச்சார்?
-
ரவி
சக்கரக்கட்டி பாடல்கள் – மருதாணி, எப்போது பெண்ணானேன் பாடல்கள் பிடிச்சிருக்கு. காலத்தை வெல்லுமா தெரியல. மதுசிறீ தமிழ்ப் பெண்ணா? இன்னும் நல்லா தமிழைப் பாடலாம்.
-
பிரேம்குமார்
மதுஸ்ரீ தமிழ் பெண்ணா?// ஹா ஹா ஹா…. அவுங்க டமில் பாடும் பெண்
//இன்னும் நல்லா தமிழைப் பாடலாம்//
ஓ! இதுல அவுங்க தமிழ் தான் பாடியிருக்காங்களா
))
-
-
ரவி
Jaane Tu Ya Jaane Na – ஒரு வாரம் திரும்பத் திரும்பக் கேட்ட பிறகு எல்லா பாட்டும் நல்லா இருக்கு. கபி கபி அதிதி – என் தெரிவு.
ரவி 11:11 am on July 14, 2009 Permalink |
//எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல//
குன்னக்குடி வைத்தியனாதன், L. subramaniam போன்றவர்கள் (திரைப்பட) இசையமைப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்துசுத்தானி போன்ற எல்லா மரபார்ந்த இசையைக் கற்றவர்களிலும் கண்டிப்பாக இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஏன் ஒரு இசையமைப்பாளராக வெற்றி பெறவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் தானே? கீர்த்தனைகளையும் தியாகராசர் போல யாராவது ஒருவர் தானே முதலில் இயற்றி இருக்க வேண்டும்?
பாடுவதும் ஒரு திறமை தானே? போட்டு வைத்ததை எல்லாரும் இலகுவாகப் பாடலாம் என்றால், எல்லாரும் பாடகர்களாகி விட மாட்டார்களா? போட்டு வைத்த இசையைப் பாடுறதுன்னாலும் அதிலும் தனித்துவம், நுணுக்கம் காட்டினா தான் நிலைக்கலாம்னு நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. ஆனா, அப்படி ஏதாச்சும் இருக்கணும
மணிகண்டன் 2:57 pm on July 14, 2009 Permalink |
இசைஅமைப்பாளர் அப்படின்னா சினிமாவுக்கு இசை அமைக்கனுமா ?
-
yemkay 11:03 am on July 19, 2009 Permalink |
//பாடுவதும் ஒரு திறமை தானே
ஆம். ஆனால், அதை ஒரு உருவாக்கும் திறனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. I’d call it as ”performance”. ஆனால், நாம் performance-க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை creativity-க்கு கொடுப்பதில்லை. எப்படி ஒரு நடிகனுக்கு, இயக்குனரை விட அதிக முக்கியத்துவம் தருகிறோமோ, அத போல தான் ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.
சினிமாவில் மட்டுமல்ல, பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழர்களின் பலமே உருவாக்கும் திறன் மற்றும் கடும் உழைப்பில் தான் அடங்கி இருகிறது. ஆனால் இன்றைய சூழலில், செயல் திறன் (performance) எனும் மோகத்தில் தான் பெரும்பாலோனரின் நாட்டமே.
சில உதாரணங்கள்,
abacus training:
ஒரு கணக்கை விரைவாக தீர்க்கும் வித்தையா நம் குழந்தைகளுக்கு தேவை? பாட புத்தகத்தில் இல்லாத வேறொரு கணக்கை கொடுத்தால், அதையும் தீர்க்கும் அறிவைதான நாம அவர்களுக்கு கொடுக்கணும்? விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை?
திருக்குறள் ஒப்பிப்பு, spelling bee:
1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்
என்னுடைய முதல் கேள்வியும், இது மாதிரியான ஒரு கோபத்தின் வெளிப்பாடு தான். யாரையும் புண்படுத்த சொல்லவில்லை.
ரவி 7:45 am on July 20, 2009 Permalink |
//ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.//
இதில் தெளிவில்லை. மரபார்ந்த இசைத்துறையிலும் பாடகர்களுக்கு உள்ள மதிப்புக்கும் கூடுதலாக இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களுக்கும் மதிப்பு உண்டுன்னு தான் நினைக்கிறேன்.
//பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை//
//விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை? //
//1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்//
ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல
கார்த்திக் 10:28 am on July 20, 2009 Permalink |
//ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல
ஏதோ உளறிட்டேன்
sri 7:45 am on July 24, 2009 Permalink |
dei karnadaga sangeetham pathi unkku pesa arugatha illada naaye
புருனோ 9:08 am on July 24, 2009 Permalink |
தங்களின் மேலான கருத்திற்கு பணிவான வணக்கங்கள் நண்பரே
ஓவியன் 11:20 pm on September 1, 2009 Permalink |
ரவி. நான் சொல்லல? கார்த்திக் தெளிவா சொன்ன புரிஞ்சுக்குவார்னு