Tagged: பயணம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 11:49 am on June 25, 2011 Permalink | Reply
    Tags: குல்லு மணாலி, சுற்றுலா, பயணம்   

    குல்லு மணாலி சென்றிருந்தோம். இவ்வளவு மட்டமாகப் பராமரிக்கப்படும் ஒரு சுற்றுலா நகரத்தைப் பார்த்ததே இல்லை. நகரைச் சுற்றி உள்ள பனி மலை, பியாசு ஆறு முதலிய இயற்கைக் காட்சிகள் நன்றாக இருந்தாலும், மணாலி நகரம் மிகவும் மாசுபட்டு, குப்பையும் நாற்றமுமாக உள்ளது. விடுதி, உணவு வசதிகள் மிகவும் சுமாராகவும் நகரெங்கும் காசு பிடுங்கும் ஏமாற்றுக் காரர்களாகவுமே உள்ளனர். போதாக்குறைக்கு, “நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தி நமது முதல் மொழி” என்று வேறு ஒரு விடுதிக்காரர் தனது சொற்பொழிவைத் தொடங்கினார் :) ஆண்டு முழுக்க பனி மலை தென்படும் என்பதைத் தவிர சிறப்பாக ஒன்றும் தோன்றவில்லை. இதை விட தென்னக மலைச் சுற்றுலா பகுதிகளே எவ்வளவோ சிறப்பாக உள்ளன. அப்படியே மணாலிக்குப் போக விரும்பினால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஏதாவது ஒரு உயர்தர நட்சத்திர விடுதிக்கு உங்கள் சொந்த வண்டியுடன் செல்வது நல்லது.

     
    • nradhakn 4:23 pm on June 25, 2011 Permalink | Reply

      நம்மூரில் இடவேறுபாடின்றி நடக்கிறது. ஒரு முறை சுற்றுலாத்தலமொன்றில் சிறுநீர் கழிக்கலாமென(பெண்களுக்கு) ஒரு கழிப்பிடத்தை அணுக காரிலிருந்து வந்ததைப் பார்த்ததும் தலைக்கு ரூ.5 கேட்டார்கள்!

      • ரவி 11:26 am on June 28, 2011 Permalink | Reply

        உண்மை தான். ஒரு பொருளுக்கு உரிய உண்மையான விலையை விடுத்து “நீ தான் இவ்வளவு காசு வைச்சிருக்கீல்ல..எனக்கு கொடுத்தா குறைஞ்சா போயிடுவ”ங்கிற மனநிலை வந்து விட்டது :( பொதுவாகவே, அன்றாட உழைப்பாளிகளிடம் பேரம் பேசக்கூடாது என்று முன்னர் ஒரு கொள்கையே வைத்திருந்தேன்.. ஏனெனில், மிகப்பெரிய கடைகளில் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கி வரும் நாம் அன்றாட உழைப்பாளிகளிடம் பேரம் பேசி கோட்டையா கட்டப் போகிறோம் என்று எண்ணுவேன்.. ஆனால், இப்போது எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு வழிகளைப் பார்க்கத் தொடங்கி விடுகிறேன்…

        ஒரு சுற்றுதலா தளத்தில் உள்ள மதுக்கூடத்தில் விற்கும் beerஐக்கூட பேரம் பேசி வாங்கலாம் என்ற தெரிந்த போது மண்டை காய்ந்து விட்டது.

    • Hari 10:14 am on June 27, 2011 Permalink | Reply

      Manali is much better after rainy season..You get a chance to try skiing, para gliding, water sports, baloon riding etc(though everything cost a bit), which i dont think is available in south india(atleast i dont know..Lemme know so that i will plan for same). Also you can try apple wine there. Pretty nice(only in TN we dont get good local regional speciality spirit) In the place where i stayed, they gave complimentary breakfast.

      • ரவி 11:28 am on June 28, 2011 Permalink | Reply

        hari, lot of our friends gave good review for Kullu Manali. May be we went in the wrong season. But, we hated the city’s culture. Everything from the bus we took, the hotel we first stayed (we switched later) to the city tourist cabs were horrible. The main thing that disappointed is that we couldn’t take a peaceful walk as the city was nasty. I guess paragliding is offered in some south indian hill stations too. not sure of other activities.

  • ரவி 7:19 am on February 24, 2011 Permalink | Reply
    Tags: , பயணம்   

    பயணம் பார்த்தேன். விமானக் கடத்தல் பின்புலத்தில் ஒரு அசட்டுத்தனமான மேடை நாடகம். குறிப்பிட்ட ஒரு மதத்தை ஏற்றியும் இன்னொன்றைத் தாழ்த்தியும் காட்டுவது எரிச்சலூட்டுகிறது.

     
  • சந்தோஷ் குரு 3:43 am on August 11, 2009 Permalink | Reply
    Tags: கர்நாடகா, பயணம்   

    கடந்த வாரம் வட கர்நாடகாவின் பல இடங்களுக்கு சென்றுவந்தேன். வனமும், மலையும், கடலும் நிறைந்த பகுதி அது. ஜோக் அருவியின் கம்பீரமான அழகு ஒரு பக்கம், ஹொரநாடு மற்றும் சிருங்கேரி காடுகள் தரும் பயம் கலந்த கிளர்ச்சி ஒரு பக்கம், ஆர்ப்பாட்டமில்லாத முருடெஸ்வர் கடல், எவ்வளவு முறைச்சென்றாலும் இளமை குறையாமல் ஈர்க்கும் பேலூர்-ஹளபீடு சிற்பங்கள் என்று மூன்று நாட்கள் அருமையாக கடந்தது.

     
    • ரவி 6:46 am on August 11, 2009 Permalink | Reply

      வெளிநாட்டுக்குப் போய் அடிச்சுப் பிடிச்சு இடங்கள் பார்த்தாலும், உள்நாட்டில் உருப்படியா சுற்றுலா போகத் தோண மாட்டேங்குது :( குறைந்தபட்சம் தென்னிந்தியாவையாவது ஒரு சுற்று வரணும்.

  • ulagam 2:06 am on May 8, 2009 Permalink | Reply
    Tags: ஒக்கனெக்கல், காவிரி, பயணம்   

    இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று நானும் எனது அறைநண்பர்களும் ஒக்கனெக்கலுக்கு செல்கிறோம். அது பற்றி உங்களுக்கு தெரிந்த விடயங்களை கூறுங்கள்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel