Tagged: பதிவர் வட்டம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 5:36 am on February 5, 2010 Permalink | Reply
    Tags: , , , பதிவர் வட்டம், , ,   

    சமீபத்தில் ஒரு பதிவரின் திரைப்படம் குறித்து எழுதியிருந்த இடுகை பிடித்திருந்ததால் “நல்ல நடை. சொல்ல வந்ததை தெளிவாக கூறியுள்ளீர்கள்” என்று மறுமொழி எழுதினேன்.

    அடுத்த சில நிமிடங்களிலேயே, மற்றொரு பதிவர் என்னை தொலைபேசியில் அழைத்து “ஏன் பாராட்டுகிறீர்கள். நீங்கள் எல்லாம் பாராட்டினால் அவன் பந்தா தாங்காது. இதெல்லாம் ஒரு எழுத்தா” என்ற ரீதியில் தாக்க ஆரம்பித்து விட்டார். “ஐயா சாமி, எனக்கு பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்று கூறுவேன்; பிடிக்க வில்லை என்றாலோ அல்லது அதில் எதாவது கருத்தில் எனக்கு முரண்பாடு என்றாலோ அதை கூறுவேன். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் மறுமொழியில் கூறுங்கள்” என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது

     
    • ரவி 1:21 pm on February 5, 2010 Permalink | Reply

      என்ன கொடுமை இது? ஒரு வகையில் விருதுகள், இந்த வாரப் பதிவர் போன்ற விசயங்கள் வலையுலகில் அரசியல் புக காரணமாயிருக்கின்றன.. வலைப்பதிவுலகையும் (சிறு) பத்திரிக்கை உலகு மாதிரி ஆக்கிடுவாங்களோ..

  • புருனோ 6:21 pm on September 11, 2009 Permalink | Reply
    Tags: அமிலம், நச்சு, நஞ்சு, பதிவர், பதிவர் வட்டம், , வலைப்பதிவர்க, , வாந்தி   

    இன்று மதியம் கழிவறை கழுவப்பயன்படும் அமிலத்தை அறை சுத்தம் செய்பவர் எனது அறைக்கு முன்னால் கொட்டிவிட்டார் (கை தவறி விழுந்து பாட்டில் உடைந்து கொட்டி விட்டது). என்ன செய்வதென்று தெரியாத அவர், அதில் தண்ணீர் ஊற்றி கழுவ முயன்றதில் அமிலவாயு பரவி, அருகில் உள்ள அறைகளில் உள்ளவர்களுக்கெல்லாம் (நான் உட்பட) ஒரே இருமல், வாந்தி, மூச்சடைப்பு, கண் எரிச்சல், தோல் அரிப்பு

    பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மொட்டை மாடி வந்து நல்ல காற்றை சுவாசித்தபின்னர் தான் சிறிது நிம்மதி

    அமிலவாயுவை சுவாசித்த போது வந்த வாந்தி, எரிச்சலை விட அதிகம் வாந்தி, எரிச்சல், மூச்சடைப்பு (சில நாட்கள் கழித்து இணையம் பக்கம் வரும் நான்) இன்று வாசித்த சில இடுகைகளில் ஏற்பட்டது துர்பாக்கியமே :(

     
  • புருனோ 11:06 am on August 10, 2008 Permalink | Reply
    Tags: , பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம்   

    10.08. 2008 நடந்த சென்னை வலைப்பதிவர்
    சந்திப்பு குறித்த என் இடுகை இங்கு உள்ளது

     
  • புருனோ 2:41 am on August 1, 2008 Permalink | Reply
    Tags: , தமிழ்பதிவுகள், , பதிவர் வட்டம்,   

    http://tamilmaanam.blogspot.com/ பார்த்தீர்களா. வடிவமைப்பை வைத்து அது யாரால் நடத்தப்படுகிறது என்பதை ஊகிக்க முடிகிறது

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel