நா. பார்த்தசாரதியின் பொன் விலங்கு புதினத்தில் கதைத் தலைவன் ஒரு கல்லூரி விரிவுரையாளன். நூலகத்தில் அமர்ந்து சேக்சுப்பியரின் நாடகத்தைப் படித்துக் கொண்டிருப்பான். அப்போது கல்லூரி முதல்வர் அங்கு வந்துள்ளதைக் கவனிக்காமல் தொடர்ந்து அமர்ந்து படித்துக் கொண்டிருப்பான். முதல்வர் சென்ற பிறகு, அவர் வந்த போது இப்படி இருந்தது மரியாதைக் குறைவாக உள்ளதே என இன்னொருவர் வினவுவார். அதற்குக் கதைத் தலைவன் கூறுவான: நான் சேக்சுப்பியரையே உட்கார்ந்து தான் படிக்கிறேன். கல்லூரி முதல்வர் அவரை விடப் பெரியவரா?
(ரொம்ப நாள் முன்பு படித்த புதினம். ஆனால், இந்நிகழ்வு கிட்டத்தட்ட இதைப் போலவே ஏதோ ஒரு புதினத்திலாவது வரும்
)
கிரந்த உச்சரிப்புகளை விடுத்துத் தமிழ் எழுத்துகள் / உச்சரிப்புகளில் சொன்னால் பிறர் மனம் வருத்தப்படும் என்று நினைப்பதை இதனுடன் ஒப்பிடலாமா? ஒருவரின் மகிழ்ச்சி முக்கியமா அல்லது பல நூறு ஆண்டுகள் ஆக்கி முதிர்ந்துள்ள மொழியின் வழக்கங்கள் முக்கியமா?
பிற மொழியில் ழகரம் இல்லை என்றால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. செருமானிய மொழியில் ramanujam என்பதை ராமானுயம் என்றால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ர, ல போன்ற முக்கிய ஒலிகள் உலகின் பல மொழிகளிலும் இல்லை. ஆனால், நம் மொழியில் சில ஒலிகள் இல்லாவிட்டால் மட்டும் ஏன் சங்கடப்படுகிறோம்?
பிறருக்கு மதிப்பு தருகிறோம் என்ற பெயரில் மொழி, பண்பாட்டுச் சிறப்புகளை மதிக்காமல் பிழையாகச் செய்துவிட்டு அதையே புது இலக்கணமாக மாற்ற நினைக்க வேண்டாமே?
புருனோ 1:21 pm on August 7, 2008 Permalink |
போக போக சரியாகிவிடும்
எனது பேராசிரியர் ஒருவர் கூறியது. வாழ்க்கையில Thanks சொல்வதற்கும் Sorry சொல்வதற்கும் தயங்கவே கூடாது