சென் கவிதைகள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் எசு. இராமகிருசுணன் எழுதிய கூழாங்கற்கள் பாடுகின்றன படித்தேன். அங்கங்கு தயிர்மை நடை உறுத்தினாலும், பரவாயில்லை. வழ வழா விளக்கங்களைத் தவிர்த்து இன்னும் நிறைய கவிதைகளை எடுத்துக் காட்டி இருந்தால் நன்றாக இருக்கும்.
Tagged: நூல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
கிருசுணன் ரஞ்சனா எழுதிய “இப்போது அவை இங்கு வருவது இல்லை” படிக்க முயன்றேன். ஒவ்வொரு பத்தியிலும், எண்ணற்ற இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதால் படிக்கப் படிக்கத் தலைவலியும் எரிச்சலுமே மிஞ்சின. முக்கியமான ஒருமை-பன்மை வேறுபாடுகள், சந்தி இலக்கணத்தைக் குழி தோண்டிப் புதைப்பது போலவே பலரும் செயல்படுகின்றனர். அச்சில் உள்ளது எல்லாம் சரி என்று நினைக்கும் மனப்பாங்கு உள்ளதால், வருங்காலத்தில் தமிழ் இலக்கணத்தைச் சிதைப்பதில், மறக்கடிப்பதில் போய் தான் முடியும். எழுத்தாளருக்கு எழுதத் தெரியாவிட்டாலும், பதிப்பகத்தின் தொகுப்பாசிரியர் என்ன செய்கிறார்? உயிர்மை பதிப்பகம் என்பதற்குப் பதில் தயிர்மை பதிப்பகம் எனச் சொல்லலாம்.
ரவி
1. வாங்கிய கையோடு படிக்கப்படாத நூல், படிக்கப்படுவதன் சாத்தியம் குறைவு.
2. மொத்தமாக பல புத்தகங்கள் வாங்கினால், என்ன வாங்கினோம் என்பதே கொஞ்ச நாள் கழித்து மறந்து போகும். வீடு மாற்றும் போது தான் இப்புத்தகங்கள் இருப்பது தெரியும்.
3. புத்தகம் இரவல் கொடுத்தால், ஒன்று நண்பனை மறக்க வேண்டும் அல்லது புத்தக்கத்தை மறக்க வேண்டும்.
….
-
புருனோ
-
mayooresan
ரவி, கின்டில் வாங்கும் உத்தேசம் உள்ளதா? எனது அன்ரொயிட்டில் கின்டில் செயலி பயன்படுத்துகின்றேன். மிகவும் பிடித்துள்ளதால் கின்டில் வாங்கலாம் என்று ஒரு யோனை
-
ரவி
வாங்க ஆசை தான். ஆனால், புத்தகம் வாங்குவது எளிதாகி விடும் என்பதால் கணக்கு வழக்கு இல்லாமல் வாங்கித் தள்ளி விடுவேனோ என்று ஒரு அச்சம்
தனியாக கிண்டில் வாங்குவதை விட இன்னும் பல விசயங்கள் செய்வது போல் ஒரு tabletஏ வாங்கி விடலாமோ என்று தோன்றுகிறது..
-
ரவி
Rework படித்தேன். எல்லா தொழில்முனைவர்களும் படிக்க வேண்டிய நூல்.
-
mayooresan
ஒலிப் புத்தகமாக வாங்கிக் கேட்டேன். நிச்சயமாக தற்கால நவீன தொழில் முனைவர்கட்கான புத்தகம்.
தொழில் முனைப்பு இல்லாதவர்கட்கு கூட அதன் மேல் ஒரு பற்றை ஏற்படுத்தும் நூல்.
ரவி
Femina இதழ் தமிழில் வந்திருக்கிறது. “அட்டை கூடுதல் சிறப்புக் கட்டுரை” போன்ற கொடூரமான தமிழாக்கங்கள் இருந்தாலும், அவர்களது எல்லைக்கு உட்பட்டு நன்றாகவே தமிழாக்கி உள்ளார்கள். “கணவர் இல்லாமல் ஊர் சுற்றுவது எப்படி?” போன்ற கட்டுரைகளைக் காண முடிகிறது
இது போன்ற இதழ்களுக்குத் தமிழில் சந்தை இருக்கும் என்றால் Reader’s digestஐயும் யாரும் தமிழில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
ரவி
இரா. நடராசன் எழுதிய ஆயிசா படித்தேன். ஒரே ஒரு சிறுகதையை மட்டும் ஒரு நூலாக பல பதிப்புகள் வெளியிடும் அளவுக்குப் புகழ் பெற்றிருக்கிறது. இந்தியக் கல்வி முறை எப்படி செக்கு மாடுகளை உருவாக்கவும் அறிவுக்கூர்மை உள்ள மாணவர்களைத் தண்டிக்கிறது என்பதைப் பற்றியும் சொல்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் போல சோகம் தளும்ப முடித்தது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். நல்ல வேளை, எனக்குப் பள்ளியில் மிக நல்ல ஆசிரியர்கள் கிடைத்தார்கள் !
ரவி
Jim Collins எழுதிய Good to Great படித்தேன். சாதாரணமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் எப்படி காலத்தைக் கடந்த நிறுவனங்களாக மாறுகின்றன என்பதை ஐந்தாறு ஆண்டுகள் ஆய்வு செய்தி எழுதி இருக்கிறார். கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
ரவி
Seth Godin எழுதிய Linchpin படித்தேன். எங்கிருந்தாலும் நாம் ஒரு அச்சாணி போல இருக்க வேண்டும் என்கிறார். தற்காலக் கல்வி முறை எப்படி ஒரு மிகப் பெரிய மோசடி என விளக்குகிறார். செய்யும் தொழிலை கலையாகப் பார்த்து, உலகுக்கான பரிசாக அளிக்க வேண்டும் என்கிறார். புத்தகம் கொஞ்சம் வழா வழா கொழ கொழா தான். ஆனால், கரு முக்கியமானது. அவருடைய வலைப்பதிவைப் படிப்பவர்களுக்குப் புதிதாக ஏதும் இருக்காது.
ரவி
பா. ராகவன் எழுதிய Maoist படித்தேன். பாமரரும் புரிந்து கொள்ளும் விறுவிறுப்பான எளிய நடையைப் பாராட்டாமல் விட முடியாது.
ரவி
பல்லவி எழுதிய சீனா:விலகும் திரை படித்தேன். அருமையான மொழிபெயர்ப்பு நூல். சீனா பற்றி பல்வேறு மட்டங்களிலான புரிதலை மேம்படுத்தியது.
-
கலை
தலைப்பைப் பார்த்தால் புத்தகம் வாசிக்க வேண்டும்போல் உள்ளது.
-
சந்தோஷ் குரு
சமீபத்தில் படித்த தமிழ் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது. பயணக்கட்டுரை போன்ற நடையும், சீனா பற்றிய பல செய்திகளை விரிவான பார்வையில் தந்த ஒரு நல்ல புத்தகம். இதை போன்று சுவையான அதே சமயம் செறிவான பலதுறைகளைப் பற்றி தமிழில் புத்தகம் வந்தால் ஆங்கிலத்தில் படிப்பதைவிட தமிழில் படிப்பதற்கே முன்னுரிமை கொடுப்பேன்
-
ரவி
ஆமாம், இந்த வகையில் கிழக்கின் நேரடிப் புத்தகங்களை விட மொழிபெயர்ப்புப் புத்தகங்களை நம்பிப் படிக்கலாம்
-
புத்தகம் இரவல் கொடுப்பது என்பது நூலகங்களில் மட்டுமே நடைபெறுவது
நண்பர்களுக்குள் இரவல் என்பதே கிடையாது
புத்தக தானம் தான்