Tagged: நந்தலாலா RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 4:58 pm on November 28, 2010 Permalink | Reply
    Tags: , நந்தலாலா   

    நந்தலாலா பார்த்தேன். இது போன்ற மாறுபட்ட படத்தைத் தயாரிக்கத் துணிந்த ஐங்கரன் நிறுவனம் பாராட்டுக்குரியது. படத்தின் துவக்கத்தில் பெயர் வரும் நீரோட்டக் காட்சியும், கடைசியல் மலைப்பாம்பு வரும் காட்சியும் அருமை. மற்றபடி, படம் பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. கொஞ்சம் மாறுபட்டு எடுத்தாலும் “ஆகா உலகப்படம், தமிழ்த்திரையின் முதல் படம்” என்ற வகை விமர்சனங்கள் எல்லாம் “காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு” வகை தான். இளையராசா ஒரே பின்னணி இசையை பல ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறார். குழப்பமான, முரணான பாத்திரப்படைப்பு. ஆழம் இல்லாம நிகழ்வுகள். அன்னைவயல், தாய்வாசல் போன்ற சிறுபிள்ளைத் தனமான பெயரிடல்கள். கதை எந்த ஊரில் நடக்கிறது என்ற தெளிவின்மை. மசாலாத்தனமான, தமிழ்த் திரை இலக்கணம் மீறாத முடிவு. சப்பானியப் படத்தின் தூண்டுதலில் எடுத்தும் நன்றி தெரிவிக்காதது மிகப் பெரிய நேர்மையின்மை. எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் ஒரு முறை பார்க்கலாம்.

     
    • ssr.sukumar 5:26 pm on November 28, 2010 Permalink | Reply

      பிலிம் சேம்பரில் பிற மொழிப்படங்கள் மாதம் ஒருமுறை போடுவார்கள்,அங்கத்தினர்களுக்கு.முடிந்தால் பார்க்கவும்.

      • ரவி 10:42 am on November 30, 2010 Permalink | Reply

        நன்றி சுகுமார். திரைப்படக் கழகத்துக்கு வர வாய்ப்பில்லை. DVDகள், torrentகள் தான் இப்ப. கோவையில் கோணங்கள் அமைப்பு தொடர்ந்து உலகப்படங்களைத் திரையிட்டு வருகிறது.

  • ரவி 10:27 pm on January 15, 2009 Permalink | Reply
    Tags: , , நந்தலாலா,   

    நந்தலாலா பாடல்கள் கேட்டேன். ரொம்ப நாள் கழித்து இளையராசாவிடம் இருந்து ஆறுதலான பாடல்கள். அவரே நிறைய பாட்டு பாடாமல் இருந்தா நல்லா இருக்கும். படத்தின் பாடல்கள், ஒளிப்படங்கள் எல்லாம் இது kikujiroவின் தழுவலோ என்று நினைக்க வைக்கின்றன.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel