கடந்த இரண்டு தேர்தல்களிலும், “இந்தக் கட்சி வெல்ல வேண்டும் என்று நினைத்து வாக்களிப்பதற்குப் பதில், எப்படியாகினும் சில கட்சிகள் வென்று விடக்கூடாது” என்று உறுதியாகத் தோற்கக் கூடிய கட்சிகளுக்கே வாக்களிக்க நேர்ந்தது
49 – 0 போடலாம் என்றால் உள்ளூர் வாக்குச்சாவடி முகவர்களாக சித்தப்பா, பெரியப்பாக்களே இருக்கிறார்கள் ! வாக்களிப்பு எந்திரத்திலேயே 49 – 0 வைச் சேர்த்தால் நன்றாக இருக்கும். எத்தனை விழுக்காடு 49-0 வாக்குகள் விழுந்தால் தேர்தல் சீர்திருத்தம் வரும் என்று தெரியவில்லை.
Tagged: தேர்தல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
ஈழம், தமிழக மீனவர்கள் பிரச்சினைகளை முன்னிட்டுக் காங்கிரசை மட்டும் தோற்கடிக்க முனையும் இயக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. உள்ளூர் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாத தேசிய கட்சிகள் வரும், போகும். அதனால், பதவிகளுக்காக காங்கிரசு போன்ற கட்சிகளுக்கு ஆதரவு தரும் அனைத்துத் தமிழகக் கட்சிகளுமே முதன்மைக் குற்றவாளிகள். தமிழகக் கட்சிகளைப் பகைத்துக் கொள்ள விரும்பாதவர்களே காங்கிரசைத் தோற்கடிப்போம் என்று கிளம்பி இருப்பதாகவே நினைக்கிறேன். ஒன்று, தேர்தலை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அல்லது, இப்பிரச்சினைகளை விடுத்து மற்ற பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்து வாக்களிக்க வேண்டி இருக்கும்.
-
ரவி
தமிழ்நாட்டில் காங்கிரசு தோல்விக்கு காரணங்கள்??
* காங்கிரசு உட்கட்சிப் பூசல்.
* அ.தி.மு.க.வுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி சேர வாய்ப்புண்டு என்று ராகுல் கூறியதால் தி.மு.க தொண்டர்கள் கைவிடல்
* சலித்துப் போன தொகுதிக்கு உதவாத மூத்த காங்கிரசு தலைவர்கள்.
* ஈழப் பிரச்சினை-
Kathiravan G
ஈழப் பிரச்சினை
-
-
ரவி
எந்த முதலாளி வேண்டும் என அடிமைகளைக் கேட்பது போல் இருக்கிறது இந்திய மக்களாட்சித் தேர்தல்.
-
மணிகண்டன்
ரவி, வாழ்க்கையிலே படிப்பு, வேலை எல்லாத்துலையும் compromise பண்ணி கொள்ளும் நாம், அரசியல்ல மட்டும் மிகவும் idealistic.
-
ரவி
உண்மையில் அரசியலில் தான் அதிகம் சமரசம் செய்து கொள்கிறோம். ஈழப் பிரச்சினையை மட்டும் அடிப்படையாக கொண்டால், நான் எந்த பெரிய கட்சிக்குமே வாக்களிக்க முடியாது. ஆனால், வாக்களிக்கத் தான் வேண்டும். தவிர, தனி வாழ்க்கை முடிவுகள் நம்மை மட்டுமே பாதிக்கும். ஆனால், அரசியல் முடிவுகள் நம்மையும் எல்லாரையும் பாதிப்பதால் அதில் கூடுதலாக எதிர்ப்பார்ப்பது தவறில்லையே?
-
-
-
புருனோ
http://nchokkan.wordpress.com/2009/04/23/voted/
நீங்கள் கூறும் சாத்தியக்கூறுகள் நன்றாகவே உள்ளன
அரசு பேரூந்துகளில் விளம்பரம் செய்ய அனுமதி வந்து விட்டது
அரசு தொடர்வண்டிகளில் விளம்பரம் வந்தாகிவிட்டது
அரசு தபால் வண்டிகளில் விளம்பரம் வருகிறது (LICக்கு – PLI சவலைக்குழந்தையா ??)
ஏன் தேர்தலிலும் விளம்பரங்கள் வரக்கூடாது
இப்பொழுது கூட (வேட்பாளர்களின்) தேர்தல் செலவை தனியார் நிறுவனங்கள் மறைமுகமாக பொறுப்பேற்கிறார்கள். அது போல் நேரடியாக பொறுப்பேற்கலாமே !!!
வேட்பாளரின் வாகனத்தை (எரிபொருள், ஓட்டுனர்) ஒரு நிறுவனம் அளித்து விட்டு வாகனத்தில் அவர்களின் விளம்பரத்தை போடலாமே
–
நாளை ஏதோ ஒரு ?? சட்டவிரோத பலனை எதிர்பார்த்து வேட்பாளருக்கு (தேர்தல் செலவிற்) பணம் அளிப்பதை விட இது ஆயிரம் மடங்கு மேல் !!
-
புருனோ
மாபா பாண்டியராஜனை விட சரத் பாபு எந்த விதத்தில் உயர்ந்தவர் ??
-
ரவி
உயர்ந்தவரோ இல்லையோ கவர்ச்சிகரமானவர் என்பதாலே இவ்வளவு வெளிச்சம். குடிசை வீடு, இட்டிலிக் கடை, படித்து விட்டுத் தொழில், இளைஞர், நேரடியாக அரசியலில் குதிக்கிறார் என்று விக்ரமன் படப் பாட்டு போல இருப்பதால்…
-
புருனோ
இப்பொழுது அவர் குடிசை வீட்டில் இருக்கிறாரா. ஏதோ மாதம் பல லட்சம் சம்பாதிப்பதகாக கூறுகிறார்கள்
சரத் பாபுவை போல் பாண்டியராஜனும் 1992ல் 60,000 ருபாய் முதலீட்டில் தனது நிறுவனத்தை ஆரம்பித்தவர்தான்.
-
ரவி
பழசை மறக்காமல் இப்போதும் பழைய வீட்டில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். எவ்வளவு இலட்சம் ஈட்டுறார்னு தெரியல. நான் சொல்வது என்னவென்றால் ஊடகங்களுக்கு கவர்ச்சியான ஆள் தேவை. அந்த வகையில் பாண்டியராசனை விட சரத்பாபு ஒரு media darling. அவ்வளவு தான்.
-
புருனோ
அவர் ஊடகஅன்பிற்குரியவர் என்பதால் தான் இவ்வளவு கூத்தும் என்பது தான் என் கருத்து
(அல்லது ஊடகஇனியவர்) – டார்லிங் என்ற சொல்லிற்கு பொருத்தமான தமிழ் பதம் எது)
http://ta.wiktionary.org/wiki/darling-
ரவி
சரியாப் போச்சு.. அவர் விசயகாந்த் கட்சியில் இருக்கிறார்னு தெரியும். ஆனால், விருதுநகர்ல போட்டி இடுறார்னு நீங்க இன்னொரு வலைப்பதிவில் குறிப்பிட்டுத் தான் தெரியும். விசயகாந்த்தும் தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் இது போன்ற ஆட்கள் களத்தில் இருப்பதைக் குறிப்பிட்டிருக்கலாம்.
-
-
-
-
-
-
ulagam
தேர்தல் ஸ்பெஷல் – இனியாவது சிந்தியுங்கள்…. http://balachandar.net/blog333-2009-04-22.html
-
bsubra
நான் சட்ட அமைச்சரானால்:
1. மந்திரியாக பதவியேற்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகளாவது லோக் சபா எம்.பி. ஆக இருத்தல் அவசியம்
2. எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இரு முறைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் இருந்து தேர்தலில் நிற்க முடியாது.
3. இருபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மந்திரி பதவி/எம்.எல்.ஏ/எம்.பி ஆக இருக்க முடியாது. கட்டாய ஓய்வு தரப்படும்.
ஆகிய சட்டங்கள் அமலாக்கப்படும்.
-
Ramya Ramani
பள்ளி இறுதி தேர்வு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்
குண்டர்களாக இருந்திருப்பின் கண்டிப்பாக போட்டியிட இயலாது
இது ஒத்துவருமா??
-
bsubra
‘நான் படிப்பது மனுசனத்தாண்டா’ என்று ரஜினி பாடியதை நம்புபவன்
CAT/SAT மாதிரி ஏதாவது ‘அரசியல் பால பாடத் தேர்வு’ வைக்கலாம். கொஞ்சம் வரலாறு, இந்திய சட்டம், அரசியல் அமைப்பு குறித்த எளிமையான கேள்விகள் போதுமானது?—குண்டர்களாக இருந்திருப்பின் கண்டிப்பாக போட்டியிட இயலாது—
ஒரு கேஸ் உள்ளே போட்டாலே போலீஸ் ஆவதற்கான தகுதி இழப்பது போல் இதுவும் தவறாக பயன்படுத்தப்படலாம்?
-
கார்த்திக் 10:21 am on April 20, 2011 Permalink |
49-0 விற்கு மற்ற வேட்பாளர்களை விட கூடுதலான ஓட்டுகள் கிடைக்கும் போது தான் சீர்திருத்ததிற்கு வாய்ப்புளது. அந்த தொகுதியில் தேர்தல் திருப்பி நடத்தப்படும். அப்போது தான் நல்ல வேட்பாளர்களை நிறுத்த கட்சிகளுக்கு உந்துதல் இருக்கும். ஆனால் இப்பொது உள்ள நிலவரத்தில் 49-ஓ அனைத்து தொகுதிகளிலும் டெப்பாசிட் இழந்து வருகிறது.
ஆமா, வாக்குச்சாவடி முகவர்களாக நமக்கு தெரிந்தவர்கள் இருந்தால், ஏன் 49-ஓ போடத் தயக்கம்?
ரவி 3:23 pm on April 20, 2011 Permalink |
//ஆமா, வாக்குச்சாவடி முகவர்களாக நமக்கு தெரிந்தவர்கள் இருந்தால், ஏன் 49-ஓ போடத் தயக்கம்?//
என்ன காரணத்துக்காக வேட்பாளர்களுக்கு இடும் வாக்குகளையும் இரகசியமாக வைத்திருக்கிறார்களோ அதே காரணத்துக்காகத் தான்
49-ஓ இரகசியமாக இல்லாத காரணத்தினாலேயே ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு இட்டதாக பலரும் வலைப்பதிவுகளில் எழுதக் கண்டேன்.
புருனோ 6:43 am on April 24, 2011 Permalink |
ஏன் 49 0 வேண்டும் ரவி ??? நீங்கள் தேர்தலில் நின்று உங்களுக்கு ஓட்டுப்போடுங்கள்….ஏன் 49 0
ரவி 10:48 am on April 24, 2011 Permalink |
நீங்கள் வைப்புத் தொகை கட்டினால் நான் நிற்கிறேன்
புருனோ 11:57 am on April 24, 2011 Permalink |
வைப்புத்தொகை எவ்வளவு
ரவி 10:15 am on April 26, 2011 Permalink |
சிரிப்பானைக் காண்க
உங்களால் தேர்தலில் நின்று நல்ல பணி ஆற்ற முடியாவிட்டால், நிற்பவரில் யாராவது ஒருவருக்குப் போடுங்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
புருனோ 7:06 am on April 24, 2011 Permalink |
தேர்தல் சீர்திருத்தம் என்றால் என்ன . . . . .மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பலத்தை குறைத்து விட்டு ராணுவம் அல்லது உயர் நீதிமன்றத்தின் பலத்தை அதிகரிப்பதா