Tagged: தெலுங்குத் திரைப்பட RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 6:47 pm on May 12, 2011 Permalink | Reply
    Tags: , தெலுங்குத் திரைப்பட, பிருந்தாவனம்   

    பிருந்தாவனம் பார்த்தேன். நல்ல பொழுதுபோக்கு குடும்ப மசாலா படம். பார்க்கலாம். காச்சல் அகர்வால் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் :)

     
  • ரவி 10:40 pm on April 30, 2011 Permalink | Reply
    Tags: mr. perfect, , தெலுங்குத் திரைப்பட   

    Mr. Perfect பார்த்தேன். வழக்கமான தெலுங்குப் பட குடும்ப மசாலா. காச்சல் அகர்வாலுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

     
  • ரவி 8:06 pm on April 26, 2011 Permalink | Reply
    Tags: , தெலுங்குத் திரைப்பட, ரகடா   

    ரகடா பார்த்தேன். வழக்கமான மசாலா படம். தெலுங்குப் படங்களில் இன்னும் பழி வாங்கும் கதைகளை விடவில்லை. 10 நிமிடத்துக்கு ஒரு முறை யாராவது வந்து நாகார்ச்சுனா அழகாக இருப்பதாகச் சொல்கிறார். 50 வயதைத் தாண்டிய கவலையோ? கடைசியாகப் பார்த்த பல தெலுங்குப் படங்களில், சொல்லி வைத்தாற் போல், எல்லா நடிகர்களுமே தேவையில்லாமல் இரண்டு நடிகைகளுடன் ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விசயத்தில் மகேசுபாபு ஒரு உத்தமர் ! :)

     
  • ரவி 5:21 pm on April 8, 2011 Permalink | Reply
    Tags: mirpakaya, டான் சீனு, , தெலுங்குத் திரைப்பட   

    ரவி தேச்சாவுக்காக ஓட்டி ஓட்டி டான் சீனு, Mirpakaya படங்களைப் பார்த்தேன். அவரது வழக்கமான பாணியில் வந்துள்ள மொக்கைப் படங்கள்.

     
  • ரவி 2:28 pm on January 4, 2011 Permalink | Reply
    Tags: varsham, , தெலுங்குத் திரைப்பட   

    Varsham பார்த்தேன். வந்து சில ஆண்டுகள் ஆகி இருந்தாலும் ஈர்க்கிறது. தெலுங்கு நடிகர்களில் மகேசு பாபுக்குப் பிறகு பிரபாசைப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

     
  • ரவி 2:33 pm on October 27, 2010 Permalink | Reply
    Tags: darling, , தெலுங்குத் திரைப்பட   

    Darling (2010 தெலுங்குத் திரைப்படம்) பார்த்தேன். நல்ல பொழுதுபோக்குக் காதல் படம். ஆண்டுக்கு இது மாதிரி நாலு படம் வந்தால் நன்றாக இருக்கும்.

     
  • ரவி 5:28 pm on October 9, 2010 Permalink | Reply
    Tags: khaleja, , தெலுங்குத் திரைப்பட   

    Khaleja பார்த்தேன். இரண்டு ஆண்டு காக்க வைத்த மகேசு பாபு, திரும்பவும் ஒரு புளித்துப் போன கதையிலா நடிக்க வேண்டும்? அத்தடு குழுவிடம் நிறைய எதிர்பார்த்தேன்.

     
  • ரவி 4:49 pm on August 3, 2010 Permalink | Reply
    Tags: , தெலுங்குத் திரைப்பட, மரியாத ராமண்ணா   

    மரியாத ராமண்ணா பார்த்தேன். திரைக்கதை கொஞ்சம் வழ வழா தான். ஒரு முறை பார்க்கலாம். தமிழின் எந்த முன்னணி இயக்குநர் இப்படி ஒரு நகைச்சுவை நடிகரை வைத்துப் படம் இயக்க முன்வருவார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

     
  • ரவி 4:38 pm on August 3, 2010 Permalink | Reply
    Tags: ready, , தெலுங்குத் திரைப்பட   

    Ready பார்த்தேன். கொஞ்சம் கடி தான். இந்தப் படத்தை ஏன் தமிழில் திரும்ப எடுக்கிறார்கள் என்று புரியவில்லை.

     
  • ரவி 5:56 pm on June 19, 2010 Permalink | Reply
    Tags: , தெலுங்குத் திரைப்பட, லீடர்   

    லீடர் ( 2010 தெலுங்குத் திரைப்படம் ) பார்த்தேன். பிடித்திருந்தது. சேகர் கம்முலா ஒரு அரசியல் படத்தைக் கூட தனது அமைதியான பாணியில் (படத்தில் சண்டையே இல்லை !) கொடுத்திருப்பது அருமை. ரிச்சா கமலினி சாயலில் இருக்கிறார். ஈர்க்கிறார்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel