Tagged: தெலுங்குத் திரைப்பட RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 8:09 pm on January 17, 2012 Permalink | Reply
    Tags: The Businessman, , தெலுங்குத் திரைப்பட   

    The Businessman பார்த்தேன். ஓம் மகேசுபாபு நமக :) வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என்று தெரிந்த பிறகும் திரையரங்குக்குச் சென்று காணத் தூண்டும் ஒரே ஆள் மகேசு பாபு தான் :)

     
  • ரவி 10:06 am on January 16, 2012 Permalink | Reply
    Tags: , தெலுங்குத் திரைப்பட, பத்ரிநாத்   

    பத்ரிநாத் (தெலுங்குத் திரைப்படம்) பார்த்தேன். மகதீரா மோகத்தில் எல்லா நடிகர்களும் பழங்காலப் பின்னணியில் ஒரு மொக்கைப் படத்தைத் தந்து தொலைக்கிறார்கள். தமன்னாவுக்குத் தெலுங்கிலும் வாய்ப்பு குறைந்து வருகிறது :(

     
  • ரவி 10:04 am on January 16, 2012 Permalink | Reply
    Tags: தடா, , தெலுங்குத் திரைப்பட   

    Dhada (தெலுங்குத் திரைப்படம்) பார்த்தேன். படம் சுமார் தான். பாடல்கள் பரவாயில்லை. நாக சைத்தன்யாவை விட அவரது அப்பாவையே இன்னும் இரசிக்க முடிகிறது. வழக்கமான முன்னணி நடிகைகள் போல் காச்சல் அகர்வால் எல்லா நடிகர்களுடன் ஒரு சுற்று வந்த விட்டார். அடுத்த சுற்று சிரமம் தான்.

     
  • ரவி 11:43 am on October 7, 2011 Permalink | Reply
    Tags: ஊசரவெல்லி, , தெலுங்குத் திரைப்பட   

    விமர்சனம் படிக்காமல், எந்த திட்டமும் இல்லாமல் திடீரென்று தோன்றி ஊசரவெல்லி முதல் நாள் காட்சி போய் அமர்ந்தோம். வீட்டுக்கு அருகிலேயே உள்ள ஒற்றைப் படம் காட்டும் பெரிய திரையரங்கம். நுழைவுச் சீட்டின் ஆகக் கூடிய விலையே 55 ரூபாய் தான். இதே வணிக வளாகத் திரையரங்குகளுக்குப் போனால் 150 ரூபாய். இடைவேளையின் போது, அரங்குக்குள்ளேயே வந்து முறுக்கு எல்லாம் விற்கிறார்கள். சின்ன வயதில் படம் பார்த்த நினைவு வந்தது.

    துணிந்து Junior NTR படத்துக்குப் போய் அமர்ந்ததில் பெரிய மோசம் இல்லை. அண்மையில் வந்த அவரது படங்களில் பார்க்கக்கூடிய உருவாக்கம், கதை. தமன்னாவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உள்ள கதை. கதையின் முடிச்சு உண்மையிலேயே இது வரை எந்தப் படத்திலும் பார்த்திராத ஒன்று என்பதால் இறுதி வரை விறுவிறுப்பாகச் சென்றது. நகைச்சுவையும் நன்றாக இருந்தது.

    ஊசரவெல்லி என்றால் தெலுங்கில் பச்சோந்தி!

     
  • ரவி 8:03 pm on September 28, 2011 Permalink | Reply
    Tags: , தூக்குடு, தெலுங்குத் திரைப்பட   

    தூக்குடு பார்த்தோம். மகேசு பாபுவுக்காக ஒரு முறை பார்க்கலாம். படத்தில் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒன்னும் இல்லை. நிறையவே மொக்கை தான். இதுக்கு Khalejaவே பரவாயில்லை. யாராச்சும் இவருக்கு நல்ல கதையா எடுத்துக் கொடுங்கப்பா

     
  • ரவி 8:37 pm on July 3, 2011 Permalink | Reply
    Tags: golconda high school, , தெலுங்குத் திரைப்பட   

    Golconda High School பார்த்தேன். லகான், சக் தே இந்தியா பாணியில் ஒரு கொட்டாவி வரவைக்கும் விளையாட்டுத் திரைப்படம்.

     
  • ரவி 11:41 am on June 7, 2011 Permalink | Reply
    Tags: 100% love, , தெலுங்குத் திரைப்பட   

    100% Love பார்த்தோம். வழக்கமான கலகலப்பான படம். ஒரு முறை பார்க்கலாம். வீட்டிலேயே படம் பார்த்துப் பார்த்துத் திரையரங்கின் ஒலியமைப்புகளைக் கேட்க இனிமையாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக ஊருக்குப் போய் தாத்தா பாட்டியைப் பார்க்காமல் ஒரு தெலுங்குப் படமும் வருவதில்லை :)

     
    • பன்னீர் 11:17 am on June 17, 2011 Permalink | Reply

      ஆமாம் என்ற பன்றது

  • ரவி 10:27 pm on May 18, 2011 Permalink | Reply
    Tags: adhurs, , தெலுங்குத் திரைப்பட   

    Adhurs பார்த்தேன். இளைய N.T.R நடித்த படங்களையும் என்னால் முழுதாக பார்க்க முடிகிறது என்பது என்னைப் பற்றி எனக்கே புரியாத புதிர் ! :)

     
  • ரவி 10:25 pm on May 18, 2011 Permalink | Reply
    Tags: அலா மொதலாயிந்தி, , தெலுங்குத் திரைப்பட   

    அலா மொதலாயிந்தி பார்த்தேன். கொஞ்சம் நாடகத்தனம் இருந்தாலும் ரசிக்க முடிகிறது. Feel good romantic comedy.

     
  • ரவி 6:47 pm on May 12, 2011 Permalink | Reply
    Tags: , தெலுங்குத் திரைப்பட, பிருந்தாவனம்   

    பிருந்தாவனம் பார்த்தேன். நல்ல பொழுதுபோக்கு குடும்ப மசாலா படம். பார்க்கலாம். காச்சல் அகர்வால் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் :)

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel