Tagged: திருமணம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • யாத்ரீகன் 6:38 pm on July 14, 2009 Permalink | Reply
    Tags: , , திருமணம்   

    http://tinyurl.com/mw8tug – கொஞ்சம் சொதப்பல் வாதம்.ஆனா சுவாரசியமா இருக்கு.ஒவ்வருவருடைய முக்கியத்துவங்கள் பொருத்தது புரிந்துகொள்ளாத உறவுகளா? புரிந்துகொண்ட சிலரா? யாராருக்கு எது முக்கியமோ அதை தேர்ந்தெடுத்துகொள்ளவேண்டியதுதான்.ஓடிப்போவது வேறு காதல் திருமணம் வேறு குழப்பாதிங்கடா , என்னடா சொந்தக்காரங்க சொந்தக்காரங்க.. அடங்குங்கடா. மத்தவுங்க மதிக்கல, கண்டுகல, சேரல.. இப்ப என்ன பிரச்சனை? உன் வாழ்க்கையா இல்ல அடுத்தவன் பார்வையா ?

     
  • யாத்ரீகன் 4:15 pm on July 12, 2009 Permalink | Reply
    Tags: , , , திருமணம், ,   

    Contd. அர்த்தமில்லாத சடங்குகளில் நம்பிக்கை இல்லாத மணமகன் அப்படி தன்னோட திருமணத்தை நம்ம ஊர்ல நடத்த முடியாது,தேவையில்லாம அதுக்கு வருந்தி, வருத்தப்படவைத்து, கடைசியில் அந்த சடங்குகளில் மனமகனையே பங்கு பெற வைக்கும் கூட்டம்தான் நம்ம ஊர்ல

     
    • மணிகண்டன் 1:43 pm on July 13, 2009 Permalink | Reply

      யாத்ரீகன், கல்யாண சடங்கு மட்டும் தான் சொல்றீங்களா ? கல்யாணத்தையே சொல்றீங்களா ?

      • யாத்ரீகன் 6:03 pm on July 14, 2009 Permalink | Reply

        :-) கல்யாணத்தில சொல்லப்படுற மந்திரங்கள், சடங்குகள் எல்லாமே

      • Mubaarak 1:18 am on August 2, 2009 Permalink | Reply

        கல்யாணமே ஒருவகையில சடங்குதானே :-)

    • ரவி 11:20 am on July 14, 2009 Permalink | Reply

      நிறைய விசயங்களை மணமக்கள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்கள் கூட முடிவு செய்ய முடியாது :) குடும்ப பெரிசுகள், நிகழ்வுக்கு வரும் ஊர் பெரிசுகள் முடிவு செய்யும்.

      சடங்கு தவிர்ப்பு சில வேளை ஒரு குறிப்பிட்ட இன, மொழி, சமய புறக்கணிப்பாகவும் மட்டுமே இருக்கிறது. அதாவது இங்கு புறக்கணிப்பு என்பது முழுக்க பகுத்தறிவு அடிப்படையில் மட்டும் இல்லை.

      சடங்குக்கு நமக்குப் பொருள் தெரியாவிட்டாலும், ஒரு காலத்தில் ஏதேனும் பொருள் இருந்திருக்க வேண்டும். பல பண்பாட்டு, வரலாற்று, இனக்குழு அடிப்படை உடையவை. தாலி கட்டுவது, மஞ்சள் பூசுவது, குடத்தில் நெல் வைப்பது போன்ற பல சடங்குகள் தமிழர் தொல் வழக்கம் என்று இராம. கி அவர்கள் பதிவில் கண்ட நினைவு. நமக்குப் பொருள் தெரியவில்லை என்பதற்காக எல்லாவற்றையும் முற்றாக புறக்கணிக்க வேண்டுமா? பொருள் தேட முனையலாம் :)

  • யாத்ரீகன் 4:03 pm on July 12, 2009 Permalink | Reply
    Tags: , , , திருமணம், ,   

    http://bit.ly/1atTb4 ஒருவழியா உருப்படியா ஒரு விவாதப்பொருள்.. நீங்க எல்லோரும் என்ன நெனைக்குறீங்க ?! ரொம்ப ரொம்ப சிக்கலான விஷயம், எது பண்ணுவது, எது கூடாதுன்னு முடிவு பண்ற உரிமை யார்கிட்ட மணமகனா/மணமகளா/இருபக்க பெற்றோர்களா ?

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel