Tagged: தமிழ் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ulagam 8:53 pm on May 28, 2009 Permalink | Reply
    Tags: சிறுமி, சிறுவர், தமிழ், ஸ்பெல்லிங் பீ   

    ”ஸ்பெல்லிங் பீ” என்ற போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுமி முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்கர்கள் ஆங்கிலத்தினை வளர்க்க இது மாதிரியான நிகழ்ச்சியினை நடத்துகிறார்கள். தமிழில் இந்த மாதிரியான நிகழ்ச்சி எந்த ஒரு தொலைக்காட்சி நடத்தினால் எவ்வாறு இருக்கும்?

    1. சிறுவர் / சிறுமிகள் தமிழ் சொற்களை நன்கு கற்பார்கள்.
    2. சிறுவர் / சிறுமிகளிடம் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வம் மென்மேலும் வளரும்.
    3. தமிழ் தெரிந்தால் பேரும் புகழும் வாங்கலாம் என்ற என்ற எண்ணம் அவர்களுக்கு வரும்.

     
    • yemkay 12:01 am on May 29, 2009 Permalink | Reply

      விசய் டிவியில் ”தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு” என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது.

      • ulagam 6:48 am on May 29, 2009 Permalink | Reply

        எம்கே,
        அது பேச்சுப்போட்டி. சொற்போட்டி அல்ல. ஸ்பெல்லிங் பீ என்பது ஆங்கில சொற்போட்டி.

      • ரவி 7:19 am on May 29, 2009 Permalink | Reply

        எனக்கு இந்த நிகழ்ச்சியில் விருப்பம் இல்லை. தமிழ் என்றாலே இலக்கியம், மேடைப்பேச்சு என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்குவது போல இருக்கிறது.

    • ரவி 7:18 am on May 29, 2009 Permalink | Reply

      நல்ல யோசனை பாலா.

      http://freerice.com போல ஒரு தளம் இருந்தா நல்லா இருக்கும்.

      தமிழ் சொற்கள் பழகுவதற்கான ஒரு விளையாட்டு முயற்சி –

      http://www.thiruthamizh.com/index_files/Page545.htm

      http://koodal1.blogspot.com/2007/05/blog-post_03.html

      http://www.hindu.com/2006/05/10/stories/2006051011240400.htm

  • ரவி 8:30 pm on May 25, 2009 Permalink | Reply
    Tags: தமிழ்   

    writerpara.com/paper/?p=708

    இடுகையை முன்வைத்து:

    .இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத கடவுளுக்கு உலகெங்கும் பல கோடி செலவில் கோயில்கள் கட்டும் போது, ஏன் ஒரு வாழும் மொழியை வளர்ப்பதற்காக கோயில் என்ற பெயரில் ஒரு இடத்தைக் கட்டக்கூடாது?

    கோயில்களில் சமய நூல்களைக் கற்றுத் தருவதால் சமயத்தைப் பின்பற்றும் இளைய தலைமுறையினர் தலை தெறித்து ஓடிவிட்டார்களா என்ன?

    தமிழ்க் கோயில் கட்டுவதற்கான ஒரு கோடி செலவை வேறு பயனுள்ள வழிகளில் செலவிட்டிருக்கலாம் தான். ஆனால், கோயில் கட்டுவதையே ஒரு குறையாகவும் அவர்களின் தமிழ் வளர்ப்பு முயற்சிகளை இழித்துக் கூறுவதும் சரியில்லை.

     
    • அன்புடன் பாலா 9:11 pm on May 25, 2009 Permalink | Reply

      நீங்கள் சொல்வதில் தவறு எதுவும் இல்லை, கோடிகள் செலவழித்து கோயில்கள் கட்டுவதை வைத்துப் பார்க்கும்போது….
      சமீபத்தில் வேலூருக்கு அருகில் தங்கக் கோயில் ஒன்றை பல கோடி செலவு செய்து கட்டினார்கள். அந்தப் பணத்தை வைத்து ஏழைகளுக்கு உருப்படியாகயாக ஏதாவது செய்திருக்கலாம் தான்.

      • ulagam 9:16 pm on May 25, 2009 Permalink | Reply

        வழிமொழிகிறேன்.

    • ரவி 11:58 pm on May 25, 2009 Permalink | Reply

      http://twitter.com/tantricNinja/status/1921058238 முன்வைத்து:

      //இல்லாதாதால் தான் கடவுளுக்கு கோயில்?!//

      !! இது என்னங்க logic?!! இருக்கா இல்லையான்னு தெரியாத ஒன்னுக்கு எவ்வளவு வேணா செலவு செய்வாங்க. அதைப் பத்தி ஒரு விமர்சனமும் இருக்காது. ஆனா, இருக்கிற ஒன்னை வளர்க்க அவரவருக்குத் தெரிந்த வழியில் ஏதாவது செய்தால் அதற்கு ஏன் இந்த கேலியும் கிண்டலும்?

      தமிழை வளர்க்க கோயில் தேவையில்லை (அதுவும் இவ்வளவு செலவில்) என்பது தான் என் கருத்தும். ஆனால், ஒருவர் கோயில் கட்டுவாரானால் அதில் எள்ளி நகையாட ஒன்றுமில்லை. கல்வி, நாடு, தொழில், ஆறு, மலை, கடல் ஆகியவற்றை கடவுளாக உருவகப்படுத்தி வழிபடும் போது ஏன் மொழியை வழிபடக்கூடாது? குறிப்பிட சில விசயங்கள் தான் புனிதப்படுத்த வேண்டும் என்று யார் விதித்தது?

      இங்கு கோயில் என்பது கூட ஒரு குறியீடு தான். வெறுமனே கும்பிட்டுக் கொண்டிருக்காமல், தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பிக்கும் வரை பாராட்ட வேண்டிய முயற்சி தான்.

    • பாலாஜி 1:47 am on May 26, 2009 Permalink | Reply

      அவர் எள்ளி நகையாடியதாக நினைக்கத் தேவையில்லை. சாதாரண பேச்சுக் கருவியான மொழியை இப்படி இறைவியாக்குவது (deification) மாணவர்களிடமிருந்து அன்னியப்படுத்தும் என்பது சரியான வாதமாகவே படுகிறது. வள்ளுவர் கோட்டத்தினாலும், வள்ளுவர் சிலையினாலும் சாதிக்கமுடியாததை பேருந்தில் எழுதப்படும் குறள்கள் எளிதாக சாதிக்கின்றன.

      • ரவி 2:42 am on May 26, 2009 Permalink | Reply

        //அவர் எள்ளி நகையாடியதாக நினைக்கத் தேவையில்லை. //

        “சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சென்னை வெயிலில் இருபது கிலோமீட்டர் மூச்சிறைக்க ஓடவிட்டால் என்னவென்று தோன்றியது.”

        மேல் காணும் வரி முதல் முழுக் கட்டுரையே எள்ளல் தான்

        //இலக்கணம் படித்து யாப்பில் ஆப்படிக்க ஒரு புதுத் தலைமுறை வேண்டுமென்று யார் அழுதது?

        இதுதான் எனக்குப் பெரிய தீவிரவாதமாகத் தோன்றுகிறது. //

        மேல் காணும் வரிகள் தான் கட்டுரையின் உள்நோக்கம். தமிழ் இலக்கண, இலக்கிய கற்றலையே வீண் என்கிறார். (சொல்வது தமிழில் எழுதுவதையே முழுநேரப் பணியாக கொண்ட ஒரு எழுத்தாளர் என்பது ஒரு முரண்நகை !)

        //வள்ளுவர் கோட்டத்தினாலும், வள்ளுவர் சிலையினாலும் சாதிக்கமுடியாததை பேருந்தில் எழுதப்படும் குறள்கள் எளிதாக சாதிக்கின்றன.//

        ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இதைப் பண்பாட்டு, வரலாற்று, கட்டடக் கலை கூறுகள் அடிப்படையிலும் பார்க்க வேண்டும்.

        வீட்டில் தான் சாமியறை இருக்கே, அப்புறம் கோயில் எதற்கு என்று கேட்கலாமா?

        //சாதாரண பேச்சுக் கருவியான மொழியை இப்படி இறைவியாக்குவது (deification) மாணவர்களிடமிருந்து அன்னியப்படுத்தும் என்பது சரியான வாதமாகவே படுகிறது.//

        அன்னியப்படுத்தும் என்பதற்கு எந்த அறிவடிப்படை ஆதாரமும் இல்லை. சாதாரண வாழும் இடமான இந்தியாவுக்கு ஒரு பாரதத் தாயை உருவாக்கி படம் வரைந்து மாலை போட்டு வழிபடுகிறார்களே..? இது இந்தியர்களை இந்தியாவிடம் இருந்து அன்னியப்படுத்திவிட்டதா?

  • ulagam 11:59 pm on May 17, 2009 Permalink | Reply
    Tags: , தமிழ்,   

    இன்று
    ——
    பங்கு சந்தை 2000 புள்ளிகளை தாண்டி உயர்ந்தது..மத்தியில் காங்கிரஸின் ஆட்சி மறுபடியும் வந்ததால் இந்த உயர்வு. நிலையான ஆட்சி அமைய மக்கள் வாக்களித்துள்ளனர்
    ——
    பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? இலங்கை அரசு 25 வருட போரை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதா..? எதுவும் தெரியவில்லை. பல இடங்களில் வெவ்வேறு செய்திகள்.
    ——

     
  • ulagam 4:28 am on January 20, 2009 Permalink | Reply
    Tags: தமிழ், ,   

    சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் http://balachandar.net/blog327-2009-01-20.html

     
  • ரவி 10:13 am on January 18, 2009 Permalink | Reply
    Tags: தமிழ்,   

    சன் தொலைக்காட்சி திரையிடும் ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கப்பட்ட படங்களில் உள்ள உரையாடல் நேரடி தமிழ்ப் படத்தை விட நல்ல தமிழில் இருக்கின்றது.

     
  • ulagam 10:40 am on January 12, 2009 Permalink | Reply
    Tags: இரத்ததானம், , தமிழ், புத்தககாட்சி   

    அறிவை வாங்கினேன். குருதியை கொடுத்தேன் http://balachandar.net/blog324-2009-01-12.html

     
  • ulagam 5:10 am on December 31, 2008 Permalink | Reply
    Tags: கனவு கன்னி, தமிழ்,   

    ஓ போடு: 2009ஆம் ஆண்டின் கனவுக்கன்னி யார்? http://balachandar.net/poll321-2008-12-31.html

     
  • ulagam 10:12 pm on December 30, 2008 Permalink | Reply
    Tags: தமிழ்,   

    டாப் மூன்று தமிழ் திரைப்படங்கள் 2008 http://balachandar.net/blog320-2008-12-30.html

     
  • ulagam 6:57 am on December 30, 2008 Permalink | Reply
    Tags: தமிழ்,   

    நல்லா ஓடின தமிழ் திரைப்படங்கள் 2008

    http://balachandar.net/blog319-2008-12-30.html

     
  • ulagam 11:08 pm on December 29, 2008 Permalink | Reply
    Tags: தமிழ்,   

    சுமார ஓடினப் தமிழ் திரைப்படங்கள் 2008 http://balachandar.net/blog318-2008-12-30.html

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel