கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வெளிப்படையாக முன்னேற்றங்கள் தெரியும் / மக்கள் பாராட்டும் சில விசயங்கள்: சாலை வசதிகள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், பொது வினியோகப் பொருள்களின் தரம்.
Tagged: தமிழ்நாடு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
தமிழக வாழ்க்கைக்கான குறிச்சொற்கள் / அடிக்கடி பயன்படும் சொற்கள்: மழை, கொசு, வெயில், போக்குவரத்து நெரிசல், குடும்பம், நண்பர்கள், மின்வெட்டு, இல்லை, sir, madam, தொலைக்காட்சி, திரைப்படம், நூல்கள், விலைவாசி
-
ரவி
இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம் என்றால் , “தமிழ்நாடே இப்படி இருக்குன்னா நமக்கு கீழ இருக்க மாநிலங்கள் எப்படி இருக்கும்”? என்கிறார்கள்.
-
mayooresan
வடிவேல் விசயகாந்து கலக்கல் காமடி. பல ஆண்டு வாழ்க இவர்கள் புகழ்.
-
புருனோ
இன்றைய நாளிதழ்களில் (ஆங்கில நாளிதழ்கள் உட்பட) இது குறித்து வந்த செய்தி தலைப்பு தான் காலை உணவகத்தில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தது
-
-
புருனோ
http://nrega.nic.in/ict/ict3.asp தளத்தை பாருங்கள்
திற மூல மென்பொருள் மூலம் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள 108 திட்டங்களில் 40 திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன
-
mayooresan
http://specials.rediff.com/money/2008/sep/05slide7.htm
அதிக ஊழல் உள்ள மாநிலமாக தமிழகம்
-
புருனோ
தமிழகத்தில் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தினால் எப்படி இருக்கும் http://www.livemint.com/2008/09/01010654/For-women-in-villages-prenata.html?h=B பொது சுகாதார துறைக்கு கடிதம் எழுதியுள்ளேன்
-
பிரேம்குமார்
இந்த திட்டத்தை செயல்படுத்த நம்ம கிராமத்து பெண்களுக்கு செல்பேசி, குறுந்தகவல்கள், ஆங்கிலம் எல்லாம் முதல்ல பழக்கமாகனுமே மருத்துவர்
-
புருனோ
ஏன் கிராமத்து பெண்கள் மட்டும் என்று நினைக்கிறீர்கள்
-
ரவி
பிரேம், இப்ப ஊர்ல எல்லாரும் குறைஞ்சது பத்தாவது வரைக்குமாவது படிச்சிருக்காங்க. படிக்காதவங்களுக்கும் செல்பேசி இயக்குவது, குறுஞ்செய்திகள் அனுப்புவது இலகுவா தான் இருக்கும். ஆங்கிலம் தான் உதைக்கும். தமிழ்க் குறுஞ்செய்திகள், அதை ஒழுங்காக காட்டும் செல்பேசிகள் தேவை
-
புருனோ
பிரேம்,
உங்களின் மறுமொழி பொதுமக்களிடம் தற்சமயம் நிலவிவரும் பல (?? தவறான) கருத்துக்களின் அடிப்படையில் உள்ளது.
கிராமத்து – கிராமங்களில் செல்லிடப்பேசி புகவில்லை
பெண்களுக்கு – பெண்ணின் கர்ப்பம் பற்றி ஆணுக்கு (கணவனுக்கு, தந்தைக்கு) அக்கரை இல்லை
குறுந்தகவல்கள், – பெண்களுக்கு குறுஞ்செய்தி வாசிக்க தெரியாது
ஆங்கிலம் – கிராமப்புற ஆண்களுக்கு / பெண்களுக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியாது
ஆங்கிலம் – செல்லிடப்பேசியில் வருங்காலத்தில் கூட ஆங்கிலம் தான் இருக்கும்
–
மேலே கூறியவை பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். அதில் எது சரி , எது தவறு எனபது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் அந்த கருத்துக்கள் முற்றிலும் சரி என்று கூறமுடியாது என்று நினைக்கிறேன்
–
ஆனால் உங்கள் மறுமொழியில் புதைந்துள்ள ”அரசின் திட்டங்கள் கிராமத்திற்கு மட்டும் தான். நகரத்திற்கு கிடையாது” என்ற ஒரு கருத்து மட்டும் முழுவதும் தவறு என்று நான் நினைக்கிறேன் -
பிரேம்குமார்
புருனோ அண்ணா,
1. நீங்கள் குறிப்பிட்டிருந்த செய்தியில் கிராமம் என்று இருந்ததால் இங்கேயும் நான் கிராமம் என்றே குறிப்பிட்டேன். மேலும் நகரத்து பெண்கள் எல்லாம் ஒரு சின்ன விசயமானாலும் உடனே மருத்துவரை அனுகிவிடுகிறார்கள். கிராமத்தில் அப்படி செய்கிறார்களா என தெரியவில்லை
2. இப்போதும் படிப்பறிவில்லாத என் 75 வயது அம்மாச்சி கூட செல்பேசியில் நன்றாக பேசிகிறார். ஆனால் குறுந்தகவல் என்று வரும் போது தான் கொஞ்சம் உதைக்குமோ என்று தோன்றுகிறது
//குறுந்தகவல்கள், – பெண்களுக்கு குறுஞ்செய்தி வாசிக்க தெரியாது//
ஆங்கிலத்தின் இருப்பின்???
//ஆங்கிலம் – கிராமப்புற ஆண்களுக்கு / பெண்களுக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியாது//
எவ்வளவு தூரம் வாசிக்க முடியும்? டெக்னிகல் டெர்ம்ஸ் புரியுமா?
//ஆங்கிலம் – செல்லிடப்பேசியில் வருங்காலத்தில் கூட ஆங்கிலம் தான் இருக்கும்//
எனக்கு தெரிந்து நோக்கியாவில் தமிழில் தட்டச்சு செய்யக்கூடிய ஒரு செல்பேசி வந்தது. ஆனால் அதுவும் இப்போது உபயோகத்தில் இருக்கிறாவென தெரியவில்லை. தமிழில் குறுந்தகவல்கள் என எப்போதோ ஒரு செய்தி வாசித்ததாய் நினைவு. ஆனால் அது புழக்கத்தில் இருப்பதாய் தெரியவில்லை
//பெண்களுக்கு – பெண்ணின் கர்ப்பம் பற்றி ஆணுக்கு (கணவனுக்கு, தந்தைக்கு) அக்கரை இல்லை//
நோ கமென்ட்ஸ்
-
புருனோ
பிரேம் அண்ணா,
நீங்கள் தற்சமயம் கூறியவை குறித்து உங்கள் கருத்துகளுடன் முழுவதும் வேறு பட முடியாது. நான் ஏற்கனவே கூறிவிட்டேனே.
ஆனால் நான் கூறிய கடைசி விஷயத்தை விட்டு விட்டீர்களே
-
பிரேம்குமார்
ஆகா, நான் புருனோ அண்ணான்னு போட்டதுக்கு நீங்க பிரேம் அண்ணான்னு போட்டுட்டீங்களா??? ஆவ்வவ்வ்வ்
//ஆனால் உங்கள் மறுமொழியில் புதைந்துள்ள ”அரசின் திட்டங்கள் கிராமத்திற்கு மட்டும் தான். நகரத்திற்கு கிடையாது” என்ற ஒரு கருத்து மட்டும் முழுவதும் தவறு என்று நான் நினைக்கிறேன்
//இத பத்தி சொல்றீங்களா? அதான் சொன்னேனே, நீங்க கொடுத்த சுட்டியில் ‘கிராமம்’ என்று இருந்ததால் அப்படியே தொடர்ந்து விட்டேன்
மத்தபடி நல்ல திட்டங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும்.
-
-
ரவி
வரவர தினமணியின் நடுநிலைமையும் கேள்விக்குள்ளாகிறது. தமிழ்நாட்டில் நடுநிலைமையுடன் செயல்படும் ஒரு இதழ் கூட இல்லையா?
புருனோ 9:28 pm on October 25, 2008 Permalink |
முதல் மாநிலம் எது அண்ணா
ரவி 9:50 pm on October 25, 2008 Permalink |
பஞ்சாப்