Tagged: சினிமா RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 11:25 am on September 25, 2008 Permalink | Reply
    Tags: , , சரத்குமார், சினிமா, ஜாதி, , , , , ராமராஜன், ,   

    ஒரு குறிப்பிட்ட ஜாதியுடன் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டால் அந்த நடிகரால் கண்டிப்பாக “உச்ச” நிலையை அடை முடியாது.

    ரஜினிக்கோ கமலுக்கோ 80களில் 90களில் இருந்த ரசிகர்கள் யாருமே அவரது ஜாதியை பார்த்து இருக்க வில்லை. 2000க்கு பிறகு வேறு பல காரணங்களால் அந்த அடையாளம் ஒட்டிக்கொண்டதே தவிர அவர்கள் அதை ஒரு போதும் வெளிப்படுத்தியது கிடையாது.

    விஜய், அஜித், விக்ரம், ராமராஜன் !! ஆகியோரின் வெற்றிக்கு ஒரு காரணம் அவர்கள் “ஜாதி நடிகராக” அடையாளப்படுத்தப்படாததால் தான் என்பது என் கருத்து

    விஜய் என்ன ஜாதி என்பதும் ராமராஜன் என்ன ஜாதி என்பதும் சரத்குமார் ரசிகர்களில் கூட பலருக்கு தெரியாது.

    அதே போல் விக்ரம் என்ன ஜாதி என்பது பல பிரசாந்த் ரசிகர்களுக்கு கூட தெரியாது.

    ஷாம், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் ஆகியோர் அவர்களின் திரைத்துறை பணித் தடத்தின் (career – பணித்தடம்) ஆரம்ப கட்டத்திலேயே ஜாதி நடிகர் என்ற முத்திரையை பெற்று விட்டார்கள். இதுவே அவர்களால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் செல்ல தடையானது.

    திரைத்துறையிலும் அரசியலிலும் ஜாதி அடையாளம் என்பது இரு பக்கமும் ஏன் இருமுனையும் கூர்மையான கத்தி.

    அதை வைத்து கேக்கை வெட்டியவர்களை விட கையை வெட்டிக்கொண்டவர்கள் தான் அடையாளம்.

    1998 நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலியில் சரத்குமார் தோற்ற அதே நேரம் திருச்செந்தூரில் ராமராஜன் வெற்றி. இருவரும் ஒரே ஜாதி என்ற விபரம் எத்தனை பேருக்கு தெரியும்

    விஜயகாந்தால் ஏன் தமிழக முதல்வராக முடியாது என்பதற்கு கூட ஒரு காரணம் அவரது ஜாதி (?? மொழி) அடையாளம் தான்.

     
  • புருனோ 11:24 am on September 25, 2008 Permalink | Reply
    Tags: , , சினிமா, ,   

    ஒரு செடி வளர விதையும் முக்கியம், நிலமும் முக்கியம்

    விதை – திறமை
    நிலம் – பின்புலம்

    விஜய் செம்புலநீரில் விழுந்த வீரியமான விதை

     
  • புருனோ 11:23 am on September 25, 2008 Permalink | Reply
    Tags: , , சினிமா, , , ,   

    விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதற்கு காரணம்

    1. விஜய்
    2. அவரது தந்தை

    நான் கூறிய கருத்தை பார்த்து என்னை திட்டும் முன் பதிவர் பாலபாரதியின் இடுகை கூறித்து நான் எழுதிய இடுகை மற்றூம் மறுமொழிகளை ஒரு முறை படித்து விடுங்கள்

    http://www.payanangal.in/2008/06/blog-post_05.html

     
  • ulagam 12:36 am on September 24, 2008 Permalink | Reply
    Tags: சினிமா,   

    ஜெயம் கொண்டான் – 8/10 – படங்களுடன் முழுமையான திரை விமர்சனம் http://tinyurl.com/3tcj55

     
  • mayooresan 4:46 am on September 8, 2008 Permalink | Reply
    Tags: சினிமா, பிளாக், பொலிவூட், ஹிந்தி சினிமா   

    பிளாக் திரைப்படம் பார்த்தேன். இந்திய சினிமாவில் இப்படியான திரைப்படங்களும் எடுக்கிறாங்களா என்று சிந்திக்க வைத்தது. அமித்தாப்பச்சன் நல்ல நடிப்பு அவரை வெல்லும் நடிப்பு ராணி முகர்ஜூ

     
  • புருனோ 6:46 pm on September 6, 2008 Permalink | Reply
    Tags: , cindrella, , , சினிமா, , , ப்ரியாமனி   

    சில படங்கள் (அவை எடுக்கப்படும் கதைக்கருமூலம்) அனைவரையும் தொடும். உதாரணம் – கல்விக்கு நன்கொடை (ஜெண்டில்மேன்) பதின்ம காதல் (ஆட்டோகிராப்)

    வேறு சில படங்களோ (அதில் கூறப்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் வெகு சிலர் என்பதால்) வெகு சிலரை மட்டுமே தொடும் – சிறைச்சாலை, லேசா லேசா, கண்களால் கைது செய் – அது போன்ற படங்கள் தோல்வி அடைவதும் நடைமுறைதான்.

    ”கிடைக்காத அங்கீகாரமும்”, ”நிராகரிப்பும்” ஒருவனை அலைக்கழிப்பது போல் அதிக அங்கிகாரமும், அதிக கவனிப்பும் ஒருவனை தனி உலகிற்கும் அழைத்து சென்று விடும் (ivory tower என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு).

    அது போன்ற பிரச்சனைகளை விளக்கிய படம் கண்களால் கைது செய். அந்த கதாநாயகி (fantasy and fact) உருவகம் தமிழ் திரையில் வேறு பட்ட ஒன்று.

    நிராகரிப்பினால் ஏற்படும் மன உளைச்சலினால் மனதிற்குள் ஒரு நாயகியை உருவாக்கி அவள் மேல் தனுஷ் காதல் கொண்டால் அந்த படம் வெற்றி அடைவதற்கு காரணம், மக்களில் பலர் நிராகரிக்கப்படுகிறார்கள். அல்லது தான் நிராகரிக்கப்படுவதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

    (குணா அபிராமி கூட இந்த வகை கதைதான். ஆனால் அதில் நிராகரிப்பின் காரணம் பிறப்பு. காதல் கொண்டேனில் நிராகரிப்பின் காரணம் படிப்பு / நட்பு / நடை / உடை)

    ஆனால் அதே பிரச்சனையை மூற்றிலும் அடுத்த கோனத்திலிருந்து அனுகிய படம் கண்களால் கைது செய்

    பாரதிராஜாவின் மறக்க முடியாத பெண்பாத்திரங்களின் வரிசையில் இந்த படத்தின் கதாநாயகிக்கும் இடம் உண்டு என்பது என் கருத்து

     
    • ரவி 8:03 pm on September 6, 2008 Permalink | Reply

      சேது படத்தில் கதைத் தலைவி தற்கொலை செய்வது, கதைத் தலைவனுக்கு மனநலம் சிதைவது போல் சமூகத்தில் எத்தனை பேருக்கு நடக்கிறது? பிதாமகன் போல் எத்தனை பேர் சுடுகாட்டில் பிறந்து வளர்ந்து சக்தி போன்ற நண்பர்களைப் பெற்று சாகக் கொடுக்கிறார்கள்? அப்புறம் ஏன் இந்த படங்கள் ஓடின? கதைக்காக மட்டுமே எந்த படமும் ஓடுவதில்லை. திரைக்கதை, இயக்கம், காட்சிப்படுத்தல் என நி்றைய இருக்கிறது. கண்களால் கைது செய் எல்லா வகையிலும் சொதப்பலாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். நீங்கள் சொல்வது சரியான காரணம் அல்ல.

    • bsubra 10:33 pm on September 6, 2008 Permalink | Reply

      சுப்ரமணியபுரம் ஏன் வெற்றிகரமாக ஓடியது?

    • புருனோ 4:19 am on September 7, 2008 Permalink | Reply

      // நீங்கள் சொல்வது சரியான காரணம் அல்ல.//
      நான் கூறியது “அதில் கூறப்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் வெகு சிலர் என்பதால்” – அந்த திரைக்கதையில் வரும் சம்பவங்கள் அனைவரின் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்பதல்ல.

      //சேது படத்தில் கதைத் தலைவி தற்கொலை செய்வது, கதைத் தலைவனுக்கு மனநலம் சிதைவது போல் சமூகத்தில் எத்தனை பேருக்கு நடக்கிறது? //
      இரண்டுமே நிறைய நடக்கிறது :) :) :) அதனால் தான் அந்த படம் ஓடியது.

      காதல் தோல்வியால் மனநலன் பாதிக்கப்பட்டவரை பார்த்ததே இல்லையா

      காதல் தோல்வியால் தற்கொலைகள் நடப்பதே இல்லையா

      //பிதாமகன் போல் எத்தனை பேர் சுடுகாட்டில் பிறந்து வளர்ந்து சக்தி போன்ற நண்பர்களைப் பெற்று சாகக் கொடுக்கிறார்கள்? //
      அந்த படம் ஓடியதா ??

      //கண்களால் கைது செய் எல்லா வகையிலும் சொதப்பலாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.//
      உண்மைதான் :) :)

      சுப்ரமணியபுரம் ஏன் வெற்றிகரமாக ஓடியது?

      அரசியலில் (அல்லது ரசிகர் மன்றத்தில்) சேர்ந்து உருப்படாத ஒருவரையாவது உங்களுக்கு (உறவு அல்லது நட்பு வட்டத்தில்) நன்றாக தெரிந்திருக்கும்.

      ஒரு படம் வெற்றியடைய அல்லது தோல்வியடைய பல காரணங்கள். அதில் நான் கூறியது ஒன்று தான்

    • புருனோ 4:21 am on September 7, 2008 Permalink | Reply

      நான் கூறியதை நீங்களிருவரும் extreme அர்த்ததில் எடுத்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்

      புற்றுநோய் உள்ளவர்கள் மட்டும் தான் பயணங்கள் முடிவதில்லையையும் வாழ்வே மாயத்தையும் பார்த்தார்கள் என்று நான் கூறவேயில்லை :) :) :)

    • புருனோ 4:24 am on September 7, 2008 Permalink | Reply

      ஹே ராமில் ஒரு வசனம் வரும் (சரியாக ஞாபகம் இல்லை) – ”நீ மதராஸி – உனக்கு பிரிவினையின் (ind-pak partition) வலி தெரியாது” என்று பொருள் பட வரும் வசனம் கூறுவதும், நான் கூற வந்ததும் ஒன்று தான்.

      • ஏன் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகிறார்கள் (பலர் பார்க்கிறார்கள்)

      ஏன் பில்லியார்ட்ஸ் போட்டிகளை பார்க்க ஆள் இல்லை என்று சிந்தித்தால் வரும் விடை என்ன.
      -

    • புருனோ 4:29 am on September 7, 2008 Permalink | Reply

      இந்தியாவில் கிரிக்கெட்டை பார்க்கும் நபர்கள் எத்தனை. பேஸ்பால் பார்ப்பவர்கள் எத்தனை :)

      அமெரிக்காவில் கிரிக்கெட்டை பார்க்கும் நபர்கள் எத்தனை. பேஸ்பால் பார்ப்பவர்கள் எத்தனை :)

    • ரவி 4:57 pm on September 7, 2008 Permalink | Reply

      //இரண்டுமே நிறைய நடக்கிறது :) அதனால் தான் அந்த படம் ஓடியது.//

      என்ன கொடுமை இது? எத்தனையோ படங்கள்ல தற்கொலை பண்றாங்க. மனநலம் தவறினவங்களைக் காட்டுறாங்க. எல்லாம் ஓடுதா?

      //அரசியலில் (அல்லது ரசிகர் மன்றத்தில்) சேர்ந்து உருப்படாத ஒருவரையாவது உங்களுக்கு (உறவு அல்லது நட்பு வட்டத்தில்) நன்றாக தெரிந்திருக்கும்.//

      நான் இந்தக் காரணத்துக்காக படத்தை விரும்பவில்லை :)

      //ஒரு படம் வெற்றியடைய அல்லது தோல்வியடைய பல காரணங்கள். அதில் நான் கூறியது ஒன்று தான்//

      மிச்ச பல காரணங்கள் சரியாக இருந்திருந்தால் கதை ஒரு பொருட்டே அல்ல. கதையே இல்லாத படங்கள் எல்லாம் திரைக்கதைக்காக ஓடும் போது உண்மையான கதைக்கு என்ன குறை? இதே போல பெரிய இடத்துத் தனிமை, அவர்களின் வாழ்வைச் சுற்றி வந்த aviator, citizen kaneஐ ரசிக்க முடிகிற போது ஏன் கண்களால் கைது செய் படத்தை மட்டும் ரசிக்க முடியாது?

      //அந்த படம் ஓடியதா ??//

      பாலாவின் மூன்று படங்களும் நன்கு ரசிக்கப்பட்டவையே. நந்தா மட்டும் ஓட்டம் குறைவு. பிதாமகன் நல்லாவே ஓடுச்சு. புதுகை, சென்னையில் சத்யம், செயந்தி என்று மூன்று திரையரங்களில் மூன்று முறை பார்த்தேன். எல்லா தரப்பு ரசிகர்களிடமும் ஒரே வகை வ்ரவேற்பு தான் இருந்தது.

      //நீ மதராஸி – உனக்கு பிரிவினையின் (ind-pak partition) வலி தெரியாது//

      நிகழ்வாழ்விற்கு சரி. நிகழ்வாழ்வில் நடக்காத எத்தனையோ வி்சயங்களைத் திரையில் நெஞ்சைத் தொடுவது போல் காட்டினால் புரிந்து கொள்ளவே செய்கிறோம்.

  • புருனோ 4:06 am on August 11, 2008 Permalink | Reply
    Tags: சினிமா,   

    ஒரு அருமையான கேள்வி – தூயதமிழில் தலைப்பு வைக்கும் இந்தப் படங்களுக்கு அரசின் வரிவிலக்கு உண்டா ? விபரங்களுக்கு http://sirippu.wordpress.com/2008/08/11/varum_vazhiyil-2/

     
  • புருனோ 12:02 pm on August 1, 2008 Permalink | Reply
    Tags: , சண்டை, சினிமா, சிம்பு, , , பொது வாழ்க்கை   

    குசேலன் வெளியீடு மற்றும் ரஜினியின் பல்டியில் யாரும் கவனிக்காத ஒரு இணைய தளம் http://bitchthara.blogspot.com/ 18 வயதிற்கு மேலாணவர்களுக்கு மட்டும், கடவுளே கடவுளே

     
    • ரவி 4:37 am on August 5, 2008 Permalink | Reply

      bitchthara என்ற சொல்லைத் தேடியே அதிகம் பேர் உளறலுக்கு வருகிறார்கள் !!

    • புருனோ 4:57 am on August 5, 2008 Permalink | Reply

      அது சரி :) :)

    • புருனோ 4:57 am on August 5, 2008 Permalink | Reply

      தற்சமயம் இந்த சொல்லை தேடினால் வருவது அந்த வலைப்பதிவு, உளறல் மற்றும் என் Friend Feed :) :)

    • bsubra 6:22 am on August 5, 2008 Permalink | Reply

      ‘பிட்ச்தாரா’ உளறல் என்று கூகிள் கணிக்கிறதா ;)

    • புருனோ 6:25 am on August 5, 2008 Permalink | Reply

      பாபா, புரியவில்லை.

      இதை பாருங்கள்
      http://www.google.com/search?q=bitchthara

  • சாத்தான் 6:06 am on July 26, 2008 Permalink | Reply
    Tags: காமிக்ஸ், சினிமா   

    http://www.nytimes.com/2008/07/24/movies/24supe.html (தலைப்பில் எப்படியோ உம்மைத் தொகையைக் கொண்டுவந்த சாமர்த்தியத்தைப் பார்த்தீர்களா?)

     
  • barath 1:29 pm on July 11, 2008 Permalink | Reply
    Tags: சினிமா   

    Hancock பாத்தாச்சு.முதல் பாதி நல்லாயிருக்கு.கடைசி அரைமணி நேரம் கடி.வில் ஸ்மித் வந்து கமல் ரஜினி மாதிரி.. படம் நல்லா இல்லைனாலும் பார்தடணும்.பாத்துட்டு வந்து திட்டணும் ;)

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel