Tagged: சினிமா RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 5:36 am on February 5, 2010 Permalink | Reply
    Tags: சினிமா, , , , , ,   

    சமீபத்தில் ஒரு பதிவரின் திரைப்படம் குறித்து எழுதியிருந்த இடுகை பிடித்திருந்ததால் “நல்ல நடை. சொல்ல வந்ததை தெளிவாக கூறியுள்ளீர்கள்” என்று மறுமொழி எழுதினேன்.

    அடுத்த சில நிமிடங்களிலேயே, மற்றொரு பதிவர் என்னை தொலைபேசியில் அழைத்து “ஏன் பாராட்டுகிறீர்கள். நீங்கள் எல்லாம் பாராட்டினால் அவன் பந்தா தாங்காது. இதெல்லாம் ஒரு எழுத்தா” என்ற ரீதியில் தாக்க ஆரம்பித்து விட்டார். “ஐயா சாமி, எனக்கு பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்று கூறுவேன்; பிடிக்க வில்லை என்றாலோ அல்லது அதில் எதாவது கருத்தில் எனக்கு முரண்பாடு என்றாலோ அதை கூறுவேன். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் மறுமொழியில் கூறுங்கள்” என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது

     
    • ரவி 1:21 pm on February 5, 2010 Permalink | Reply

      என்ன கொடுமை இது? ஒரு வகையில் விருதுகள், இந்த வாரப் பதிவர் போன்ற விசயங்கள் வலையுலகில் அரசியல் புக காரணமாயிருக்கின்றன.. வலைப்பதிவுலகையும் (சிறு) பத்திரிக்கை உலகு மாதிரி ஆக்கிடுவாங்களோ..

  • புருனோ 11:17 pm on October 6, 2009 Permalink | Reply
    Tags: ஆர்.எஸ்.எஸ், கமல், சினிமா, பொதுவுடமை, வசனம்   

    உன்னைப்போல் ஒருவன் பார்த்தேன்

    என் கருத்துக்கள்

    மிகச்சிறந்த இந்துத்வா பிரச்சார படம் ;)

    எப்படி அன்பே சிவம் பொதுவுடமை பிரச்சார படமோ அது போல் இது இந்துத்வா பிரச்சார படம்

    இரா.முருகன் தனது வேலையை தெளிவாகவே செய்துள்ளார். வாழ்த்துக்கள் :)

    பொதுவுடமை படம் எடுப்பதற்கு கமலுக்கு இருக்கும் உரிமை இந்துத்வா படம் எடுப்பதற்கும் உள்ளது. இதற்காக கமலை குற்றவாளியாக்குவது முதிர்ச்சியின்மை

    அதே நேரம் ஏற்கனவே அவர் பொதுவுடமை படம் எடுத்துள்ளதால் இந்த படம் இந்துத்வா படம் இல்லை என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம்

    இந்த விஷயத்தில் பலர் முதிர்ச்சி யில்லாமலும், வேறு பலர் சிறுபிள்ளைத்தனமாகவும் எழுதுகிறார்கள் என்பது என் கருத்து

     
    • manikandan 4:35 am on October 9, 2009 Permalink | Reply

      அப்ப அன்பே சிவம் கிறித்துவ மிஷனரி பிரசார படம் இல்லையா ? :) -

      • புருனோ 7:04 am on October 10, 2009 Permalink | Reply

        அது பொதுவுடமை படம் என்பது எனது கருத்து. அது கிறித்துவ மிஷனரி பிரசார படம் என்று நீங்கள் கருத உங்களுக்கு முழு உரிமை உள்ளது

        அது கிருத்துவ மிஷனரி பிரச்சார படம் என்று நீங்கள் கருதும் பட்சத்தில் கூட இந்துத்வா படம் எடுப்பதற்கு கமலுக்கு இருக்கும் உரிமை படம் கிருத்துவ படம் எடுப்பதற்கும் உள்ளது.
        இதற்காக கமலை குற்றவாளியாக்குவது முதிர்ச்சியின்மை

        அதே நேரம் அவர் உன்னைப்போல் போல் ஒருவன் எடுத்துள்ள ஒரே காரணத்தால் அன்பே சிவம் கிருத்துவ படம் இல்லை என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம்

        • கார்த்திக் 9:07 am on October 10, 2009 Permalink | Reply

          ஒண்ணும் புரியல. கமல் பேட்டி படிச்சாப்ல இருக்கு :)

          • manikandan 8:40 pm on October 10, 2009 Permalink | Reply

            கார்த்திக், ரொம்ப நாள் ஆச்சு ப்ருனோவும் நானும் இப்படி பேசி :) - நீங்க லூஸ்ல விடுங்க.

            • புருனோ 8:47 pm on October 10, 2009 Permalink

              சரி உங்களுக்கு புரிந்ததா… புரியவில்லை என்றால் மூக்கில் குத்தி விடாதீர்கள் !!

            • manikandan 9:03 pm on October 10, 2009 Permalink

              ப்ருனோ, நீங்கள் செய்தி / கருத்து போன்றவைகளுக்கான வித்தியாசத்தை மறுபடியும் சொன்னால் தான் இந்த ஆட்டம் முடிவடையும். :) -

              (கமலுக்கு எதையும் சொல்லும் உரிமை இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை வைத்து விமர்சனம் செய்யும் உரிமையும் அனைவருக்கும் இருக்கிறது :) - கமல் மட்டும் அல்ல. அனைத்திலும் இதுவே பொது..)

              நானே பயத்தில் இருக்கிறேன். உன்னைப்போல்ஒருவன் வாதத்தில் கலந்து கொண்டதால் :) -

              விமர்சனங்கள் குறித்தான எனது கருத்து http://thodar.blogspot.com/2009/09/blog-post_24.html

            • புருனோ 5:48 am on October 15, 2009 Permalink

              //(கமலுக்கு எதையும் சொல்லும் உரிமை இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை வைத்து விமர்சனம் செய்யும் உரிமையும் அனைவருக்கும் இருக்கிறது – கமல் மட்டும் அல்ல. அனைத்திலும் இதுவே பொது..)
              //

              வழிமொழிகிறேன்

  • புருனோ 4:26 pm on September 22, 2009 Permalink | Reply
    Tags: , சயனைட், சினிமா, , ராமு-சோமு, வாழைப்பழம், விமர்சணம், விஷம்   

    ராமு : ஏண்டா அந்த மருந்து கடைக்காரரை எல்லாரும் போட்டு கும்முறாங்க

    சோமு : அவர் என்ன மருந்து வித்தாலும் சூப்பரா இருக்குடா. பாராசிட்டமாலும் சூப்பரா இருக்கும், அமாக்சியும் சூப்பரா இருக்கு, சயனைடும் சூப்பரா இருக்கு,

    ராமு : இதுல என்னடா பிரச்சனை

    சோமு : ஆனா என்ன, என்ன மருந்துன்னு லேபிளில இருக்காது, கொஞ்சம் சாப்பிட்டு தான் தெரிஞ்சுக்கனும்

    ராமு : இப்ப வித்துட்டிருக்கிறது என்ன

    சோமு : நான் சாப்பிட்டு பாக்கல, ஆனா எல்லாரும் சொல்றத வைச்சு பாத்த, சயனைட் போலிருக்கு. அதான் இந்த அளவு அடி விழுகுது…

    ராமு : சயனைட் விக்குறது தப்பா ??

    சோமு : நிறைய பேர் சயனை விக்கிறாங்க…. ஆனா அதெல்லாம் நல்லா இல்ல…. இங்க சயனைட் நல்லா இருக்கிறது தான் பிரச்சனைன்னு நினைக்கிறேன். அது தவிர..

    ராமு : அது தவிர

    சோமு : இவர் வாழைப்பழத்துக்கு நடுவுல சயனைட் வைச்சு விக்காருன்னு வேற சொல்றாங்க…..

    ராமு : ??

     
    • Prabhu Rajadurai 9:37 pm on September 22, 2009 Permalink | Reply

      Have I understood this post correctly?

      Is this your blog Dr.Bruno?

    • கேபிள் சஙக்ர் 6:23 am on September 23, 2009 Permalink | Reply

      haa..haa.. உங்கபாயின்ட் ஆப் வியூவே தனிதான்.

    • கலை 2:01 pm on September 23, 2009 Permalink | Reply

      ஒன்றுமே புரியவில்லையே…….

    • கலை 5:39 pm on September 23, 2009 Permalink | Reply

      இப்ப புரிஞ்சுக்கிட்டேன் :)

    • Peer 9:33 pm on September 24, 2009 Permalink | Reply

      அவர் வாழைப்பழ வியாபாரியா சயனைட் வியாபாரியா? இல்ல.. ஒன்லி வியாபாரியா?

      • புருனோ 8:17 pm on September 25, 2009 Permalink | Reply

        அவர் வியாபாரி மட்டுமே

        ஆனால் என்ன விற்றாலும் தரமாக விற்பார்

        அவர் வாழைப்பழம் விற்க அவருக்கு உரிமை உள்ளது போலவே சயனை விற்கவும் அவருக்கு உரிமை உள்ளது. அது அவரது இஷ்டம். நீங்கள் வாங்கா விட்டால் அவர் விற்கமாட்டாரே !!

        அவர் வாழைப்பழத்தை விற்பதை பாராட்டவது போல் சயனைட் விற்பதை விமர்சிக்கவும் நமக்கு உரிமை உள்ளது.. இப்படி விமர்சித்தால் தான் அடுத்த முறை அவர் சயனைட் விற்க தயங்குவார் !!

        இதைத்தவிர முக்கிய விஷயம்

        அவர் இந்த முறை சயனைட் விற்றதால் அவரது வியாபார திறமையை விமர்சிப்பது எப்படி அறிவற்றதனமோ அதே போல் அவர் விற்றதாலேயே அது சயனைட் இல்லை, வாழைப்பழம் தான் என்று சப்பை கட்டு கட்டுவது முழு அயோக்கியத்தனம்

        புரிகிறதா

  • Mubaarak 1:15 am on August 2, 2009 Permalink | Reply
    Tags: கோணங்கள், கோவை, சினிமா   

    சினிமா ரசிகர்களுக்கு நல்ல தீனி. கோவையிலிருந்து இயங்கும் சினிமா இயக்கம் http://konangalfilmsociety.blogspot.com/

     
  • புருனோ 4:40 am on May 7, 2009 Permalink | Reply
    Tags: , சினிமா, , ,   

    வடிவேலு கல்லூரியில் படித்தால்

    பாடம் நடத்தும் போது : முடியல…
    வகுப்பு தேர்வு (கிளாஸ் டெஸ்ட்) : சொல்லவே இல்லை….
    கேள்வித்தாளை பார்த்தவுடன் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ
    நிலுவைப்பாடம் / பாக்கி பாடம் (அரியர்ஸ்) : ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி
    பிட் : எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்
    தேர்வு முடிவுகள் : இப்பவே கண்ணை கட்டுதே
    தேர்வானபின்னர் : ஹையோ ஹையோ

     
    • மங்களூர் சிவா 7:35 am on August 21, 2009 Permalink | Reply

      :) ))))))))))))))))))))

  • bsubra 2:18 pm on November 10, 2008 Permalink | Reply
    Tags: அப்படியா?, அவதானம், இந்தியர், கவனிப்பு, குணநலன், சினிமா, சிறப்பம்சம், , பண்பு,   

    அறிமுகமில்லாத இருவர் உரையாடிக் கொண்டிருக்கும் அபத்தமாக நுழைந்து ஏதோ பேசுவது, அசட்டுத்தனமாக சிரிப்பது, தாழ்வுணர்ச்சியுடன் செயல்படுவது என்று ஒரு சராசரி இந்தியக் குணத்தை இவர் இயல்பாக வெளிப்படுத்தினாலும் நமக்குத்தான் சங்கடமாக இருக்கிறது.

    - மூத்திரம் முட்டும் நகைச்சுவை

     
    • dYNo 5:49 am on November 11, 2008 Permalink | Reply

      >>சராசரி இந்தியக் குணத்தை<<

      ஸ்வஸ்திக் அண்ணாச்சி தன் குணத்தையெல்லாம் இந்தியர்கள் குணம்னு நினைச்சுகிட்டாரோ?

  • புருனோ 6:43 pm on October 12, 2008 Permalink | Reply
    Tags: , , , சினிமா, டேனியல் ராசையா, திலிப்   

    இளையராஜாவின் இரசிகர்களுக்கு ஏ.ஆர்.இரகுமானின் பாடல்களை விட, ஏ.ஆர்.இரகுமான் மேல் ஏன் அதிக வெறுப்பு?

    http://selvaspeaking.blogspot.com/2008/10/blog-post_12.html

    சுவாரசியமான அலசல்

     
  • புருனோ 11:34 am on October 4, 2008 Permalink | Reply
    Tags: ஆட்டோ, சினிமா, சைக்கிள், தானி, தானியங்கி மூவுருளி, , , , மிதிவண்டி   

    ”சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது” என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து தானா

     
  • புருனோ 11:27 am on October 4, 2008 Permalink | Reply
    Tags: கவுண்டமணி, சினிமா, செந்தில், , , , மேண்டில்   

    ”சொதப்பு”பவர்களை “மேண்டல் வேலை பார்த்துட்டான்” என்று கூறுகிறோமே…. இந்த சொல் புழக்கத்திற்கு வர காரணம் கவுண்டமணியும் செந்திலும் தானா

     
  • புருனோ 11:25 am on October 4, 2008 Permalink | Reply
    Tags: சினிமா, தங்கமணி, , , ,   

    மனைவியை குறிக்க தங்கமணி என்ற சொல் எப்படி பழக்கத்திற்கு வந்தது….

    அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து தானா

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel