Tagged: கேள்வி RSS

  • புருனோ 4:26 pm on September 22, 2009 Permalink | Reply
    Tags: சயனைட், , , ராமு-சோமு, வாழைப்பழம், விமர்சணம், விஷம், கேள்வி   

    ராமு : ஏண்டா அந்த மருந்து கடைக்காரரை எல்லாரும் போட்டு கும்முறாங்க

    சோமு : அவர் என்ன மருந்து வித்தாலும் சூப்பரா இருக்குடா. பாராசிட்டமாலும் சூப்பரா இருக்கும், அமாக்சியும் சூப்பரா இருக்கு, சயனைடும் சூப்பரா இருக்கு,

    ராமு : இதுல என்னடா பிரச்சனை

    சோமு : ஆனா என்ன, என்ன மருந்துன்னு லேபிளில இருக்காது, கொஞ்சம் சாப்பிட்டு தான் தெரிஞ்சுக்கனும்

    ராமு : இப்ப வித்துட்டிருக்கிறது என்ன

    சோமு : நான் சாப்பிட்டு பாக்கல, ஆனா எல்லாரும் சொல்றத வைச்சு பாத்த, சயனைட் போலிருக்கு. அதான் இந்த அளவு அடி விழுகுது…

    ராமு : சயனைட் விக்குறது தப்பா ??

    சோமு : நிறைய பேர் சயனை விக்கிறாங்க…. ஆனா அதெல்லாம் நல்லா இல்ல…. இங்க சயனைட் நல்லா இருக்கிறது தான் பிரச்சனைன்னு நினைக்கிறேன். அது தவிர..

    ராமு : அது தவிர

    சோமு : இவர் வாழைப்பழத்துக்கு நடுவுல சயனைட் வைச்சு விக்காருன்னு வேற சொல்றாங்க…..

    ராமு : ??

     
    • Prabhu Rajadurai 9:37 pm on September 22, 2009 Permalink | Reply

      Have I understood this post correctly?

      Is this your blog Dr.Bruno?

    • கேபிள் சஙக்ர் 6:23 am on September 23, 2009 Permalink | Reply

      haa..haa.. உங்கபாயின்ட் ஆப் வியூவே தனிதான்.

    • கலை 2:01 pm on September 23, 2009 Permalink | Reply

      ஒன்றுமே புரியவில்லையே…….

    • கலை 5:39 pm on September 23, 2009 Permalink | Reply

      இப்ப புரிஞ்சுக்கிட்டேன் :)

    • Peer 9:33 pm on September 24, 2009 Permalink | Reply

      அவர் வாழைப்பழ வியாபாரியா சயனைட் வியாபாரியா? இல்ல.. ஒன்லி வியாபாரியா?

      • புருனோ 8:17 pm on September 25, 2009 Permalink | Reply

        அவர் வியாபாரி மட்டுமே

        ஆனால் என்ன விற்றாலும் தரமாக விற்பார்

        அவர் வாழைப்பழம் விற்க அவருக்கு உரிமை உள்ளது போலவே சயனை விற்கவும் அவருக்கு உரிமை உள்ளது. அது அவரது இஷ்டம். நீங்கள் வாங்கா விட்டால் அவர் விற்கமாட்டாரே !!

        அவர் வாழைப்பழத்தை விற்பதை பாராட்டவது போல் சயனைட் விற்பதை விமர்சிக்கவும் நமக்கு உரிமை உள்ளது.. இப்படி விமர்சித்தால் தான் அடுத்த முறை அவர் சயனைட் விற்க தயங்குவார் !!

        இதைத்தவிர முக்கிய விஷயம்

        அவர் இந்த முறை சயனைட் விற்றதால் அவரது வியாபார திறமையை விமர்சிப்பது எப்படி அறிவற்றதனமோ அதே போல் அவர் விற்றதாலேயே அது சயனைட் இல்லை, வாழைப்பழம் தான் என்று சப்பை கட்டு கட்டுவது முழு அயோக்கியத்தனம்

        புரிகிறதா

  • புருனோ 9:11 am on August 13, 2009 Permalink | Reply
    Tags: , வேந்தன், இராமாயணம், , , கேள்வி, quiz   

    Quiz:கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்-இந்த வரிகளை இயற்றியது யார் ??

     
  • மணிகண்டன் 1:11 pm on May 3, 2009 Permalink | Reply
    Tags: பொது, , கேள்வி   

    சமீபத்தில் பலரிடம் பேசியபோது அவர்கள் கூற கேட்டது. இந்துமதம் என்ன சொல்லி இருக்குனா, இஸ்லாம் என்ன சொல்லி இருக்குனா, கிறிஸ்துவம் என்ன சொல்லி இருக்குனா,

    அது ஏன் என்கிட்ட மட்டும் எந்த மதமும் நேரடியா பேசமாட்டேங்குது

     
    • ரவி 9:45 pm on May 3, 2009 Permalink | Reply

      குரான், விவிலியம் அடிப்படையில் சொன்னாங்கன்னா தப்பில்லை தானே? ஆனால், கீதை, வேதங்கள் அடிப்படையில் மட்டும் இந்து சமய மேற்கோள்கள் சொல்வது சரியாக இருக்காது. இந்து சமயம் என்பதே கட்டமைக்கப்பட்ட ஒன்று என்கிறார்கள்..

    • புருனோ 9:03 am on May 5, 2009 Permalink | Reply

      The Eye Does Not See What the Mind Does Not Know என்பது வில்லியம் ஆஸ்லரின் கூற்று.

      • மணிகண்டன் 1:30 pm on May 6, 2009 Permalink | Reply

        ரவி,

        குரான் சொல்வது என்னவென்றால், கீதை சொல்வது என்னவென்றால், பைபிள் சொல்வது என்னவென்றால் – இதில் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் இதற்கும் கிருத்துவம் கூறுவது என்னவென்றால், இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்து மதம் கூறுவது என்னவென்றால் – மிக பெரிய வேறுபாடு இருக்கிறது என்பதே என் எண்ணம். மதம் என்பதை அதன் வேத புத்தகம், அதை பயன்படுத்திய விதம், பயன்படுத்தப்படும் விதம், அந்த மதத்தை சார்ந்த மனிதர்கள், அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தே கூற முடியும் அல்லவா ?

        • புருனோ 10:38 pm on May 6, 2009 Permalink | Reply

          //ஆனால் இதற்கும் கிருத்துவம் கூறுவது என்னவென்றால், இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்து மதம் கூறுவது என்னவென்றால் – மிக பெரிய வேறுபாடு இருக்கிறது என்பதே என் எண்ணம்.//

          இதை ரவி அழகாக விளக்கி விட்டார்.

        • ரவி 1:41 am on May 7, 2009 Permalink | Reply

          இசுலாமியர், கிறித்தவர்களுள் எவ்வளவு வேறுபாடு இருந்தாலும் பெரும்பான்மையினர்(?) விவிலியம் (பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு), குரானை அவர்கள் சமய நூல்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அச்சமயத்தினருக்காவது, அந்நூல்கள் கூறுவது அச்சமயங்கள் கூறுவதாக ஒப்புக் கொள்வதில் தயக்கம் இருக்காது.

          //மதம் என்பதை அதன் வேத புத்தகம், அதை பயன்படுத்திய விதம், பயன்படுத்தப்படும் விதம், அந்த மதத்தை சார்ந்த மனிதர்கள், அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தே கூற முடியும் அல்லவா ?//

          இப்படி இருந்தா நல்லா இருக்கும் தான். ஆனா, இப்படி இல்லையே (தசாவதார இறுதிக் காட்சியில் கமல் சொல்வது மாதிரி படிங்க :) )

    • Anonymous 2:44 am on May 21, 2009 Permalink | Reply

  • புருனோ 4:26 am on April 23, 2009 Permalink | Reply
    Tags: , கேள்வி,   

    மாபா பாண்டியராஜனை விட சரத் பாபு எந்த விதத்தில் உயர்ந்தவர் ??

     
    • ரவி 1:06 pm on April 23, 2009 Permalink | Reply

      உயர்ந்தவரோ இல்லையோ கவர்ச்சிகரமானவர் என்பதாலே இவ்வளவு வெளிச்சம். குடிசை வீடு, இட்டிலிக் கடை, படித்து விட்டுத் தொழில், இளைஞர், நேரடியாக அரசியலில் குதிக்கிறார் என்று விக்ரமன் படப் பாட்டு போல இருப்பதால்…

      • புருனோ 8:04 pm on April 23, 2009 Permalink | Reply

        இப்பொழுது அவர் குடிசை வீட்டில் இருக்கிறாரா. ஏதோ மாதம் பல லட்சம் சம்பாதிப்பதகாக கூறுகிறார்கள்

        சரத் பாபுவை போல் பாண்டியராஜனும் 1992ல் 60,000 ருபாய் முதலீட்டில் தனது நிறுவனத்தை ஆரம்பித்தவர்தான்.

        • ரவி 10:44 pm on April 23, 2009 Permalink | Reply

          பழசை மறக்காமல் இப்போதும் பழைய வீட்டில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். எவ்வளவு இலட்சம் ஈட்டுறார்னு தெரியல. நான் சொல்வது என்னவென்றால் ஊடகங்களுக்கு கவர்ச்சியான ஆள் தேவை. அந்த வகையில் பாண்டியராசனை விட சரத்பாபு ஒரு media darling. அவ்வளவு தான்.

          • புருனோ 3:32 am on April 24, 2009 Permalink | Reply

            அவர் ஊடகஅன்பிற்குரியவர் என்பதால் தான் இவ்வளவு கூத்தும் என்பது தான் என் கருத்து

            (அல்லது ஊடகஇனியவர்) – டார்லிங் என்ற சொல்லிற்கு பொருத்தமான தமிழ் பதம் எது)
            http://ta.wiktionary.org/wiki/darling

            • ரவி 11:30 am on April 25, 2009 Permalink

              சரியாப் போச்சு.. அவர் விசயகாந்த் கட்சியில் இருக்கிறார்னு தெரியும். ஆனால், விருதுநகர்ல போட்டி இடுறார்னு நீங்க இன்னொரு வலைப்பதிவில் குறிப்பிட்டுத் தான் தெரியும். விசயகாந்த்தும் தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் இது போன்ற ஆட்கள் களத்தில் இருப்பதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

  • ரவி 8:39 am on September 2, 2008 Permalink | Reply
    Tags: பாகுபாடு, மேல்தட்டு, , கேள்வி, அடித்தட்டு   

    ஏன் விசுவனாதன் ஆன்ந்த், பிந்திராவுக்கு கிடைத்த ஊடக கவனம், இளவழகிக்கு கிடைக்கவில்லை?

     
    • புருனோ 11:41 pm on September 3, 2008 Permalink | Reply

      இது கூட அறிவினா போலிருந்தாலும், நான் அறிந்ததை கூறுகிறேன்.

      ஆனந்த் தொடர்ந்து பல போட்டிகளில் வென்ற பிறகு தான் அவரை சிறிது எட்டி பார்த்தார்கள். 1989 முதல் பட்டங்கள் வென்றாலும் ஆனந்த அனைத்து தரப்பினரிடமும் பிரபலம் ஆனது 1995 செப்டம்பரில் தான்.

      எனவே பிந்திராவுடன் ஆனந்தை ஒப்பிட முடியாது என்பது என் கருத்து

      அப்படி என்றால் ஆனந்தை விட குறைவாகவே சாதித்து அவரை விட அதிகம் ஊடகங்களால் தாலாட்டப்பட்டவர்கள் என்றால் தோனி, சானியா மிர்சா என்ற ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது

      இளவழகியும் இதே போல் 2 வருடங்கள் தொடர்ந்து வென்று கொண்டிருந்தால் ஊடகங்கள் கவனம் செலுத்தும்

      பிந்திரா இதே பதக்கத்தை (ஒலிம்பிக் தவிர) வேறு போட்டியில் வென்றிருந்தால் இவ்வளவு சத்தம் கேட்டிருக்குமா என்று சந்தேகம் தான்

      ஆனந்தும் இளவழகியுடன் ஒப்பிட வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்.

      அடுத்ததாக ஒரு 3 மாதம் கழித்து பிந்திரா (ஊடகங்களில்) என்ன நிலையில் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்

  • bsubra 7:13 pm on July 23, 2008 Permalink | Reply
    Tags: Admin, சந்தேகம், தளம், மேலாண்மை, வலையகம், கேள்வி, , , , Users   

    எந்தத் தளத்துக்குப் போனாலும், அங்கே புள்ளிவிவரம் பார்க்க எனக்குப் பிடிக்கும். இங்கே எத்தனை பேர் வராங்க, எப்படி என்பதெல்லாம் அறிவது எக்காலம் :)

     
    • mayooresan 3:14 am on July 24, 2008 Permalink | Reply

      இங்கயும் அதே ;)

    • ரவி 3:15 am on July 24, 2008 Permalink | Reply

      மக்களே, இது நம்ம தளம். யாருக்குப் புள்ளி விவரம் பார்க்கணும்னாலும் இங்க சொல்லுங்க. அழைப்பு விடுக்கிறேன். மயூ, பாலா உங்க இரண்டு பேருக்கும் அழைப்பு அனுப்பி இருக்கேன்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel