Tagged: குழந்தைகள் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 8:40 pm on October 31, 2009 Permalink | Reply
    Tags: குழந்தைகள், குழந்தைமை, தணிக்கை, , ,   

    அக்கா மகன் பேராண்மை படம் பார்த்தான். அதில் வரும் காட்டு யானையைக் கண்டு பயப்படுகிறான். ஆனால், கொத்துக் கொத்தாக ஆட்களைக் கொல்வதை பயம் இல்லாமல் ரசித்துப் பார்க்கிறான் :( பாதிப்படத்தில் அக்காவைக் கடிந்து படத்தை நிறுத்தினேன். வீட்டுக்கு வீடு திருட்டு வட்டுகள் வந்த பிறகு தணிக்கையில் தரும் சான்றிதழ்களுக்கு என்ன பயன்?

     
    • கலை 3:22 am on November 1, 2009 Permalink | Reply

      :( . கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவது ஒருவேளை, யானையைப் பார்ப்பதை விட வெகு சாதாரணமாகி விட்டதுபோல இருக்கு :( .

  • ரவி 1:26 pm on October 4, 2009 Permalink | Reply
    Tags: , கல்வி வணிகம், குழந்தைகள், சிறுவர் விளையாட்டு, ,   

    பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் “Pre-KG interview” விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி முதல்வராக நடிப்பவள் தங்கள் பள்ளி நீச்சல், மொழி வகுப்புகள், மற்ற பல வசதிகள் செய்து தருவதால் ஆண்டுக்கு எத்தனை ஆயிரம் கூடுதல் கட்டணம், முன்பணமாக சில இலட்சம் கட்ட வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருக்கிறாள்.

    கொஞ்ச நாள் முன்பு “மானாட மயிலாட” விளையாட்டில் ஒருத்தி Namitha Mamஆக நடித்துக் கொண்டிருந்தாள்.

    **
    எனக்கு சிறு வயதில் கொட்டாங்குச்சி வைத்து அண்ணாச்சி கடை விளையாட்டு விளையாடியது நினைவில் வந்து சென்றது.

     
  • ரவி 11:04 pm on December 4, 2008 Permalink | Reply
    Tags: , குழந்தைகள்,   

    குழந்தைகளிடம் கணினியைப் பறிகொடுப்பது எப்படி? பின்வரும் மென்பொருள்களை நிறுவிக் கொடுங்கள்:

    TuxPaint, Tuxmath, TuxRacer, TuxType/, TuxPaint Stamps Installer, GCompris, ChildsPlay, Edubuntu (குழந்தைகள் கல்விக்கான லினக்சு வழங்கல்)

     
    • நாகு 6:10 pm on December 6, 2008 Permalink | Reply

      குழந்தைகளிடம் இருந்து கணினியைக் காப்பது எப்படி என்று சொல்லவேண்டும். :-)
      டக்ஸ்மேத் நிறுவிவிட்டு அதை மட்டும் விளையாடவேண்டும் என்று சொல்லிவிடுங்கள்.

    • ரவி 12:35 am on December 9, 2008 Permalink | Reply

      :)

    • சங்கர் கணேஷ் 3:04 am on December 14, 2008 Permalink | Reply

      Edubuntu – http://edubuntu.org/

    • ரவி 3:26 am on December 14, 2008 Permalink | Reply

      நினைவூட்டியதற்கு நன்றி, சங்கர். Wubi மாதிரி edubuntuவுக்கு ஏதாச்சும் இருக்கா? இப்ப gcompris, childsplayம் சேர்த்திருக்கேன்.

    • சங்கர் கணேஷ் 12:41 am on December 15, 2008 Permalink | Reply

      Edubuntu தளத்துள தேடிப் பார்த்தேன்… Wubi இருக்கான்னு சரியா தெரியலையே!

  • ரவி 11:55 pm on November 25, 2008 Permalink | Reply
    Tags: குழந்தைகள், ,   

    இந்தக் காலத்து ஆண் குழந்தைகள் நிறைய வன்முறை விரும்பிகளாக இருப்பது ஏன்? ஊடகம்? கூட்டுக் குடும்பங்கள் குறைவு? நகர்மயமாதல்? நுகர்வுப் பண்பாடு?

     
    • mayooresan 8:35 am on November 26, 2008 Permalink | Reply

      சிறுவர் மீதான அழுத்தம் இப்போது அதிகம். அந்தக் காலத்தில் சிறுவர் சிறிது படித்து நிறைய நேரம் பொழுதை இயறகையுடனும் பாட்டி பாட்டன் போன்ற உறவினருடனும் கழித்தனர். ஆனால் இன்று எந்த நேரம் பார்த்தாலும் கல்வி, வகுப்பு அது இது என்று ஓயாமல் சிறுவர்களை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றார்கள்.

      அழுத்த சக்தி ஒரு நாள் இயக்க சக்தியாக மாறுவது விஞ்ஞானத்தில் சரி என்றால் சிறுவனில் பிழையாக வாய்ப்பில்லை தானே?

    • புருனோ 5:19 am on November 28, 2008 Permalink | Reply

      //? ஊடகம்? கூட்டுக் குடும்பங்கள் குறைவு? நகர்மயமாதல்? நுகர்வுப் பண்பாடு?//

      அனைத்தும்

  • ரவி 6:37 am on July 18, 2008 Permalink | Reply
    Tags: turtles can fly, குழந்தைகள், , , மனிதம்   

    Turtles can fly பார்த்தேன். குழந்தைகள், போர், மனிதம் பத்தி நெஞ்சை உருக்கும் படம் :( கண்டிப்பா பாருங்க. இது மாதிரி படங்கள் தமிழ்ல வராதா :(

     
    • யாத்ரீகன் 6:03 am on June 19, 2009 Permalink | Reply

      படத்தலைப்பின் அர்த்தம் என்னவாக உணர்ந்தீங்க ரவி ?
      http://yaathirigan.blogspot.com/2008/03/turltes-can-fly.html

    • ரவி 9:07 am on June 19, 2009 Permalink | Reply

      என்னால தானா புரிஞ்சுக்க முடியலீங்க. இணையத்தில் உள்ள குறிப்புகள், குர்து மக்களை ஆமைகளாகச் சித்தரித்து அவர்கள் தங்கள் துயரத்தில் இருந்து விடுபட முயல்கிறார்கள் என்பது போல போகுது. சில படங்களின் தலைப்புகளைப் புரிந்து கொள்ளவே ரொம்ப யோசிக்க, படிக்க வேண்டியதா இருக்கு. (One flew over the Cuckoo’s nest படப் பெயர் ஒரு எடுத்துக்காட்டு).

    • யாத்ரீகன் 10:26 am on June 19, 2009 Permalink | Reply

      ஓ.. நீங்க குறிப்பிட்ட அந்த படம் தலைப்பும், “Clockwork Orange” இதுவும் உடனே நியாபகத்துக்கு வந்தது ..

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel