Tagged: கவிதை RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • கார்த்திக் 6:36 pm on April 6, 2010 Permalink | Reply
    Tags: கவிதை   

    (பேருந்தில் வரும் போது தோணிய கவிதை. வைரமுத்து பாணியில் வாசிக்கவும்)

    நீங்கள் படைப்புகளை வியக்கயில்,
    நான் படைத்தவனை படித்து கொண்டிருப்பேன்.

    நீங்கள் படைத்தவனை அறிய முயல்கயில்,
    நான் அவன் படைப்புகளை விஞ்சியிருப்பேன்

     
    • ரவி 11:00 am on April 7, 2010 Permalink | Reply

      கார்த்தி, நல்லா தானடா இருந்த :)

      • கார்த்திக் 11:15 am on April 7, 2010 Permalink | Reply

        :) பேருந்துல சன்னல் சீட்டு கிடைச்சா ஏதோ மந்திரி பதவி கிடச்ச மாதிரி ஒரு நினைப்பு. இது மாதிரி ஏதாவது நினைக்க தோணுது

        • ரவி 2:43 pm on April 20, 2010 Permalink | Reply

          சும்மா பேச்சுக்கு ஓட்டினேன். உண்மையிலேயே கவிதையின் பொருள் அருமை.

  • ரவி 12:50 am on March 27, 2010 Permalink | Reply
    Tags: கவிதை, , , சாதல் கவிதை, பழைய பேப்பர் கவிதைகள்   

    உன் பெயர் எழுதிய தண்ணீர் லாரி ஒன்று வந்தது.
    உன்னைக் காதலித்ததற்கு
    அதில் அடிபட்டாவது செத்திருக்கலாம்.

     
    • Mubaarak 10:54 am on April 7, 2010 Permalink | Reply

      :-) ))))))))))))

      ரவி, கலக்கல்

      • ரவி 10:58 am on April 7, 2010 Permalink | Reply

        கலக்கல் இல்ல முபாரக், கலங்கிப் போய் எழுதியது :(

  • ரவி 3:06 am on May 31, 2009 Permalink | Reply
    Tags: அசட்டுத்தனம், கவிதை,   

    கந்தசாமி திரைப்பாடல் ஒன்றில், “இட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதர் இல்லை, கொல்லாதே” என்று ஒரு வரி வருகிறது. இதை ஒரு யூதர் கேட்டால் எப்படி உணர்வார்? “ராசபக்சே பேத்தியே…” என்று எழுதினால் தமிழர் எப்படி உணர்வர்? 2004 சுனாமிக்குப் பிறகு எத்தனைப் பாடல்களில் “சுனாமி” என்ற சொல் வருகிறது என ஆயலாம். ஒரு சோகத்துக்குரிய சொல்லைப் பொருந்தா இடங்களில் பயன்படுத்துகின்றனர். கவிஞர்களின் கற்பனை வறட்சியால் வரும் அசட்டுத் தனம்.

     
  • சந்தோஷ் குரு 10:47 pm on March 10, 2009 Permalink | Reply
    Tags: கவிதை, சுயம்புலிங்கம்   

    அண்மையில் படித்ததில் மிகவும் பாதித்த கவிதை :

    தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

    நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்
    எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
    டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
    ஒரு அடி கொடுப்போம்
    வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்
    தீட்டுக்கறை படிந்த
    பூ அழிந்த சேலைகள்
    பழைய துணிச்சந்தையில்
    சகாயமாய் கிடைக்கிறது
    இச்சையை தணிக்க
    இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
    கால் நீட்டி தலைசாய்க்க
    தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
    திறந்தவெளிக் காற்று
    யாருக்கு கிடைக்கும்
    எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது
    எதுவும் கிடைக்காதபோது
    களிமண் உருண்டையை வாயில் போட்டு
    தண்ணீர் குடிக்கிறோம்
    ஜீரணமாகிவிடுகிறது
    எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
    நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.

    - மு. சுயம்புலிங்கம்

    நன்றி: சித்தார்த்

     
    • neotamizhan 1:13 am on March 11, 2009 Permalink | Reply

      நன்றி சந்தோஷ். இடுகைக்கும், உளரலை அறிமுகப்படுத்தியதற்கும்.

  • ரவி 10:47 pm on December 31, 2008 Permalink | Reply
    Tags: , கவிதை, தீண்டாமை, ,   

    நீ செய்யும் தொழிலே உன் தெய்வம்.
    என் கோயிலுக்குள் வராதே.

     
  • bsubra 11:34 am on November 12, 2008 Permalink | Reply
    Tags: Kavithai, Poems, கவிதை, சுரணை   

    உனக்கு சொரணை இருக்கிறதா என்று கேட்டுவிட்டான். இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் பார்த்து கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதால். -ந.முத்து (‘இருக்கு’ தொகுப்பிலிருந்து)

    நன்றி: அவியல் 12.11.2008

     
  • ulagam 8:28 am on September 15, 2008 Permalink | Reply
    Tags: , கவிதை   

    எனது அன்புக்குரிய கணினியே…

    உன்னால் உலக நிகழ்வுகளை அறிந்து கொள்கிறேன்,
    உன்னால் ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெருகிறேன்,
    உன்னுடன் எப்பொழுதும் ஒட்டி உறவாடி வருகிறேன்,
    உன்னுல் ஒலியும் ஒளியும் பார்த்து மகிழ்கிறேன்,

    மேலும் படிக்க…-> http://balachandar.net/blog268-2008-09-11.html

     
  • ulagam 8:27 am on September 15, 2008 Permalink | Reply
    Tags: கவிதை,   

    பொய் – http://balachandar.net/blog267-2008-09-11.html

     
  • புருனோ 11:31 pm on September 3, 2008 Permalink | Reply
    Tags: hearsay, , rhyme, அடுத்தவர் எழுதியது, கவிதை, கவுஜ, காதில் விழுந்தது   

    வா வா கருப்பாடு, கம்பளி மூட்டை கீதா,
    கீது நைனா, கீது, மூனு மூட்டை கீது
    அண்னாத்தைக்கு ஒன்னு, தங்காச்சிக்கு ஒன்னு
    அப்பால கீற குட்டி தம்பிக்கும் ஒன்னு

     
    • prakash 12:25 am on September 4, 2008 Permalink | Reply

      ஆகா… படிக்க ஸொல்லோ அப்டியே அள்ளிகினு பூட்சி நைனா..

    • பிரேம்குமார் 12:44 am on September 4, 2008 Permalink | Reply

      எங்கேயோ கேட்ட‌ பாட‌ல்.. அட‌ ந‌ம்ம‌ ‘பா பா பிளாக்கு ஷீப்பு’ :)

      இதுல ‘அப்பால கீறும்’ அப்படின்னு இருக்கு. ஒரு வேளை ‘அப்பால கீற’ அப்படின்னு இருக்கனுமோ?

    • புருனோ 3:37 am on September 4, 2008 Permalink | Reply

      மாற்றி விட்டேன் நன்றி

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel