நடுத்தர, மேல்தட்டு மக்கள் தொடக்க கல்வி முதலே ஆங்கிலத்தில் பயில்கிறார்கள். உயர் கல்வி வரை வரும் அடித்தட்டு மக்களுக்கு பயிற்று மொழி ஆங்கிலம். கல்வி மொழியாக இல்லாத மொழிகளின் வாழ்நாள் எவ்வளவு?
Tagged: கல்வி RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
புருனோ
செயல்வழி கற்றல் சமச்சீர் கல்வி முறையை நோக்கி செல்வது என்று கூட தெரியாதா
மனப்பாடபயிற்சி மட்டும் தான் கல்வியா ??
மாணவர்களின் எதிர்காலம் முக்கியமா அல்லது பாட நூல் வியாபாரிகளின் வியாபாரம் முக்கியமா – அது சரி, நூல் இல்லையென்றால் அதற்கு பதில் அட்டைகளை அவர்கள் அச்சிடலாம் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் தலையங்கம் எழுதிய அறிவாளி யாரோ.
உண்மையில் இவர்களின் தரம் குறித்து ஏற்கனவே அறிந்திருந்ததால் (http://payanangal.blogspot.com/2008/07/blog-post_29.html) எனக்கு ஏமாற்றமோ எரிச்சலோ சற்று குறைவுதான்.
-
புருனோ
தினமணி கட்டுரையிலிருந்து http://yosibbavan.blogspot.com/2008/08/blog-post_5550.html
நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் தேவையான “சமச்சீர் கல்வி’யை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்நாடு கல்வித்துறை புதிய குழப்பத்தைப் புகுத்திக் கொண்டுள்ளது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் “செயல்வழிக் கற்றல்’ (அஆக) என்பதே அது. கூறுபட்டும், வேறுபட்டும் கிடக்கிற கல்வி முறைகளை ஒருமுகப்படுத்த வேண்டிய நேரத்தில் எதிர்பாராமல் இன்னொரு புதிய முறையைப் புகுத்துவது கல்வித்துறையில் மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தாதா?
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை புத்தகம் இல்லை; தேர்வு இல்லை; எழுத்துப்பயிற்சி இல்லை; வகுப்பு மாற்றம் இல்லை; அட்டைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒரே வகுப்பறையில் மாற்றமில்லாமல் அமர்ந்து படிப்பது மாணவர் இடையே மனச்சோர்வை ஏற்படுத்தாதா? அரசு பாடநூல் நிறுவனம் வெளியிடும் பாடநூல்களை என்ன செய்வது?
பாடப் புத்தகங்களைக் கொண்டு பாடம் நடத்துகிற நடைமுறையை இத்திட்டத்தின் மூலம் கைவிட்டதால் படிக்கும் திறன், எழுத்துப்பயிற்சி, நூலறிவு, மனப்பாடப் பயிற்சி மாணவர் மத்தியில் இல்லாமல் போய்விட்டது. சென்னை மாநகராட்சியில் மட்டுமே இருந்து வந்த இந்தத் திட்டம், இப்போது தமிழகம் எங்கும் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் இப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து வருகிறது. இருக்கும் மாணவர்களையும் பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கி, இந்தத் திட்டத்தை அமல்படுத்தாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் ஏழை எளிய மாணவர்களுக்குப் புகலிடமாக இருந்துவரும் அரசு மற்றும் ஒன்றியப் பள்ளிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இப்படியொரு பாடமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று எந்தக் கல்விக்குழு பரிந்துரை செய்தது? இது நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு முடிவடைந்து விட்டது. இந்த ஓராண்டின் முடிவில் இதன் நிறைகுறைகளை ஆய்வு செய்து இரண்டாம் ஆண்டு தொடங்கியிருக்க வேண்டும். குறைபாடுகளைக் களையாமல் இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் பணியைக் கல்வித்துறை செய்து வருகிறது.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது எனப் பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். மாணவர் சேர்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது என்று ஆசிரியர்கள் கவலைப்படுகின்றனர். சமச்சீர் கல்விக்கு இது தடையாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர். இதனைத் தமிழகக் கல்வித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.தினமணி கட்டுரைகளின் தரம் குறித்து அறிய மேலும் ஒரு உதாரணம் http://payanangal.blogspot.com/2008/07/blog-post_29.html
ரவி
“செயல்வழிக் கற்றலால் மாணவர்களின் மனப்பாடப் பயிற்சி குறைகிறது. அச்சடித்த பாடநூல்கள் வீணாகின்றன” – தினமணி கட்டுரை. இது ஒரு பிரச்சினையா?
mayooresan
பிருத்தானிய உச்சரிப்பில் ஆங்கிலம் பேச விருப்பமா? http://www.wikihow.com/Speak-in-a-British-Accent
ரவி
ஒன்னாம் வகுப்பு படிக்கும் பையன் noun, adjective கண்டுபிடிக்க வேண்டுமாம். நான்காம் வகுப்பு படிக்கும் பொண்ணுக்கு கணக்குப் பாடத்தில் set theory, graph plotting எல்லாம் வருது. என்ன கொடுமை இது?
ரவி
கல்லூரித் தோழன். கல்வி உதவித் தொகை, குடும்பப் பின்னணி இல்லாமல் அமெரிக்கக் கல்வி உந்துதலால் சென்றான். 5 ஆண்டுகள். semesterக்கு 1,2 பாடங்கள். கல்விக் கட்டணம் கட்டுவதற்காக கிடைத்த வேலை செய்கிறான். இன்னும் முதுகலைப் பட்டம் வாங்கவில்லை.
ரவி
கல்லூரி நண்பன். மூன்று ஆண்டுகள் PhD படிப்பைப் பாதியில் விட்டு MBA படிக்கக் கிளம்பியிருக்கான். எங்க வகுப்பில் 95% பேர் ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாதவர்கள். ஒருத்தரைப் பார்த்து இன்னொருத்தர்னு சேர்ந்தாச்சு..
-
ravi_vow
சில சமயம் இந்த மாதிரி பாதை மாறுவது நல்லதுதான். விருப்பமின்றி ஒரு துறையில் இருப்பதை விட, குறைந்தப்பட்சம் வாழ்க்கையில் முன்னேறும் வழியையாவது பார்த்துக் கொண்டு போவது சிறந்தது. (அவருக்குக் கொடுக்கப்பட்ட மானியத் தொகை, போன்றவற்றை கருத்தில் எடுக்காவிட்டால்)
-
ரவி
vow, நல்ல விசயமாகத் தான் எழுதி இருக்கேன். அவனைக் குறிப்பிடுற நண்பர்கள் பலரும் “அவனாச்சும் escape ஆகிட்டான்டா”ங்கிற தொனியில தான் குறிப்பிடுறாங்க. சராசரியாக Phd சேர்பவர்களில் 40% பேர் முடிப்பதில்லைன்னு எங்க பேராசிரியர் சொல்றார். படிப்பு முடிச்ச பிறகு பாதை மாறுறவங்களும் இருக்காங்க.
ரவி
இன்னிக்கு வேர்ட்பிரெசு உதவி மன்றத்தில் சிலருக்கு உதவினேன். இணையத்தில் இப்படி உதவப் போய் கத்துக்கிட்டது நிறைய.
ரவி
எங்க உயிரியில் ஆசிரியர் சொன்னது: “என்ன தான் பொறந்ததுல இருந்து ஆங்கில வழியம்னாலும் தமிழ்ல பேசி விளக்காட்டி பசங்களுக்கு முழுசா மனசில பதியாது”
Pratheep 12:29 am on October 13, 2009 Permalink |
பதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3
01. கல்வியின் இன்றையநிலை?
02. சமசீர் கல்வியின் தேவை?
03. தாய் மொழிகல்வியின் தேவை?
நன்றி
http://oviya-thamarai.blogspot.com/2009/10/3_11.html