ஆரம்பம் “கும்மாளம் பொறியியல் கல்லூரி”
சிறப்பம்சங்கள்
1. மாணவர்கள் தேர்வுகளில் பிட் அடிக்க அனுமதிக்கப்படுவார்கள்
2. பிட் அடித்து / காப்பி அடித்து / அடுத்தவர் லாக் இன் ஐடியை பயன்படுத்து பிடிபடும் மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காது
3. மாணவர்களும், மாணவிகளும் கூடி கும்மாளம் அடிக்க வசதி செய்தி தரப்படும்
4. ஸ்பெஷல் க்ளாஸ் என்ற பெயரில் மாணவ மாணவியர் இரவு 11 மணிக்கு கூட ஊர் சுற்றி விட்டு வீட்டிற்கு வரலாம்
5. கல்லூரி பேரூந்தில் படியில் தொங்கிக்கொண்டு வர வேண்டும்
இப்படி ஒரு கல்லூரி இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தையை சேர்ப்பீர்களா அல்லது கீழே குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் கல்லூரியில் சேர்ப்பீர்களா
–
ஒரு கல்லூரியை பற்றி கூறப்படும் “குற்றச்சாட்டுகள்”
“சார் நாங்க மாணவர்களா, கைதிகளான்னு தெரியல. அந்த அளவுக்கு எங்கள இங்க அடக்கி வைக்கிறாங்க. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இங்க பேசிக்கக்கூடாது. சும்மா ஒரு ஹலோ சொன்னா கூட பெற்றோரை உடனே வரச்சொல்லி ஒரு வாரம் அலைய விடுவாங்க. காலேஜ் பஸ்ல படியில நிக்கக்கூடாது.மீறுனா ஒரு வாரத்திற்கு அந்த ஸ்டாப்புல பஸ் நிக்காது. அடுத்த ஸ்டாப்புக்கு போயிதான் ஏறனும்
பிட் அடிக்கிறது தப்புத்தான். நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அப்படி செஞ்சா, இண்டர்னல் மார்க் இருபதையும் கட் பண்ணிடுவாங்க. அப்புற்ம் இங்க மாடல் எக்சாம் எழுத முடியாது. நேரடியாக யுனிவர்சிடி எக்சாமைத்தான் எழுதனும். தினம் தினம் செத்து பிழைக்கிறோம் சார்”
–
என்ன் கொடுமை சார் இது !!!
msathia 11:00 am on June 4, 2009 Permalink |
வேற கல்லூரியே இல்லைன்னா, கட்டாயமா முதலில் கொடுத்த ‘கலக்கல்’ கல்லூரில தான் சேர்ப்பேன்.ஏனென்றால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நண்பன் நீங்கள் சொன்ன இரண்டாவது கல்லூரியில் படித்தவன். இந்தளவுக்கு வன்முறை நிறைந்த கல்லூரியை நடுத்துவது தமிழகத்துக்கு அவமானம்.
msathia 11:01 am on June 4, 2009 Permalink |
திருத்தம் ; ‘கல்லூரியை நடத்த விடுவது தமிழக அரசுக்கு அவமானம்’ என்று சொல்ல வந்தேன்.
Ganesh 12:05 pm on June 4, 2009 Permalink |
Rendu collegekum NO than. Its like asking how you want to die ? Tasty Poison or Train munnadi poi vizhuthaa..
புருனோ 7:11 am on June 5, 2009 Permalink |
இந்த பதில் தான் நான் எதிர்பார்த்தது
இரண்டாவது கல்லூரி சரியில்லை என்பதற்காக ஒரேயடியாக முதல் கல்லூரியை நோக்கி செல்லக்கூடாது என்பதே என் கருத்து
நன்றி தல
ரவி 7:07 pm on June 4, 2009 Permalink |
கும்மாளம் கல்லூரியில் 1, 2, 5 தவறு. 3, 4 நடப்பதில் என்ன தவறு? IIT, REC, அண்ணா பல்கலை (சில துறைகள் மட்டும்) மருத்துவக் கல்லூரிகளில் இல்லாத சுதந்திரமா? இந்த மாணவர்கள் கெட்டா போய்விட்டார்கள்?
இரண்டாவது கல்லூரி போல் நடத்துவதற்குப் பதில் ஒரு பால்வாடி நடத்தலாம். நான் படித்த புதுக்கோட்டையில் உள்ள இரு பாலர் பள்ளியில் கூட +2 வரை ஆண்-பெண் அருகருகில் அமர்ந்தே படித்தோம். (ஒரு ஆண்.. ஒரு பெண். ஒரு ஆண் என்று வரிசை போகும். இடப்பக்கம் முழுக்க ஆண்கள், வலப்பகம் முழுக்கப் பெண்கள் என்றில்லை).. ஆனால், பெருநகரங்களில் காட்டுமிராண்டித் தனமாக நடத்தப் படுகிறது. இள வயதில் ஆணும் பெண்ணும் இயல்பாக கலந்து பேசிப் பழக வேண்டியது ஒவ்வொருவரின் ஆளுமையிலும் மிக முக்கியமான ஒன்று. இந்த வாய்ப்பு இல்லாதது தான் பெண்களை நட்பாகப் பார்க்க கற்றுத் தராமல் eve teasing, மற்ற குற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது. கல்லூரிக் காலத்தில் இரு பாலரும் பேசிப் பழகாவிட்டால், வேலையிடத்திலும் இருவரும் இயல்பாக இணைந்து வேலை செய்வது சிரமம்.
கல்லூரிகள் பாடத்தை ஒழுங்காக நடத்தினாலே போதும். அதை விட்டு விட்டு moral science ஆசிரியராக நடத்தத் தேவையில்லை. பிள்ளைகள் காதல் திருமணம் செய்யக்கூடாது என்ற பிற்போக்குத்தனமான எண்ணம் உள்ள பெற்றோரே இக்கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அது நிருவாகத்துக்கும் வசதியாகப் போய் விடுகிறது.
புருனோ 7:13 am on June 5, 2009 Permalink |
நான் கூற வந்ததும் இது தான். பிட் அடிப்பது என்ன பெரிய குற்றமா என்ற ரீதியில் கருத்துக்கள் வந்ததை சுட்டி காட்டத்தான் இந்த கேள்வி
புருனோ 7:14 am on June 5, 2009 Permalink |
//இள வயதில் ஆணும் பெண்ணும் இயல்பாக கலந்து பேசிப் பழக வேண்டியது ஒவ்வொருவரின் ஆளுமையிலும் மிக முக்கியமான ஒன்று. இந்த வாய்ப்பு இல்லாதது தான் பெண்களை நட்பாகப் பார்க்க கற்றுத் தராமல் eve teasing, மற்ற குற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது. கல்லூரிக் காலத்தில் இரு பாலரும் பேசிப் பழகாவிட்டால், வேலையிடத்திலும் இருவரும் இயல்பாக இணைந்து வேலை செய்வது சிரமம்.//
வழி மொழிகிறேன்
புருனோ 7:14 am on June 5, 2009 Permalink |
//இரண்டாவது கல்லூரி போல் நடத்துவதற்குப் பதில் ஒரு பால்வாடி நடத்தலாம். //
சூப்பர்
புருனோ 7:15 am on June 5, 2009 Permalink |
//கல்லூரிகள் பாடத்தை ஒழுங்காக நடத்தினாலே போதும்.//
இது சரி
// அதை விட்டு விட்டு moral science ஆசிரியராக நடத்தத் தேவையில்லை. //
moral science வேண்டும். ஆனால் எது moral science என்பதில் அந்த கல்லூரியின் கொள்கை extreme ஆக இருக்கிறது என்றே நினைக்கிறேன்