Tagged: கருத்து RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • bsubra 12:57 pm on September 16, 2008 Permalink | Reply
    Tags: , , கருத்து, , , ,   

    மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:

    “புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.

    பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

    நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).

    உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா. :)

    அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”

     
  • புருனோ 7:17 pm on August 17, 2008 Permalink | Reply
    Tags: freedom of speech, gandhi, non violence, கருத்து, , ஜால்ரா, தலைவர்,   

    //காந்தியின் முக்கியமான பண்பு, மிக முக்கியமான இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்கியது.//

    தகுதி அடிப்படையில், சுய விருப்பு வெறுப்பின்றி உருவாக்கியது.

    //பல விஷயங்களில் இவர்கள் காந்தியுடன் சண்டையிட்டனர். //

    இது தான் முக்கியம்

    தனக்கு “ஜால்ரா” அடிக்காதவர்களை கூட அவர்களின் தகுதி அடிப்படையில் இரண்டாம் நிலை தலைவராக ஆக்கியது தான் காந்தியின் மேண்மை.

    இதில் தான் காந்தி பிற (தனது கருத்தை வெளிப்படுத்துபவர்களை அருகில் அண்ட விடாமல் செய்யும்) சுதந்திர இந்தியாவின் அரசியல் தலைவர்களிடமிருந்து வேறு படுகிறார்

     
  • bsubra 8:44 pm on August 4, 2008 Permalink | Reply
    Tags: இறப்பு, , கருத்து, , , , மரணம், ,   

    பா ராகவன் :: யுவர்ஸ் ஒபீடியன்ட்லி

    இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது

    (குதிரைகளின் கதை தொகுப்பு)

     
  • bsubra 8:31 pm on August 4, 2008 Permalink | Reply
    Tags: , , கருத்து, , , , ,   

    பா ராகவன் :: மூன்று காதல்கள்

    அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள்.

    (குதிரைகளின் கதை தொகுப்பு)

     
  • bsubra 8:14 pm on August 4, 2008 Permalink | Reply
    Tags: , கருத்து, சிற்றிதழ், , ,   

    இரண்டே அறைகள் கொண்ட வீடு :: யுவன் சந்திரசேகர்

    தற்காலத் தமிழிலக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கும் புதிய போக்குகள், எழுத்தாளர்களெல்லாம் பத்தியாளர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் ரசவாதம், கவிதைகளில் பெரும் தேக்கம் வந்து சேர்ந்திருப்பது, புத்தகங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரசுரமாவதும் அவற்றைப் பற்றி மிகையான கூறுகளில் விளம்பரங்களும் மதிப்புரைகளும் வெளியாகி, அப்பாவி வாசகனைக் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும், ஜனநாயகமயமாகும் எல்லாத்துறையிலும் இயல்பாகவே பதர்கள் அதிகரித்துவிடுவது என்று அலைந்து கொண்டிருந்தது பேச்சு.

    இசைத்துறையும் விதிவிலக்கில்லை என்றும் சாஸ்திரிய சங்கீதமும் திரைப்பட பாடல்களும் கூட இந்த ஸ்திதிக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தோம்.

    (வார்த்தை – ஜூன் 2008)

     
  • புருனோ 11:55 am on July 31, 2008 Permalink | Reply
    Tags: கருத்து, தகவல்,   

    தகவல் வேறு (fact)
    கருத்து வேறு (opinion)
    நம்பிக்கை வேறு (belief)

    தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
    சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.

    உதாரணம் :
    சரியான தகவல் – பெட்ரோல் விலை 50 ரூபாய்
    தவறான தகவல் – பெட்ரோல் விலை 25 ரூபாய்

    கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்

    ஒரு கருத்து – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்

    வேறு ஒரு கருத்து – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

    இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.

    அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது

    ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம்.

    அப்ப நம்பிக்கை -

    உதாரணம்

    நம்பிக்கை 1 – பெட்ரோல் விலை குறையும்
    நம்பிக்கை 2 – பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
    நம்பிக்கை 3 – பெட்ரோல் விலை கூடும்

    நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது

    படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது :) :) :)

     
  • ரவி 12:54 pm on July 25, 2008 Permalink | Reply
    Tags: கருத்து,   

    கருத்துகளும் அதைச் சொல்பவர்களும் ஒன்றும் சாதிப்பதில்லை. யாரை நோக்கிச் சொல்கிறோமோ, அவர்கள் தான் ஏதாவது சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

     
    • புருனோ 6:37 am on August 5, 2008 Permalink | Reply

      சாதித்தவர்கள் சொன்ன கருத்துக்கள் பற்றி – உதாரணம் God does not play dice

  • bsubra 6:59 am on July 9, 2008 Permalink | Reply
    Tags: , கருத்து, , பொருள், மகள்,   

    ‘தெரியல’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள்: விளங்கவில்லை (அல்லது) பார்க்க முடியவில்லை

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel