பெங்களூரில் நடக்கும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்கள் எனக்கு எப்போதுமே அந்நியமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் கொழுக்கட்டை, விடுமுறை என்று வீட்டிலே கொண்டாடிவிட்டு இங்கே பந்தல், பண வசூல், தோட்டாதரணி செட் போன்ற தற்காலிக கோவில்கள் என்று இருப்பதை பார்த்தால் விந்தையாக உள்ளது. இது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை
Tagged: எண்ணங்கள் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
சந்தோஷ் குரு
-
bsubra
மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:
“புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.
பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).
உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா.
அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”
-
ரவி
எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள் – நான் விரும்புகிற 95% பேருமே ஏதோ ஒரு வார்ப்புருவுக்கு உட்பட்டே படைக்கிறார்கள். சில வேளை சலிக்கவும் செய்கிறது.
-
ரவி
தமிழனா இருக்க ஒரே காரணத்தால உள்ளூர் அரசியல், தசாவதாரம், சிவாஜி-ன்னு செய்திகள், விமர்சனம் படிக்க எவ்வளவு நேரம் வீணாகுது? உலகக் குடிமகன் ஆகணும். இல்ல, இடம், இனம், மொழி அடையாளங்களைக் கடக்கணும்.
ரவி 4:34 am on August 24, 2009 Permalink |
பிள்ளையார் பிறந்த நாள் உட்பட பல திருநாள்களைத் தமிழர்கள் கொண்டாடும் விதத்தில் ஏற்கனவே அண்டை மாநில, வட நாட்டுத் தாக்கம் நிறைய வரத் தொடங்கி விட்டது. முக்கிய காரணம் செயற்கைக்கோள் தொலைக்காட்சி. உண்மையில், இதன் வரவுக்குப் பிறகு எல்லா கொண்டாட்டங்களுமே “முழு நாள் தொலைக்காட்சி காணும் விடுமுறை” நாட்களாக மாறி வருகின்றன