Tagged: உளவியல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 5:05 pm on April 20, 2011 Permalink | Reply
    Tags: உளவியல், கூர்ப்பியல்,   

    விடுதி, அலுவலகம், பன்மாடிக்குடில் என்று எங்கு சென்றாலும் ஒரு கதவு, சாளரம் திறந்திருந்தாலோ, கண்ணாடி வழியாக உள்ளே உள்ளது தெரிந்தாலோ ஒரு நொடி நேர ஓரப் பார்வை பார்க்கத் தோன்றுகிறதே? எங்கள் இடத்தையும் இப்படி பலர் பார்த்திருக்கிறார்கள். பார்க்கிறார்கள். இது ஏன்?

    குறிப்பு: வேண்டும் என்றே மெனக்கெட்டு எட்டிப் பார்ப்பதல்ல. ஏதேனும் ஒரு திறப்பு இருந்தால் அனிச்சையாக ஓரப் பார்வை பார்ப்பதையே குறிப்பிடுகிறேன்.

     
    • கார்த்திக் 10:45 am on April 21, 2011 Permalink | Reply

      //பன்மாடிக்குடில், சாளரம்
      இரு அருமையான தமிழ் சொற்களை அறிய வைத்ததற்கு நன்றி!! :)

      • ரவி 11:05 am on April 21, 2011 Permalink | Reply

        பன்மாடிக்குடில் என்ற சொல் சமயபுரம் அருகே ஒரு வீட்டில் கண்டேன். அவ்வப்போது பொதுப் பயன்பாட்டில் இது போன்ற அருமையான சொற்கள் கிடைக்கின்றன.

      • புருனோ 6:46 am on April 24, 2011 Permalink | Reply

        அடுக்ககம்; அடுக்கில்லம்

    • புருனோ 6:39 am on April 24, 2011 Permalink | Reply

      :)

      • ரவி 10:47 am on April 24, 2011 Permalink | Reply

        அடுக்ககம் நல்லா இருக்கு. சரி, நான் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்கப்பா :)

    • பாண்டி 3:44 pm on April 24, 2011 Permalink | Reply

      உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோணுது

    • பாண்டி 3:48 pm on April 24, 2011 Permalink | Reply

      மூடி வைத்து இருக்கும் எல்லாவற்றையும் திறந்து பார்க்கும் அல்ப ஆசைதான்.

    • சுந்தர் 11:21 am on April 26, 2011 Permalink | Reply

      குறுகுறுப்பு என்பது வேட்டையாடி வாழும் விலங்குகளுக்கான ஒரு படிவளர்ச்சிப் பண்பாக இருக்குமென நினைக்கிறேன். மாந்தரும் அப்படி இருந்தபடியால் இது ஆழமாகப் பதிந்திருக்கும்.

      காட்டாக ஒரு காட்டுயிர்ப்படத்தில் வந்த காட்சி நினைவுக்கு வருகிறது. ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி நிலவும்போது, குரங்குகளுக்கு மட்டும் நீர்நிலை ஒன்றின் இருப்பிடம் தெரிந்திருக்கும். அதை அறிந்து கொள்வதற்காகப் பழங்குடி மாந்தனொருவன் ஏதோ மரத்தின் விதைகளைக் கையில் மறைத்துக் கொண்டு வேண்டுமெனவே ஒரு குரங்கு பார்க்கும்படி புற்றினுள் வைப்பான். குரங்குக்கு உள்ளே அப்படி எதைத்தான் வைத்தான் என்று அறியும் ஆவல் பிறக்கும். உள்ளே கையை விட்டு விதைகளை அள்ளியவுடன் கை விரிவாவதால் அதை எடுக்க முடியாமல், விதைகளை விட்டுவிடவும் முடியாமல் அங்கேயே நிற்கும் குரங்கை மாந்தன் பிடிப்பான்.

      • ரவி 2:37 pm on April 26, 2011 Permalink | Reply

        சுந்தர், குறுகுறுப்பு நல்ல சொல். சரியான சொல் சிக்காததால் ஓரப்பார்வை, எட்டிப்பார்த்தல் என்று வெவ்வேறு விதமாகச் சொல்ல முயன்றேன்.

        இது குறித்து எந்ந ஆய்வையும் படிக்கவில்லை. யார், எங்கு என்று இல்லாமல் பலரிடமும் இவ்வழக்கம் இருப்பதைக் கண்ட பிறகே படிவளர்ச்சியுடன் தொடர்பு கொண்டு யோசிக்கத் தோன்றியது. உங்கள் நோக்கும் பெருமளவு ஒத்துள்ளது.

        குகைகளின் இண்டு இடுக்குகள், பள்ளங்கள், பார்வைக்கு மறைவாக உள்ள இடங்களில் இருந்து ஏதேனும் ஆபத்துகள் வரலாம் என்பதால் இவற்றை உற்றுக் கவனித்தே அடி எடுத்து வைக்கும் வழக்கம் இருந்திருக்கலாம். இதன் தற்கால நீட்சியே இந்தக் குறுகுறுப்பு என்று நினைக்கிறேன். பொதுவாக, தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றிய அனைத்துத் தகவலையும் பெறும் உந்துதல் என்றும் கருதலாமா?

        • சுந்தர் 3:10 pm on April 26, 2011 Permalink | Reply

          ஆம், இரவி. கிட்டத்தட்ட நானும் அப்படித்தான் நினைத்தேன். மேற்கொண்டு இப்போது துழாவியதில் http://www.jstor.org/pss/4533136 கட்டுரைச்சுருக்கம் கிடைத்தது. வீட்டில் “The Moral Animal” நூல் உள்ளது, அதில் ஏதும் குறிப்பு அகப்படலாம்.

        • சுந்தர் 8:18 am on April 27, 2011 Permalink | Reply

          குறுகுறுப்பு, பல படங்களில் வடிவேலு போன்றோர் (சற்றே மாறுபட்ட பொருளில்) பயன்படுத்தியதைப் பார்த்திருக்கிறேன். அதனால் தோன்றியது. :)

      • ரவி 2:38 pm on April 26, 2011 Permalink | Reply

        ஆர்வமூட்டும் செய்தி. குரங்கைப் பிடத்த பிறகு, அது நீர்நிலைக்கான வழி காட்டுமா? :)

        • சுந்தர் 2:54 pm on April 26, 2011 Permalink | Reply

          குரங்கைப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு அதற்கு உப்புக்கட்டியைக் கொடுப்பான். அதை உண்டவுடன் தண்ணீர்த்தாகத்தால் அது துடிக்கும். பிறகென்ன, கட்டவிழ்த்தவுடன் நேராக நீர்நிலைக்குச் செல்லும். நம்மாளும் பின்தொடர்வார். :)

  • ரவி 2:37 pm on April 20, 2010 Permalink | Reply
    Tags: , tipping point, உளவியல், ,   

    Tipping Point படித்தேன். சிறிய மாற்றங்கள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார். எனக்கு ரொம்பப் பிடித்த Broken windows கோட்பாடு பற்றிய எடுத்துக்காட்டும் வருது. ஒரு உளவியல் நூலை இந்த அளவுக்கு விறுவிறுப்பா எழுத முடியுமா? அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

     
    • கார்த்திக் 10:19 am on April 21, 2010 Permalink | Reply

      அவரோட Blink ரொம்ப அருமையா இருந்துச்சு.

    • கார்த்திக் 10:24 am on April 21, 2010 Permalink | Reply

      ஆமா ஒரே நேரத்துல ரெண்டு புக், அதுவும் non-fiction, படிக்க உன்னால மட்டும் எப்பிடி முடியுது?

      நான் இது வர மூணு non-fiction தான் படிச்சுருக்கேன் ;)

      Blink
      Brief History of Time
      Standing on Shoulders of Giants

      • ரவி 10:40 am on April 21, 2010 Permalink | Reply

        கொஞ்சம் வெட்டியா இருக்கேன்னு வைச்சுக்கலாம் :) தூரத்தில் உள்ள வாடகை நூலகத்தில் போய் வாங்கிட்டு வருவதால் ஒரே மூச்சுல 2,3 புத்தகம் எடுத்து ஒரு வாரத்துக்குள்ள திருப்பிக் கொடுக்க வேண்டியதும் ஒரு காரணம். அவரோட புத்தகங்கள் விறுவிறுப்பா இருப்பது இன்னொரு காரணம். வீட்டுல இருக்கிற ஏகப்பட்ட non-fiction நூல்கள் அப்படியே கிடக்கு.

        இப்ப அவரோட Blink, What the dog saw எடுத்து வந்திருக்கேன்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel