கமலின் ஐம்பதாண்டு திரையுலக பிரவேசத்தை முன்னிட்டு, கமலதாரா ஸ்தோத்திரம், ஹாசர் அந்தாதி, கமலா சகஸ்ரநாமம் வெளியீட்டு விழா. உபயம்: விஜய் டி.வி. மறக்காமல் இன்று இரவு 8:30க்கு பாருங்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை இரவு 10:30க்கு ஒரு தடவையும், மறுநாள் காலை 11:00க்கும், மதியம் 2:30க்கும் கூட பார்க்கலாம். அதையே ஒரு மாதம் கழித்து “கமல் – விஜய் கோல்டன் மொமண்ட்ஸ்” என்று நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். உலக நாயஹ நமோ நமோ.
Tagged: உளறல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
சந்தோஷ் குரு
-
சந்தோஷ் குரு
சென்னையில் இருந்து சோளிங்கர், அங்கிருந்து பெங்களூருக்கு நான் செலவழித்த பேருந்து கட்டணம் மொத்தம் 180 ரூபாய். பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து என் வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்கு அளித்த கட்டணம் 150 ரூபாய்
-
ரவி
அரிசி கிலோ ஒரு ரூபாய். சிறுநீர் கழிக்க 2 ரூபாய்.
-
R.Arokiasamy
govt. gives 1rs. rice. but urinal 2rs .its too bad.
-
-
சந்தோஷ் குரு
State Bank of Indiaவில் வீட்டிற்காக ஒரு கடன் வாங்க சென்றால், என் ஜட்டி அளவு எண் தவிர்த்து, என்னைப் பற்றிய மற்ற அனைத்து விவரங்களையும் கொடுக்க சொல்லி காய்ச்சி எடுக்குறாங்க. முடியல.
-
bsubra
மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:
“புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.
பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).
உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா.
அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”
-
-யெஸ்.பாலபாரதி
நானும் குதிச்சுட்டேன்.. அவ்வப்போது வந்து உளறுவேன்
-
ரவி
வருக பாலா !
-
பிரேம்குமார்
வாங்க பாலா வாங்க
-
-
சந்தோஷ் குரு
பாரதி, கீழ்சாதி எனக்கூறப்படும் மக்களுக்கு ஏன் பூணூல் அணிவித்தார். தன்னுடைய பூணூலையும் தன் கொள்கை ஒத்த பார்ப்பனர்களின் பூணூலை அறுத்து அல்லவா எறிந்துருக்க வேண்டும்.
-
ரவி
நல்ல கேள்வி.
காந்தி எளியவர்களைப் போல உடையணிந்தது, இந்தியாவில் உள்ள எளியவர்களுக்கு எல்லாம் coat, suit வாங்கித் தருவதை விட வலிமையான அணுகுமுறை. எதன் பெயரில் “உயர்வு, உரிமை, தகுதி” என்ற பிம்பங்கள் உருவாக்கப்படுவதோ அதையே மொத்தமாகப் புறக்கணிப்பது தான் சரியாக இருக்கும். மற்ற அணுகுமுறைகள் sanskritisation போல் ஆகலாம்.
திருப்பதி வேங்கடேசரை தலித் தெருக்களுக்கு எடுத்து வரப் போகிறோம் என்று ஒரு செய்தி வந்தது. அதற்குப் பதிலாக தலித்துகளையே கோயிலுக்குள் விட்டால் என்ன என்று தோன்றியது.
-
புருனோ
ரவி,
நான் ப்ளாககர் உபயோகிக்கிறேன்
நீங்கள் வோட்பிரஸ் உபயோகிக்கிறீர்கள்-
என்னை வோட்பிரஸ் உபயோகிக்க வைப்பது (என்னை உங்களை போல் ஆக்குவது) உங்களுக்கு வெற்றியா
நீங்கள் ப்ளாக்கர் உபயோகிப்பது (நீங்கள் என்னைப்போல் ஆவது) உங்களுக்கு வெற்றியா-
-
ரவி
புருனோ, blogger தான் வென்றது என்று எழுதிக் கொடுத்திடுறேன். இன்னொரு முறை இந்த உரையாடல்,எடுத்துக்காட்டே வேண்டாம்
**
உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?அவன்
கைகளை
வெட்டு!கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே…அம்மணமாகவே
போராடு..! -
பிரேம்குமார்
புருனோ,
என்னை போல உங்களை ஆக்குவது எனும்போதே…. ‘நான் உயர்ந்தவன்’ என்ற மனப்பான்மை வந்துவிடுகிறதே
Thats the point
-
புருனோ
//என்னை போல உங்களை ஆக்குவது எனும்போதே…. ‘நான் உயர்ந்தவன்’ என்ற மனப்பான்மை வந்துவிடுகிறதே//
நெத்தியடி – மிக அருமையான உதாரணம் – நன்றாக புரிகிறது. நன்றி
-
புருனோ
பிரேம்குமார்,
உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
-
புருனோ
//புருனோ, blogger தான் வென்றது என்று எழுதிக் கொடுத்திடுறேன். இன்னொரு முறை இந்த உரையாடல்,எடுத்துக்காட்டே வேண்டாம் //
ஹி ஹி ஹி
ரவி, நான் வோர்ட்பிரஸின் எதிரி கிடையாடு. custom domain வசதி இலவசமாக வழங்கப்பட்டால் என் பதிவுகளில் பல வோர்ட்பிரஸுக்கு மாறி விடும்
-
ப்ளாக்கரை விட வோர்ட்பிரஸ் சிறந்த மென்பொருள். ஆனால் வார்ப்புருவை திருத்த காசு கேட்பதும், custom domainக்கு காசு கேட்பதும் தான் எரிச்சல்
-
தனித்தளத்தில் வோர்ட்பிரஸ் என்றல்ல, PHP Nuke, phpbb forum என்று பல மென்பொருட்களை நிறுவி கொந்தர்களின் தொல்லைக்கு ஆட்பட்டவன் நான்
-
-
periyar critic
‘திருப்பதி வேங்கடேசரை தலித் தெருக்களுக்கு எடுத்து வரப் போகிறோம் என்று ஒரு செய்தி வந்தது. அதற்குப் பதிலாக தலித்துகளையே கோயிலுக்குள் விட்டால் என்ன என்று தோன்றியது.’
இது கோயிலுக்கு நீங்கள் போகாவிட்டாலும் சாமி உங்களைத் தேடி வருகிறார் என்பதற்காக.இந்துமத
விரோதிகளுக்கு இது ஒரு பதிலடி.தலித்களை
இந்து விரோதிகளாக்கி மதமாற்றம் செய்ய துடிக்கும்
மிஷனரி கும்பலுக்கு இது பிடிக்காதுதான்.கோயில் நிர்வாகம்
உற்சவ மூர்த்திகளை இப்படி மக்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு
எடுத்துச் செல்வதை வரவேற்க மனதில்லாத ‘பகுத்தறிவு’,
‘முற்போக்கு’கள் உடனே எதையாவது சொல்லி அதை
குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது. திருப்பதி
கோயில்களுக்குள் தலித்களை விடுவதில்லை என்று
யார் சொன்னது.லட்சக்கணக்கில் மக்கள் அங்கு வருகிறார்கள்
என்பது தெரியாதா.அங்கு தரிசிக்க வரும்,வசதியற்ற ஏழைகளுக்கு உணவும்,இடமும் இலவசமாக தருகிறார்கள்.கோயிலுக்கு வரும் நிதியை வைத்து சமூகத்திற்கு, மத பாகுபாடின்றி எவ்வளவோ செய்கிறார்கள். அதி மேதாவிகள் செய்திகளை அரைகுரையுமாக படித்துவிட்டு,ஒரு கருத்து சொல்லுவதை எப்போது நிறுத்துவார்கள்
. -
periyar critic
‘பாரதி, கீழ்சாதி எனக்கூறப்படும் மக்களுக்கு ஏன் பூணூல் அணிவித்தார். தன்னுடைய பூணூலையும் தன் கொள்கை ஒத்த பார்ப்பனர்களின் பூணூலை அறுத்து அல்லவா எறிந்துருக்க வேண்டும்.’
ஐயா, பாரதியின் எழுத்துக்களையும்,வாழ்க்கை வரலாற்றையும் படித்து விட்டு இதைக் கேளுங்கள்.
மனிதரில் உயர்வு-தாழ்வு பார்க்கலாகாது என்பது
பாரதியின் கொள்கை.பூனூல் போடுவது என்பது
உனக்கும் எனக்கும் வேறுபாடு இல்லை, இந்து
மதத்தின் உயர்ந்த ஞானமும்,தத்துவமும்,
உனக்கும் உண்டு, எனக்கும் உண்டு, நீயும்
நானும் சமம் என்பதை உணர்த்த. -
santhoshguru
நான் பாரதியின் அனைத்து எழுத்துக்களையும் படித்தவன் அல்ல. அதைப் படித்துவிட்டு தான் கேள்வி கேட்க வேண்டும் என்று ஒரு சட்டமும் இல்லை.
// நீயும் நானும் சமம் என்பதை உணர்த்த //
அப்படி உணர்த்த அந்த ஒரு முழம் கயிறு தான் தேவையா என்பது தான் என் கேள்வி.
நீயும் நானும் சமம் என்பதை ஒரு கயிறு உணர்த்தும் என்றால், அதில் உள்ள நுண்ணரசியலுக்கு (என்னை போல உங்களை ஆக்குவது எனும்போதே…. ‘நான் உயர்ந்தவன்’ என்ற மனப்பான்மை வந்துவிடுகிறதே) உங்கள் பதில் என்ன.
-
ரவிசங்கர்
periyar critic, திருப்பதி போன்ற பெரிய கோயில்களுக்குள் எல்லா சமய, சாதியினரும் நுழைய இயலும் என்பதற்கு நடைமுறை காரணமே முக்கியம். எல்லாரிடமும் சாதிச் சான்றிதழ் வாங்கிப் பார்த்து அனுமதிக்க இயலாதே
thatstamil செய்தியில் இருந்து –
//திருமலையைச் சுற்றிலும் உள்ள பல கோவில்களிலும் தலித் மக்கள் நுழைய தடை உள்ளது. இதனால் தலித் மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட முடியாத அவலம்.
//என்றோ ஒரு நாள் தொலைவில் உள்ள சாமி சிலையைக் கொண்டு வந்து காட்டுவதற்குப் பதில், ஒவ்வொரு நாளும் தங்கள் ஊரின் அருகாமையில் உள்ள கோயில்களில் தலித்கள் வழிபட வழி செய்வது அல்லவா சரியாக இருக்கும்?
//இது கோயிலுக்கு நீங்கள் போகாவிட்டாலும் சாமி உங்களைத் தேடி வருகிறார் என்பதற்காக.//
போகாவிட்டாலும் இல்லை. போக விடமாட்டேன் என்கிறார்கள் என்பது தான் பிரச்சினை.
//இந்துமத
விரோதிகளுக்கு இது ஒரு பதிலடி.//கோயில்களுக்குள் தலித்துகள் நுழைய விடாமல் தடுப்பது இந்துக்கள் தான். பிற சமயத்தினர் அல்ல.
//இந்து
மதத்தின் உயர்ந்த ஞானமும்,தத்துவமும்,
உனக்கும் உண்டு, எனக்கும் உண்டு,//இதைப் பூணூல் போடாமல் கிடைக்கச் செய்யலாகாதா?
//நீயும்
நானும் சமம் என்பதை உணர்த்த.//பாரதி தன்னுடைய பூணூலைக் கழட்டி இருந்தாலும் இதே சமத்துவத்தை உணர்த்தி இருக்கலாமே? எல்லா பிராமணர் அல்லா சாதியனருக்கும் பூணூல் அணிவதை விட தன்னுடைய பூணூலைக் கழட்டுவது இலகு அல்லவா?
coat, suit போட்டவர்களைத் தான் ஒரு விடுதிக்குள் விடுகிறார்கள். வேட்டி கட்டியவர்களை விடுவதில்லை என்றால் என்ன செய்யலாம்? வேட்டி கட்டியவர்கள் எல்லாருக்கும் coat, suit வாங்கித் தந்து அவர்களை “உயர்த்த” வேண்டு்மா? இல்லை, அந்த விடுதியில் உறுப்பினர் ஒருவர் சமத்துவத்தை வலியுறுத்த தானும் வேட்டி கட்டி வர வேண்டுமா? வேட்டி கட்டுபவர்கள் அனைவரும் காசில்லாதவர்கள் இல்லை. பண்பாடு, காற்றோட்ட வசதி கருதி விரும்பியும் கட்டியிருக்கலாம்.
சிகப்பு அழகு, கறுப்பு அசிங்கம் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. கறுப்பர்ளை சம நிலைக்கு கொண்டு வர சிவாசி படத்தில் உள்ளது போல் எல்லாருக்கும் வெள்ளை அடிக்க வேண்டுமா? இல்லை, கறுப்பர்களுடன் வேறுபாடின்றி ஒட்டி உறவாட வேண்டுமா?
என்னைப் போல் உன்னையும் ஆக்குகிறேன் என்பதே முதலில் நான் உயர்ந்தவன் என்ற மனநிலையின் வெளிப்பாடே.
-
-
சந்தோஷ் குரு
டிவிட்டரில் தமிழில் எழுதுவது கொஞ்சம் நெரிக்கிறது. என் திட்டம்: ஆங்கில குறுஞ்செய்திகளுக்கு ட்விட்டர், மிகச்சிறிய தமிழ் கு.செ க்கும் ட்விட்டர், சற்றே பெரிய ஆனால் தனி வலைப்பதிவிட முடியாத செய்திகளுக்கு உளறல்.
-
ரவி
தொடுப்புகள், அறிவிப்புகள், அன்றாடத் தகவல்கள், status updates, தொகுத்து வைக்கத் தேவையில்லாதவை – டுவிட்டரில். புலம்பல், உளறல், தத்துவம், சொந்தக் கதை, சோகக் கதை, நாட்குறிப்புகள், தமிழ்க் குறும்பதிவுகள் – உளறலில்
-
mayooresan
எனக்கு கட்டுப்பாடில்லை.. மனதில் பட்டால் டபக் என்று போட்டுவிடுவேன்.
-
-
ரவி
உளறல் என்ற பெயர் நல்லா இருக்கா இல்ல மாத்தணுமா? வலப்பக்கம் உள்ள கருத்துக்கணிப்பில் சொல்லுங்களேன். சிறப்பாக எழுதுகிறவர்கள் என்று நினைப்பவர்களுக்கு “உளறல்” என்ற பெயர் உறுத்தலாக இருக்குமா?? tweet என்பது பெயரும் வினையுமாகப் பயன்படு்வது போல உளறல் என்பது உளறல், உளறு என்று பெயரும் வினையுமாகப் பயன்படுகிறது. பெயர் சுருக்கமாகவும் இருக்கும். கிறுக்கல்னு சொல்லிட்டு கவிதையும், ஓவியமும் வரைவது போல தளத்தை seriousஆ எடுக்க வேண்டாம்னு தெரிஞ்சே வைச்ச பெயர் தான் உளறல். ஒருத்தருக்குத் தத்துவமா, கவிதையா தெரிவது இன்னொருவருக்கு உளறலா இருக்கலாம் இல்லியா
செல்வா, உளறல் என்ற பெயருக்குத் தந்த விளக்கம் - http://111.118.215.7/~ularal/about-2/#comment-215 -
premkumarpec
ஒரு வழியா உளற வழி கண்டுப்பிடிச்சாச்சு. ஏற்கனவே அலுவலகத்தில் எல்லா தளங்களுக்கும் தடை. குறுக்கு வழி கண்டுபிடிச்சு அரட்டை அடிச்சாலும் டேமேஜர் திட்டுறாரு.
உளற வழி வகுத்த ரவி வாழ்க
-
ரவி
மகிழ்ச்சி, பிரேம்.
-
mayooresan
-
பிரேம்குமார்
இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் தல
-
-
புருனோ
ஹையா, நானும் உளற ஆரம்பிச்சுட்டேன். ட்விட்டர் போல் அல்லாமல், சற்றே பெரிய உளறல்களை (முக்கியமாக பிற பதிவர்களின் இடுகைகளில் எழுதும் மறுமொழிகளில் சிலவற்றை) இங்கு பதியலாம் என்று எண்ணியுள்ளேன்.
ரவி 2:17 pm on September 29, 2009 Permalink |
Vicky 4:36 pm on September 29, 2009 Permalink |
Good one
Vicky 8:27 pm on January 11, 2010 Permalink |
தீர்க்கதரிசி சார் நீங்க