மைக்கேல் போலன் எழுதிய Food Rules என்ற புத்தகம் படித்தேன். பல nutritionistகளிடம் பேசி, ஆராய்ந்து, மிக எளிமையாக உணவு உண்ணும் சில விதிகளை கொடுத்துள்ளார். அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த சில விதிகள் “If it is from a plant eat it, if it is made in a plant throw it”, “The whiter the bread, sooner you will be dead”. ஜங்க் உணவு பற்றி அப்பா அம்மா எவ்வளவு தடவை சொல்லியும் அறிவிக்கு எட்டாதது, அமெரிக்காவில் உள்ள ஒரு பத்திரிக்கையாளர் சொல்லிதான் உரைக்குது. ஒருவேளை எனக்கு தான் வயசு ஆயிடுச்சோ.
Tagged: உணவு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
சந்தோஷ் குரு
-
புருனோ
//சென்னையில் பொதுவாக பதினொன்று, பதினொன்றைக்கு மேல் உணவு கிடைப்பது சிரமம்//
தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, என்று இது வரை நான் பணிபுரிந்த இடங்களிலெல்லாம் விடிகாலை 3 மணி வரை தோசையும், பரோட்டாவும் கண்டிப்பாக கிடைக்கும்
ஆனால் சென்னையில் மருத்துவமனையில் இரவு அவரச அறுவை சிகிச்சைகள செய்ய வேண்டியிருந்தால், அதை முடித்து விட்டு பத்தரை மணிக்கு மேல் (மெஸ்ஸும் மூடி விடுவதால்) உணவிற்கு அலைய வேண்டி உள்ளது
தற்போது எனக்கு உள்ள ஒரே ஆறுதல் – சென்னை செண்ட்ரல் தொடர்வண்டி நிலைய கடைகள் தான் !!
-
ரவி
2004ல் நான் இருந்த போது 11.30 வரை சில பெரிய கடைகளாவது திறந்து இருக்கும். தலைநகரப் பாதுகாப்புக்காக இந்நடவடிக்கைகள் அவசியம் தானோ?
-
bsubra
பாஸ்டனில் பின்னிரவு ஒன்றுக்கு மேல் உணவகங்களில் குடிக்க முடியாது. மற்றபடிக்கு சாப்பாடு கிடைக்கும். கொஞ்சம் தேட வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகளும் உண்டு.
மைரோவேவ் இருக்க பயமேன்!
-
பிரேம்குமார்
பெங்களூரில் 9 மணிக்கே சாப்பாடு கிடைக்காமல் அல்லாடிய காலங்கள் உண்டு

சென்னை அந்த மட்டில் தேவலை என்று தான் தோன்றுகிறதுஎன் சொந்த ஊரான புதுச்சேரி பேருந்து நிலையத்தின் அருகே நடுநிசி தாண்டியும் பரோட்டா கடைகள் இருப்பதுண்டு
-
ரவி 7:40 pm on October 17, 2010 Permalink |
அவர் குறிப்பிடும் அனைத்து விதிகளையும் தர முடியுமா?