Tagged: அரசியல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 2:32 pm on June 30, 2011 Permalink | Reply
    Tags: அரசியல், ஒலி, , ,   

    வெள்ளை, கறுப்பு இரண்டும் நிறங்கள் தானே, வேற்றுமை என்ன என்று கேட்பவர்களுக்கு நிற வெறி அரசியல் புரியாது.

    அதே போல் தமிழ், கிரந்தம் / ஆங்கிலம் இரண்டும் ஒலிகள் தானே என்று கேட்பவர்களுக்கு ஒலிகளுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து, அதனைப் பேசும் பாமர, உள்நாட்டு மக்களை அந்நியப்படுத்தும், பரிகசிக்கும் ஒலி அரசியல் புரியாது.

    தமிழை வேண்டும் என்றே எப்படி வேண்டுமானாலும் சிதைத்து கிரந்த / ஆங்கில ஒலியுடன் பேசுவது நாகரிகம் / ஒயில் / புதுப்பாணி. ஆனால், பிற மொழி ஒலிகளைத் தமிழ் இயல்புக்கு ஏற்ப உள்வாங்கிப் பேசுவது பாமரத்தனம் என்ற ஒப்புமையை நோக்கினால் ஒலி – > மொழி -> அதனைப் பேசும் இனத்துக்கு எதிரான அரசியல் புரியும்.

    காந்தி சட்டை வாங்கக் காசு இல்லாமல் கதராடை அணியவில்லை. அங்கு கதராடை உடுப்பு என்பது ஓர் அரசியல் அடையாளம். கிரந்தம் உச்சரிக்க, எழுத இயன்றும் மறுப்பது என்பதும் இதனைப் பற்றி புரியாத, பேச இயலாத, பேசுத் தேவையில்லாத மக்களின் சார்பாக முன்வைக்கப்படும் ஓர் அரசியல், சமூகவியல் அடையாளமே. பிற மொழி கற்றவரும் தமிழில் உள்ள ஒலிகளை மதிப்பு கொடுத்துப் பேசும் போது தான், தமிழின் சீர்மையும் தமிழரின் மதிப்பும் மீட்டெடுக்கப்படும்.

     
    • கிராமத்தான்-சரவணன் 3:47 pm on June 30, 2011 Permalink | Reply

      மீட்டெடுக்கப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என நம்புவோம்!

    • புருனோ 12:12 pm on July 15, 2011 Permalink | Reply

      இணையமும் ஒருங்குறியும் தமிழுக்கு பாய்ச்சியுள்ள புத்துயுர் அபரிதமானது

  • ரவி 8:09 am on April 10, 2011 Permalink | Reply
    Tags: அரசியல், , , , தமிழக மீனவர்கள், ,   

    ஈழம், தமிழக மீனவர்கள் பிரச்சினைகளை முன்னிட்டுக் காங்கிரசை மட்டும் தோற்கடிக்க முனையும் இயக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. உள்ளூர் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாத தேசிய கட்சிகள் வரும், போகும். அதனால், பதவிகளுக்காக காங்கிரசு போன்ற கட்சிகளுக்கு ஆதரவு தரும் அனைத்துத் தமிழகக் கட்சிகளுமே முதன்மைக் குற்றவாளிகள். தமிழகக் கட்சிகளைப் பகைத்துக் கொள்ள விரும்பாதவர்களே காங்கிரசைத் தோற்கடிப்போம் என்று கிளம்பி இருப்பதாகவே நினைக்கிறேன். ஒன்று, தேர்தலை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அல்லது, இப்பிரச்சினைகளை விடுத்து மற்ற பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்து வாக்களிக்க வேண்டி இருக்கும்.

     
  • ரவி 12:10 pm on November 22, 2009 Permalink | Reply
    Tags: அரசியல்,   

    “ஒரு விதியும் இல்லை” என்பதே அரசியலில் உள்ள ஒரே விதி.

     
  • கார்த்திக் 11:06 am on October 15, 2009 Permalink | Reply
    Tags: அரசியல், ,   

    http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-rajapakse-just-joked-says-thirumavalavan.html

    News:

    என்னை அறிமுகம் செய்த போது பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்றார் திருமாவளவன்

    Comment:

    உன்ன நாங்களும் நகைச்சுவையாக தான் நினைக்கிறோம்

     
  • ரவி 1:04 am on May 3, 2009 Permalink | Reply
    Tags: , அரசியல், , , முதலாளி ஆட்சி   

    எந்த முதலாளி வேண்டும் என அடிமைகளைக் கேட்பது போல் இருக்கிறது இந்திய மக்களாட்சித் தேர்தல்.

     
    • மணிகண்டன் 1:06 pm on May 3, 2009 Permalink | Reply

      ரவி, வாழ்க்கையிலே படிப்பு, வேலை எல்லாத்துலையும் compromise பண்ணி கொள்ளும் நாம், அரசியல்ல மட்டும் மிகவும் idealistic.

      • ரவி 9:48 pm on May 3, 2009 Permalink | Reply

        உண்மையில் அரசியலில் தான் அதிகம் சமரசம் செய்து கொள்கிறோம். ஈழப் பிரச்சினையை மட்டும் அடிப்படையாக கொண்டால், நான் எந்த பெரிய கட்சிக்குமே வாக்களிக்க முடியாது. ஆனால், வாக்களிக்கத் தான் வேண்டும். தவிர, தனி வாழ்க்கை முடிவுகள் நம்மை மட்டுமே பாதிக்கும். ஆனால், அரசியல் முடிவுகள் நம்மையும் எல்லாரையும் பாதிப்பதால் அதில் கூடுதலாக எதிர்ப்பார்ப்பது தவறில்லையே?

  • Mubaarak 6:30 am on April 26, 2009 Permalink | Reply
    Tags: அரசியல், ,   

    ஜெயலலிதாவின் தமிழீழம் பற்றிய பேச்சைக்கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு. நம்பலாமா? ஜெ’ நினைத்தால் நிச்சயம் செய்வார். உண்மையிலேயே அப்படி நினைத்துத்தான் சொன்னாரா?

     
    • யாத்ரீகன் 6:53 am on April 26, 2009 Permalink | Reply

      காங்கிரஸ்,திமுக-விற்கு எதிரான வாக்கு பதிவு செய்யும் நேரம்.. அதே நேரத்தில் மக்களுக்கு பிடித்த மாதிரி கூவிவிட்டாலே தேர்தலில் ஜெயித்துவிடலாமென தப்பான அபிப்பிராயம் உருவாகிவிடக்கூடாது.. ஓட்டு போடப்போகும் சாமானிய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் !!! :-(

    • ரவி 11:28 am on April 26, 2009 Permalink | Reply

      செயலலிதாவின் பேச்சு, நிலைப்பாடு எல்லாம் தேர்தல் தந்திரம் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. உண்மையான தமிழுணர்வாளர்களுக்கு இப்படி திடீரென்று தான் ஞானோதயம் வருமா?

      சில மாதங்கள் முன்பு தான் “போர் என்று வந்தால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்” என்றிருந்தார். தேர்தலில் வென்ற பின் “தமிழீழம் வேண்டும். ஆனால், புலிகள் தீவிரவாதிகள். அவர்கள் இல்லாமல் மலரட்டும்” என்பார். நடக்குமா?

      ஒரே ஒரு ஆறுதல். தேர்தலில் வென்றாலும் காங்கிரசோடு நெருங்குவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். சோனியாவை எதிர்ப்பதில் மட்டும் இது வரை நிலை மாறாமல் இருக்கிறார்.

      இரட்டை இலைக்கு வாக்களிக்கலாமா என்று சிந்திப்பேன் என்று கூட கனவிலும் நினைத்தது இல்லை. எங்கள் தொகுதியில் ப.சிதம்பரம் நிற்கிறார் !!!

    • ஸ்ரீ 11:42 am on April 26, 2009 Permalink | Reply

      ஜெயாவின் பல காமெடிகளில் இதுவும் ஒன்று… என்னவோ ஈழம் அமைவது இந்திய அரசியல்வாதிகளின் கையில் இருப்பது போல ஒரு உளரல். இந்த தேர்தல் அச்சுறுத்தலே திமுக காங்கிரசை அசைக்க முடியவில்லை, தேர்தல் முடிந்தபின் ஈழம் மறக்கப்படும். ஜெயலலிதா தேசியவாதியாவார், கலைஞர் மீண்டும் தமிழன தலைவர் ஆவார். ஜெய்ஹிந்த்

    • சுந்தர் 7:50 pm on April 26, 2009 Permalink | Reply

      இனி இந்தியாவிலுள்ள அரசுகளால் எதையும் செய்து விட முடியாது. செயலலிதா தேர்தல் வெற்றிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறார். ஒருவேளை, இந்திய தேர்தலுக்காகத் தான் இலங்கை தனது இறுதிக் கட்ட தாக்குதலை “மெள்ள” நடத்துகிறதோ? மே 14-ல் கொலைவெறித் தாக்குதல் நடக்க வாய்ப்புண்டு.

  • புருனோ 4:26 am on April 23, 2009 Permalink | Reply
    Tags: அரசியல், ,   

    மாபா பாண்டியராஜனை விட சரத் பாபு எந்த விதத்தில் உயர்ந்தவர் ??

     
    • ரவி 1:06 pm on April 23, 2009 Permalink | Reply

      உயர்ந்தவரோ இல்லையோ கவர்ச்சிகரமானவர் என்பதாலே இவ்வளவு வெளிச்சம். குடிசை வீடு, இட்டிலிக் கடை, படித்து விட்டுத் தொழில், இளைஞர், நேரடியாக அரசியலில் குதிக்கிறார் என்று விக்ரமன் படப் பாட்டு போல இருப்பதால்…

      • புருனோ 8:04 pm on April 23, 2009 Permalink | Reply

        இப்பொழுது அவர் குடிசை வீட்டில் இருக்கிறாரா. ஏதோ மாதம் பல லட்சம் சம்பாதிப்பதகாக கூறுகிறார்கள்

        சரத் பாபுவை போல் பாண்டியராஜனும் 1992ல் 60,000 ருபாய் முதலீட்டில் தனது நிறுவனத்தை ஆரம்பித்தவர்தான்.

        • ரவி 10:44 pm on April 23, 2009 Permalink | Reply

          பழசை மறக்காமல் இப்போதும் பழைய வீட்டில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். எவ்வளவு இலட்சம் ஈட்டுறார்னு தெரியல. நான் சொல்வது என்னவென்றால் ஊடகங்களுக்கு கவர்ச்சியான ஆள் தேவை. அந்த வகையில் பாண்டியராசனை விட சரத்பாபு ஒரு media darling. அவ்வளவு தான்.

          • புருனோ 3:32 am on April 24, 2009 Permalink | Reply

            அவர் ஊடகஅன்பிற்குரியவர் என்பதால் தான் இவ்வளவு கூத்தும் என்பது தான் என் கருத்து

            (அல்லது ஊடகஇனியவர்) – டார்லிங் என்ற சொல்லிற்கு பொருத்தமான தமிழ் பதம் எது)
            http://ta.wiktionary.org/wiki/darling

            • ரவி 11:30 am on April 25, 2009 Permalink

              சரியாப் போச்சு.. அவர் விசயகாந்த் கட்சியில் இருக்கிறார்னு தெரியும். ஆனால், விருதுநகர்ல போட்டி இடுறார்னு நீங்க இன்னொரு வலைப்பதிவில் குறிப்பிட்டுத் தான் தெரியும். விசயகாந்த்தும் தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் இது போன்ற ஆட்கள் களத்தில் இருப்பதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

  • ரவி 9:10 pm on February 14, 2009 Permalink | Reply
    Tags: அரசியல், , , பதவி   

    இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டி வணிகர்கள் ஒரு நாள் வேண்டுமானால் அடையாள கடை அடைப்பு நடத்தலாம். தொழிலையே விட்டு விட்டுப் போராட முடியாது. அதே போல், அரசியல்வாதிகளும் பதவியை விட்டு விட்டுப் போராட முடியாது.

     
  • ரவி 10:17 am on January 18, 2009 Permalink | Reply
    Tags: அரசியல், ,   

    நண்பர்கள் சிலர் என் அரசியல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக அருவருக்கத்தக்க நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கையில் நட்பு பெரிதா கொள்கை பெரிதா என்று எண்ண வைக்கிறது.

     
    • புருனோ 10:48 pm on January 18, 2009 Permalink | Reply

      அனைத்து கொள்கைகளிலும் உங்களை போல் மற்றொருவர் கிடைக்க மாட்டார் :) :)

      பெரும்பாலான கொள்கைகளில் ஒரே போல் சிந்திப்பவர்கள் கிடைக்கலாம்

  • ரவி 3:58 am on January 7, 2009 Permalink | Reply
    Tags: அரசியல், , , , பசி   

    கோடிகள் திருடுபவனைக் கும்பிட்டுவிட்டு பசிக்குத் திருடுபவனை அடிப்பது என்ன நியாயம்?

     
    • புருனோ 11:56 am on January 7, 2009 Permalink | Reply

      ராமலிங்க ராஜா பாவம்

      அவரை ஆளாக்கு மாத்தி மாத்தி சாத்துறீங்களே

    • ரவி 2:20 am on January 8, 2009 Permalink | Reply

      இல்ல அவரை நினைச்சு எழுதல. அப்பப்ப திருடர்களை மின்கம்பத்தில் கட்டி வச்சு அடித்த செய்திகளைப் பார்க்கையில் இந்த நினைப்பு வரும். சாமுராய் படத்தில விக்ரம் காவலர்களிடம் அடி வாங்கும் போது “என்னிக்காச்சும் ஊழல் செஞ்ச அரசியல்வாதிகளை இப்படி அடிச்சிருக்கீங்களா”ன்னு கேப்பாரே..

    • Mubaarak 3:23 pm on February 27, 2009 Permalink | Reply

      ரவி, உங்க உளறல்களுக்கு ரொம்பவே விசிறியாயிட்டேன். ரொம்பவே நல்லா எழுதறீங்க. இன்னொரு உளறல படிச்சிட்டு நீண்டே நேரமா யோசிச்சிட்டே இருந்தேன். இனி உங்கள விடமாட்டேன். :-)

      சினேகபூர்வம்,
      முபாரக்

    • ரவி 3:24 am on February 28, 2009 Permalink | Reply

      பாராட்டுக்கு நன்றி முபாரக்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel