Tagged: அனுபவம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 6:24 pm on August 24, 2011 Permalink | Reply
    Tags: அனுபவம்,   

    1. வாங்கிய கையோடு படிக்கப்படாத நூல், படிக்கப்படுவதன் சாத்தியம் குறைவு.

    2. மொத்தமாக பல புத்தகங்கள் வாங்கினால், என்ன வாங்கினோம் என்பதே கொஞ்ச நாள் கழித்து மறந்து போகும். வீடு மாற்றும் போது தான் இப்புத்தகங்கள் இருப்பது தெரியும்.

    3. புத்தகம் இரவல் கொடுத்தால், ஒன்று நண்பனை மறக்க வேண்டும் அல்லது புத்தக்கத்தை மறக்க வேண்டும்.

    ….

     
    • புருனோ 2:22 pm on August 25, 2011 Permalink | Reply

      புத்தகம் இரவல் கொடுப்பது என்பது நூலகங்களில் மட்டுமே நடைபெறுவது

      நண்பர்களுக்குள் இரவல் என்பதே கிடையாது

      புத்தக தானம் தான்

    • mayooresan 1:05 pm on October 5, 2011 Permalink | Reply

      ரவி, கின்டில் வாங்கும் உத்தேசம் உள்ளதா? எனது அன்ரொயிட்டில் கின்டில் செயலி பயன்படுத்துகின்றேன். மிகவும் பிடித்துள்ளதால் கின்டில் வாங்கலாம் என்று ஒரு யோனை :)

      • ரவி 11:55 am on October 7, 2011 Permalink | Reply

        வாங்க ஆசை தான். ஆனால், புத்தகம் வாங்குவது எளிதாகி விடும் என்பதால் கணக்கு வழக்கு இல்லாமல் வாங்கித் தள்ளி விடுவேனோ என்று ஒரு அச்சம் :) தனியாக கிண்டில் வாங்குவதை விட இன்னும் பல விசயங்கள் செய்வது போல் ஒரு tabletஏ வாங்கி விடலாமோ என்று தோன்றுகிறது..

  • ரவி 7:58 pm on October 17, 2010 Permalink | Reply
    Tags: அனுபவம், இணையச் சண்டைகள், , சண்டைகள்   

    2006 முதல் இணையத்தில் பல இடங்களிலும் சண்டை போட்டுக் கற்றது:

    1. நிரந்ததர எதிரி இல்லை. சிலரோடு வேறு களங்களில் பல கடுமையான சண்டைகள் போட்ட பிறகு, அதே நண்பர்களோடு இன்னும் பெரிய பொது நன்மைக்காக சேர்ந்து பணியாற்ற வேண்டி வந்தது. எனவே, சொற்களை அலந்து கொட்டுவதும், தனிப்பட்ட பகையாக வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும் நல்லது.

    2. இணையத்தில் பேசும் விசயத்தை தொலைப்பேசியிலோ, தனி மடலிலோ பேசிக் கொண்டால் காட்டம் குறையும். சண்டையும் சீக்கிரம் முடிவுக்கு வரும். நான்கு பேர் கவனிக்கிறார்கள் என்பதே உசுப்பேத்தி விடும். உசுப்பேத்துவதற்கு என்றே நிறைய பேரும் இருக்கிறார்கள்.

    3. கருத்தைத் தாண்டி தனி நபர் தாக்குதலில் இறங்குபவர்களை மொத்தமாக புறக்கணிப்பது நல்லது.

    4. மிகவும் உளைச்சலாக இருந்தால், கணினியை விட்டு எங்காவது ஓரிரு நாட்கள் போய் வரலாம். சிறு ஓய்வு கூட நிதானம் தரும்.

    5. உத்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் சிறு விசயம் கூட பெரிதாகத் தெரியும். நான் கடுமையாக சண்டை போட்ட பல விசயங்களை நினைத்துப் பார்த்தால் எனக்கே இப்போது சிரிப்பாக வருகிறது.

     
    • புருனோ 11:57 pm on October 22, 2010 Permalink | Reply

      ரவி

      கருத்தினால் (கருத்து வேறுபாட்டினால்) சண்டை போட்டு ஒருவருடன் மனக்கசப்பு வருவது என்பது ஒரு பக்கம்

      உங்கள் அறிவுரைகள் அதற்கு தான் அதிகம் பொருந்துகிறது

      ஏதோ ஒரு விஷயத்தால் (முக்கியமாக உங்களின் வெற்றி / ஆளுமை / உங்களுக்கு வரும் மறுமொழிகள்) உங்களை பிடிக்காதவர்கள் வம்பிழுத்தால் 2 கருத்து பலன் தராது

      இது என் கருத்து :) :)

      • ரவி 2:34 pm on October 27, 2010 Permalink | Reply

        ஆமாம், தனிப்பட்ட காரணங்களுக்குச் சண்டை போட்ட அனுபவம் இல்லை :) குறிப்பு 3 பார்க்க :)

  • புருனோ 7:43 am on June 16, 2009 Permalink | Reply
    Tags: அனுபவம், அலைபேசி, சோம்பல், தொலைபேசி_பேச்சு, புரட்டு, ,   

    இன்று மதியம் அலுவலக நேரத்தில் செல்லிடப்பேசியில் ஒரு அழைப்பு

    நான் : வணக்கம் சொல்லுங்க

    அழைத்தவர் : சார் இந்த மொபைல்ல தமிழ் எப்படி படிக்கிறதுன்ங் சொல்லுங்க

    நான் : நீங்க ஒரு மெயில் அனுப்புங்க, நான் விரிவா பதிலனுப்புறேன்

    அழைத்தவர் : இல்ல சொல்லுங்க

    நான் : இல்ல சார், இப்ப வேலைல இருக்கேன். இது கொஞ்சம் தெளிவா பேச வேண்டிய விஷ்யம். அதான் மெயில் அனுப்ப சொல்றேன்

    அழைத்தவர் : பரவால்ல சார் இப்பவே சொல்லுங்க

    நான் : நீங்க மெயில் அனுப்புங்க

    அழைத்தவர் : நான் அனுப்பினேன் சார், ஆனா பதில் வரல

    நான் : இன்னைக்கு காலைல வர பாத்தேன் மெயில் வரலயே

    அழைத்தவர் : அதான் சார் நீங்க பதில் அனுப்ப மாட்டீங்க

    நான் : ????

    அழைத்தவர் : அதான் இப்பவே சொல்லுங்கன்னு சொல்றேன்

    நான் : இல்லை நீங்க திரும்ப அனுப்புங்க

    அழைத்தவர் : அப்படியா, அப்ப இப்ப சொல்ல மாட்டீங்களா

    நான் : இல்லை, நீங்க மெயில் அனுப்புங்க

    அழைத்தவர் :எனக்கு மெயில் எல்லாம் அனுப்ப தெரியாது

    நான் : நேத்து அனுப்புனீங்களே

    அழைத்தவர் : அது நான் இல்லை. வேற ஒருத்தர் அனுப்பினார்

    நான் :சரி, அவரையே திரும்ப அனுப்ப சொல்லுங்க

    அழைத்தவர் : உங்க அட்ரஸ் என்ன

    நான் :அது தான் நேத்து அனுப்புனீங்களே

    அழைத்தவர் :? ?

    நான் :அதே அட்ரஸ் தான் சார்

    அழைத்தவர் :அத எங்கேயோ வச்சிட்டேன்

    நான் :பரவாயில்லை sent items சென்று பார்த்தால் இருக்கும். திரும்ப அனுப்புறீங்க

    அழைத்தவர் :என்னவோ சார். தமிழ் எப்படி படிக்கிறதுன்னு கேட்டா இவ்வளவு குறுக்கு விசாரனை பண்ணுறீங்க. வெறுப்பா இருக்கு சார்

    நான் :பரவாயில்லை சார். நீங்க அனுப்புங்க, நான் பதில் அனுப்புறேன்

    அழைத்தவர் :அப்ப நீங்க போன்ல எதுவுமே பதில் சொல்ல மாட்டீங்களா

    நான் :சின்ன சந்தேகமுன்னா சொல்லலாம். நீங்க கேட்டது படத்தோட சொன்னாத்தான் புரியும். மெயில் பாத்துட்டு சந்தேகம் இருந்தா கேளுங்க சொல்றேன்

    அழைத்தவர் : சரி சார், வேற யாராவது போன்லேயே பதில் சொல்வாங்களா. நம்பர் இருந்தா கொடுங்க

    நான் : ???? இப்ப இல்லை. பெறகு தாரேன்

    யாருடைய அலைபேசி எண்ணை தரலாம் என்று சட்டென்று தோன்றவில்லை :) :) :) :)

    ஒரு வேளை அவர் “சார் எனக்கு வாசிச்சா புரியல” என்று கேட்டிருந்தாலோ அல்லது இணைய இணைப்பு இல்லை. மொபைல் மட்டும் தான் இருக்கு என்று கூறியிருந்தாலோ கண்டிப்பாக அவருக்கு நேரம் செலவழித்து விளக்கியிருப்பேன்

    சுகாதாரம் , உடல் நலம் குறித்து சந்தேகம் கேட்கும் பலர் “நான் ஒழுங்கா மெயில் செக் பண்ண மாட்டேன்” என்று கூறியுள்ளார்கள் அவர்கள் யாரென்று தெரியாவிட்டால் கூட அவர்களுக்கு நீண்ட நேரம் தொலைபேசியில் விளக்கியுள்ளேன்

    ஆனால் இது போன்ற நேர்மை குறைவான நபர்களை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது

     
    • ரவி 1:33 pm on June 16, 2009 Permalink | Reply

      என்ன கொடுமை இது, புருனோ :)

    • புருனோ 6:46 pm on June 16, 2009 Permalink | Reply

      அவர் அடுத்த முறை அழைத்தால் உங்கள் அலைபேசி எண்ணை தரலாமா :) :) :)

      • manikandan 9:31 am on June 17, 2009 Permalink | Reply

        என்னோட நம்பர் கொடுங்க சார்.

      • ரவி 12:56 pm on June 18, 2009 Permalink | Reply

        வேணாம், அழுதிடுவேன் :) எனக்கும் கணினியில் தமிழ் எழுதுவது, விக்கிப்பீடியா குறித்து சில வேளை அழைப்பு வருது. பேசுறவங்க பண்போட பேசுற வரைக்கும் உதவுவதில் மகிழ்ச்சியே.

    • யாத்ரீகன் 6:27 pm on June 17, 2009 Permalink | Reply

      இருந்தாலும் டாக்டர் உங்களுக்கு பொறுமை ரொம்ப அதிகம் :-) .. ஒரு விதத்துல எங்களுக்கு நல்லதுதான் ;-)

    • கார்த்திக் 11:00 pm on June 17, 2009 Permalink | Reply

      முதல்ல அவர் நம்பர இங்க பதியுங்க. எல்லாரும் அவரை அழைத்து இது மாதிரி வெறுப்பேத்தலாம் :)

      • ரவி 12:55 pm on June 18, 2009 Permalink | Reply

        இதை நான் ஆமோதிக்கிறேன் ;)

        • கார்த்திக் 11:02 pm on June 18, 2009 Permalink | Reply

          பசங்க படத்துல இப்படி தான் பண்ணிக் கலாய்ப்பாங்க. தொடர்ச்சியா வெவேறு நம்பர்லிருந்து மிச்டு கால் விட்டு கலாய்கிறவங்களும் உண்டு.

          என் நண்பன் ஒருத்தன் இதுக்கு ஒரு நெட்நொர்க்கே வச்சிருக்கான்.

          • ரவி 12:32 am on June 19, 2009 Permalink | Reply

            நம்மளை இந்த networkல் சேர்த்துக்குவாங்களா. பல பேரை கலாய்க்க வேண்டி இருக்கு :) மறுமொழி போட்டு கலாய்ப்பதற்கு பல வலைப்பதிவர்களிடம் இந்த மாதிரி network இருக்கு :)

            • புருனோ 5:22 am on June 19, 2009 Permalink

              // மறுமொழி போட்டு கலாய்ப்பதற்கு பல வலைப்பதிவர்களிடம் இந்த மாதிரி network இருக்கு //

              இதுக்கு பேர் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது :)

            • கார்த்திக் 8:47 am on June 25, 2009 Permalink

              ரவி, இந்த மக்கள் தொண்டை பண்றது நம்ம கிலின் கிலிட்டசு (ஞாபகம் இருக்கா?) மற்றும் அவன் பள்ளி நண்பர்கள்.

    • ரவி 8:21 pm on June 25, 2009 Permalink | Reply

      ஓ.. இது கிலிட்டசு வேலையா? அவனை நல்லாவே நினைவிருக்கு..

  • யாத்ரீகன் 8:14 pm on April 23, 2009 Permalink | Reply
    Tags: அனுபவம்   

    The Ramen Girl பார்த்துவிட்டு அந்த ஆர்வத்துடன் சமைத்து முடித்தால் அருமையான உருளைக்கிழங்கு பொறியல் தயார் :-D

     
  • புருனோ 11:58 am on August 6, 2008 Permalink | Reply
    Tags: , Cooking, , , , Shirt, Tailor, அனுபவம், , , சட்டை, சமையல், , தையல்,   

    சட்டை இறுக்கமாக உள்ளது என்று கூற தையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ, குழம்பில் உப்பு அதிகமாக உள்ளது என்று கூற சமையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ அவசியம் கிடையாது

     
  • புருனோ 6:10 am on August 5, 2008 Permalink | Reply
    Tags: , , , IIT, IITJEE, , , , அனுபவம், , , , ,   

    தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. (மேலும் விபரங்களுக்கு http://nanopolitan.blogspot.com/2008/08/at-glance-2008-jee-results.html )

     
    • ரவி 7:49 am on August 5, 2008 Permalink | Reply

      இந்தத் தத்துவத்தை நிறைய பேர் முன்னாடியே சொல்லிட்டாங்க. இதை bruno quote என்ற போட்ட பதிப்புரிமை மீறலை வன்மையாக கண்டிக்கிறேன் ;)

    • ரவி 10:13 am on August 6, 2008 Permalink | Reply

      தமிழ் வலைப்பதிவு அறிவுசீவிகள் யாரும் இதைக் கண்டு கொள்ளவில்லையே ஏன்? இது மாதிரி முன்பு உங்களுக்கு ஒரு கேள்வி வந்தது. அதன் நியாயத்தை இப்போது உணர்கிறேன்!

    • புருனோ 11:56 am on August 6, 2008 Permalink | Reply

      //இது மாதிரி முன்பு உங்களுக்கு ஒரு கேள்வி வந்தது//

      இது தானே
      http://payanangal.blogspot.com/2008/04/blog-post_06.html

      மாணவர்கள் மீது அதிக கட்டண சுமையை திணிக்க விரும்பாமல் இப்பள்ளி மூடப்படுகிறது. தனியார் பள்ளிகள் கொள்ளை அடிக்கின்றன / மெட்ரிக் பள்ளிகள் அக்கிரமம் என்றெல்லாம் அழும் / எழுதும் பத்திரிகைகளும், ஊடகங்களும், ஒரு சில பதிவர்களும், இது போன்ற நிகழ்வுகள் குறித்து ஏன் வாய் திறக்க வில்லை ??

    • ரவி 12:11 pm on August 6, 2008 Permalink | Reply

      ஆமா

  • புருனோ 5:12 am on August 5, 2008 Permalink | Reply
    Tags: , , , , அனுபவம், , ,   

    “தீ சுடும் என்பதை தீக்குள் விரலை விட்டுதான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. அடுத்தவன் சூடு பட்டதை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்”

     
  • புருனோ 11:43 am on July 31, 2008 Permalink | Reply
    Tags: , , , , அனுபவம், , ,   

    எந்த ஒரு கல்லை உடைக்க வேண்டுமென்றாலும் பல அடிகள் தேவை. அந்த கல் நூறாவது (அல்லது ஆயிரமாவது) அடியில் தான் உடையும். ஆனால் முதல் அடி இல்லையென்றால் ஆயிரமாவது அடி வீண் தான்

     
    • bsubra 5:54 pm on July 31, 2008 Permalink | Reply

      முதல் அடி அடித்தது தொண்டர். ஆயிரமாவது வரைக்கும் அடிக்க முடிந்தவர் தலைவர்?

    • bruno 7:34 pm on July 31, 2008 Permalink | Reply

      இல்லை பாபா.

      நான் தலைவர் – தொண்டர் என்ற வகையில் மட்டும் இதை கூற வில்லை.

      இன்று தொலைகாட்சி வந்துள்ளது என்றால் முதல் அடி மார்கோனி தானே

      நூறாவது அடி வைத்து மின்மடல் கண்டுபிடித்ததற்கு முதல் அடி கிரகாம் பெல் தானே
      -
      நான் கூறியது அந்த அர்த்தத்தில் தான்
      -
      உங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் முதலில் உங்கள் மேசையை சுத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டுமல்லவா

    • bsubra 8:46 pm on July 31, 2008 Permalink | Reply

      Gotcha

    • ரவி 2:13 am on August 1, 2008 Permalink | Reply

      ஆயிரமாவது அடி வீண் என்று சொல்வதை விட முதல் அடி இல்லாமல் ஆயிரமாவது அடி இல்லை என்று சொல்லலாமோ?

    • bruno 2:27 am on August 1, 2008 Permalink | Reply

      //ஆயிரமாவது அடி வீண் என்று சொல்வதை விட முதல் அடி இல்லாமல் ஆயிரமாவது அடி இல்லை என்று சொல்லலாமோ?//

      முதல் அடி இல்லையென்றால் (ஆயிரமாவது அடிதான் முதல் என்றால்) ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூத்தி ஒன்பதாவது அடியில் தான் பலன் கிடைக்கும்

    • ரவி 2:31 am on August 1, 2008 Permalink | Reply

      இப்ப புரியுது :)

    • bruno 2:59 am on August 1, 2008 Permalink | Reply

      நான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த காலங்களில் ஏதாவது மாற்றம் செய்ய துவங்கினால் உடனடியாக “இதை முடிப்பது சிரமம் என்று கூறுவார்கள்” அல்லது “இந்த வருட நிதி ஒதுக்கீட்டில் இதை முழுவதும் நடத்த முடியாது” என்று கூறுவார்கள்.

      ஆனால் நான் அதற்கெல்லாம் அசந்து விட்டு விடுவது இல்லை !!

      உதாரணமாக ஓட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதல் வருடத்தில் என்னால் அறுவை அரங்கு மட்டுமே அமைக்க முடிந்தது. மாதம் ஒருமுறை கோவில்பட்டியிலிருந்து கருவிகளை வண்டியில் கொண்டு வந்து தான் அறுவை சிகிச்சை செய்தோம். அடுத்த வருடம் சில கருவிகள் வாங்கினேன் (அரசு நிதி ஓதுக்கீட்டில் தான்).

      எனக்கு பிறகு பணியேற்றவர் மீதி கருவிகளை அடுத்த வருடம் வாங்கினார்.

      இன்று அங்கு அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.

      -

    • bruno 3:09 am on August 1, 2008 Permalink | Reply

      அதே போல் சுகாதார திட்டத்தில் பணி புரிந்த போது (அரசு மருத்துவமனைகள் கணினிமயமாக்கல் திட்டத்தில் பணிபுரிந்தேன்) நச்சு நிரலிகளின் தொல்லையால் லினக்சு பயன் படுத்தலாம் என்று சொன்ன போது பல துறை பிரிவுகளிலிருந்து எதிர்ப்பு வந்தது.

      ”எங்களுக்கு பழக்கம் இல்லை” என்று கூறினார்கள். (என்னவோ பிறக்கும் பொழுதே இவர்கள் விண்டோசுடன் பிறந்த மாதிரி)

      நான் என் கணினியில் மட்டும் லினக்சு (BOSS Linux from CDAC) நிறுவினேன்.

      அதை (கணினி செயல்படும் வேகத்தை) பார்த்து மேலும் சிலர் மாற துணிந்தார்கள். ஒரு மாதத்தில் நிதி பிரிவு, கட்டிட பிரிவு தவிர அனைவரும் மாற தயார். உடனடியாக எல்காட் உதவியுடன் சுசி லினக்சு இயங்கு தளம் நிறுவப்பட்டது. (எப்படி ரவி வோர்ட்பிரஸின் கொ.ப.செவோ அதே போல் எல்காட்டின் அப்பொழுதைய நிர்வாக இயக்குனர் திரு.உமா சங்கர் இ.ஆ.ப லினக்சின் கொ.ப.செ)

      தற்பொழுது NIC மின் சம்பள கணக்கு மென்பொருளை லினக்சுவில் தருகிறார்கள். நிதி பிரிவும் மாறினார்கள்

      கட்டிட பிரிவை தவிர (ஆட்டோகாட் உபயோகிப்பதால்) அனைத்து கணினிகளும் சுசி லினக்சுவில் இயங்குகின்றன. அது கூட வைன் வைத்து சில பார்த்தோம். ஆட்டோகாடின் பழைய பதிப்புகள் வைனுடன் இயங்குகின்றன. புது பதிப்புகள் இயங்குவதில்லை

      -

      எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இவை இயங்குவதால் அனைவருக்கும் திருப்தி

      அதற்கு முன் இங்குள்ள கணினியிலிருந்து பெண்டிரைவை வீட்டில் உள்ள கணனியில் உபயோகித்தால் வரும் “Warning Message”களினால் அனைவரும் நொந்து போயிருந்தனர். லினக்சு அவர்களுக்கு ஒரு புது அனுபவமாக தெரிந்தது – வேகம், பாதியில் தொங்குவதில்லை (Hanging), பெண்டிரைவை போட்டவுடன் அரை மணிநேரம் scanning என்ற இம்சையில்லை

      அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்காக வாங்கப்படவுள்ள சுமார் 3000
      கணினிகளும் லினக்சு இயங்குதளத்தில் இயங்க சுகாதார சிறப்பு செயலரிடம் அனுமதி பெறுவது எனக்கு எளிதானது.

      (இதன் மூலம் சுமார் 1.5 கோடி மிச்சம். அந்த பணத்தில் மேலும் 750 கணினிகள் வாங்க மற்றும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் இரு இணைப்புகள் (ஒன்று கம்பி, மற்றொன்று கம்பியில்லா) என்று திட்டமிட்டுள்ளோம்.

    • ரவி 3:37 am on August 1, 2008 Permalink | Reply

      புருனோ, சின்ன வயசில புத்தகம் எழுதுறீங்க, அரசு வேலைகள்ல முன்முயற்சி எடுக்கிறீங்க. உங்கள பார்த்தா வியப்பா இருக்கு. உங்களைப் போல், உமாசங்கரைப் போல் இன்னும் நிறைய பேர் தமிழ்நாட்டுக்குத் தேவை.

      **

      நீங்க உபுண்டு பயன்படுத்திப் பார்த்து உங்க கருத்து சொல்லுங்க. 256 MB RAM தேவைப்படும். மத்தபடி, விண்டோசு பயனர்களுக்கு எந்த வித குழப்பத்தையும் தராத இலகுவான லினக்சு. நான் WordPressக்கு மட்டும் கொ.ப.செ – னு நினைச்சிடாதீங்க :)

    • bruno 10:30 am on August 1, 2008 Permalink | Reply

      CDAC BOSS மற்றும் Suse Linux இரண்டுமே அரசு பணியாளர்களுக்கு குழப்பம் தரவில்லை.

      அவர்களுக்கு தேவை

      1. உலாவி
      2. கடிதம் தட்டச்ச ஒரு மென்பொருள்
      3. கணக்கு போட ஒரு மென்பொருள்

      இதற்கு ஓபன் ஆபிசு மற்றும் நெருப்பு நரி போதும் என்பதால் யாருமே கண்டுகொள்வதில்லை.

    • bruno 10:32 am on August 1, 2008 Permalink | Reply

      உபுண்டு பயன்படுத்தி விட்டு கூறுகிறேன்

    • புருனோ 10:27 am on August 30, 2008 Permalink | Reply

      ஒரு செயலை ஆரம்பிக்க நினைத்தில் சிறிய அளவில் தான் துவங்க முடியும் என்ற பட்சத்தில் சிறிய அளவிலாவது துவங்கிவது நலம்.

      பெரிதாக, அகலமாகத்தான் துவங்குவேன் என்று அடம் பிடித்து காத்திருக்க தேவையில்லை

      அதே போல் பல காரியங்களை துவக்க நமக்கு சந்தர்ப்பம் இருக்கும். நம்மால் முடிக்க இயலாது என்று தெரியும்.

      நம்மால் முடிக்க இயலவில்லை / இயலாது என்ற கவலையில் துவங்காமல் இருக்க கூடாது.

      நாம் துவக்கியதை வேறு யாராவது முடிப்பார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்

    • புருனோ 10:28 am on August 30, 2008 Permalink | Reply

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel