கந்தசாமி திரைப்பாடல் ஒன்றில், “இட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதர் இல்லை, கொல்லாதே” என்று ஒரு வரி வருகிறது. இதை ஒரு யூதர் கேட்டால் எப்படி உணர்வார்? “ராசபக்சே பேத்தியே…” என்று எழுதினால் தமிழர் எப்படி உணர்வர்? 2004 சுனாமிக்குப் பிறகு எத்தனைப் பாடல்களில் “சுனாமி” என்ற சொல் வருகிறது என ஆயலாம். ஒரு சோகத்துக்குரிய சொல்லைப் பொருந்தா இடங்களில் பயன்படுத்துகின்றனர். கவிஞர்களின் கற்பனை வறட்சியால் வரும் அசட்டுத் தனம்.