Tipping Point படித்தேன். சிறிய மாற்றங்கள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார். எனக்கு ரொம்பப் பிடித்த Broken windows கோட்பாடு பற்றிய எடுத்துக்காட்டும் வருது. ஒரு உளவியல் நூலை இந்த அளவுக்கு விறுவிறுப்பா எழுத முடியுமா? அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
Tagged: புத்தகம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
Outliers படித்தேன். பிறவி மேதைன்னு யாரும் கிடையாது. சரியான வாய்ப்பு கொடுத்தால் எல்லாரும் சாதிக்க முடியும்கிறார். இது தான் இட ஒதுக்கீட்டுத் தத்துவமோ? ஒரு ஆளின் வெற்றிக்கு சமூக, வரலாற்று, புவியிட அமைவும் காரணமாக இருக்கலாம்னு சொல்றாரு. IQ அல்லது தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றில் சிறு வேறுபாடுகள் பொருளற்றவை என்கிறார். கல்லூரி வாழ்க்கை முடித்த எல்லாருக்கும் இது புரியும். படிக்க வேண்டிய புத்தகம்.
-
சந்தோஷ் குரு
எனக்கு இந்த புத்தகத்தில் மிகவும் பிடித்த விஷயம் ”பத்தாயிரம் மணி நேர உழைப்பு” கருத்துதான். புரிந்து கொள்ள மிகவும் சாதாரண விஷயம் தானே இது, ஆனால் எத்தனை முறை “அவன் பெரிய ஆளுடா”, “அவன் ப்ராடஜி” என்று எண்ணி என்னுடைய பலநூறு மணி நேரங்களை சோம்பி தூங்கியிருப்பேன் அல்லது சும்மா இருந்திருப்பேன்.ம்ம்ம்ம்ம்ம்ம்
-
ரவி
ஆமா மிக எளிய கருத்து தான். புத்தகத்தில் உள்ள கருத்தில் நம் வாழ்க்கையில் நேரடியாக அறிந்த பலருடன் கூட பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால், ரகசியம் தெரிந்த பிறகும் கூட செயற்படுத்துவது இலகு இல்லையே.. இன்றில் இருந்து 10000 மணி நேரம் என்று இலக்கு வைத்தால் கூட மலைக்க வைக்கிறது !!
-
சந்தோஷ் குரு
உண்மைதான். இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடிச்சு மால்கம் க்ளேட்வெல்லோட பெரிய ரசிகனாகிட்டேன். அடுத்தது Tipping Point, Blink, What the Dog Saw மூன்று புத்தகமும் படிக்கபோகிறேன்
-
-
-
-
ரவி
Robin Cook எழுதிய Intervention படித்தேன். அவரது முந்தைய புதினங்களில் உள்ள மருத்துவ முக்கியத்துவம் போய் Dan Brown போல கிறித்தவ மர்மங்களுக்குள் புகுந்திருப்பது ஏமாற்றமே.
-
ரவி
The Little Prince படித்தேன். அருமை. என்னைச் சுற்றி உள்ள குழந்தைகளில் பலரிலும் குட்டி இளவரசர்களைக் காண முடிகிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய இலக்கியம். பரிந்துரைத்த எழுத்தாளர் S. Ramakrishnan க்கு நன்றி.
-
ரவி
Seth Godin எழுதிய Tribes படித்தேன். 125 பக்கப் புத்தகம் பல நாட்களுக்கு உறங்க விடாமல் சிந்திக்க வைக்கப் போகிறது. கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
-
ரவி
வெள்ளி இரவு http://flipkart.com தளம் மூலம் மூன்று புத்தகங்கள் வாங்கினேன். நல்ல சேவை. தள வடிவமைப்பு, icici இணைய வங்கி மூலம் பணம் கட்டுவது இலகுவாக இருந்தது. இன்று (திங்கள்) பகல் அழகாக பொட்டலம் கட்டி அனுப்பி வைத்து விட்டார்கள்.
-
ரவி
நோபல் பரிசு வென்ற முகமது யூனுசு எழுதிய Banker to the Poor படித்தேன். ஒரு மர்ம நாவலின் விறுவிறுப்போடு வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. எல்லாரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல். ஒரு சிறு பொறி எண்ணம் எப்படி உலகையே புரட்டிப் போடுகிறது என்பது வியக்க வைக்கிறது
-
ரவி
ச. முகமது அலி எழுதி இயற்கை வரலாறு அறக்கட்டளை ( 04259 – 253252 ) வெளியிட்ட “பாம்பு என்றால்?” நூல் படித்தேன். இந்தியாவில் நான்கு வகை பாம்புகளுக்கு மட்டுமே நஞ்சு உண்டு என்பது முக்கிய செய்தி. திரும்பத் திரும்பத் துணுக்குத் தோரணங்களாக வரும் செய்திகள் அலுப்பு தந்தாலும், இயற்கை ஆர்வத்தில் கைக்காசும் பெரும் உழைப்பும் செலுத்தி வெளியிடப்படும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியன.
-
ரவி
செல்லமுத்து குப்புசாமி எழுதிய “பிரபாகரன் – ஒரு வாழ்க்கை” படித்தேன். நடுநிலையான நல்ல அறிமுகம்.
-
ரவி
Made in Japan படித்தேன். ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் மிகச் சிறிய தொடக்கமும் சிந்திக்க வைக்கிறது. சப்பானியர் வாழ்க்கை, சமூக அமைப்பு, தொழில் துறை குறித்து நிறைய அறிய முடிந்தது. கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்.
கார்த்திக் 10:19 am on April 21, 2010 Permalink |
அவரோட Blink ரொம்ப அருமையா இருந்துச்சு.
கார்த்திக் 10:24 am on April 21, 2010 Permalink |
ஆமா ஒரே நேரத்துல ரெண்டு புக், அதுவும் non-fiction, படிக்க உன்னால மட்டும் எப்பிடி முடியுது?
நான் இது வர மூணு non-fiction தான் படிச்சுருக்கேன்
Blink
Brief History of Time
Standing on Shoulders of Giants
ரவி 10:40 am on April 21, 2010 Permalink |
கொஞ்சம் வெட்டியா இருக்கேன்னு வைச்சுக்கலாம்
தூரத்தில் உள்ள வாடகை நூலகத்தில் போய் வாங்கிட்டு வருவதால் ஒரே மூச்சுல 2,3 புத்தகம் எடுத்து ஒரு வாரத்துக்குள்ள திருப்பிக் கொடுக்க வேண்டியதும் ஒரு காரணம். அவரோட புத்தகங்கள் விறுவிறுப்பா இருப்பது இன்னொரு காரணம். வீட்டுல இருக்கிற ஏகப்பட்ட non-fiction நூல்கள் அப்படியே கிடக்கு.
இப்ப அவரோட Blink, What the dog saw எடுத்து வந்திருக்கேன்.