அரவான் பார்த்தோம். மன்னர்களின் வரலாற்றைச் சொல்லாமல் மக்களின் கதையைச் சொல்லும் கதைக்களத்தை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் குறிப்பிட வேண்டிய படம். நேர்மையான பாராட்டத்தக்க முயற்சி என்றாலும் படத்தில் உள்ள சிற்சில குறைகள் படத்தை மனத்தில் தங்கவிடவில்லை.
Tagged: திரை விமர்சனம் Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
கார்த்திக்
Magnolia பார்த்தேன். Crash படம் போன்று, ஒரே நேரத்தில் நடக்கும் பல கதைகள் ஒன்றிணைந்த படம். அசாத்தியமான நடிப்பில் ஒவ்வொருவரும் மிளிர்கிறார்கள். Tom Cruise இரு விதமான நடிப்பில் அசத்துகிறார். இவரை ஆக்சன் படங்களில் நடிக்க வைத்தே வீணாக்கி விட்டர்கள்.
மூன்று மணி நேர நீண்ட படம். பொறுமையாக பார்த்தால் பிடிக்கலாம்.
-
கார்த்திக்
The Prestige பார்த்தேன். 1900-களில் லண்டனில் வாழும் இரு Magic கலைஞர்களுக்கு இடையே வரும் வெறித்தனமான தொழில் போட்டியை பற்றிய கதை. தந்திரக் கலை, இவ்வளவு ஆபத்துகள் நிறைந்ததா என்று பதபதைக்க வைக்கிறது. இருவருமே அடுத்தவனின் தொழிலையும், குடும்பத்தையும் நாசமாக்குவதில் முனைப்பாக இருக்கிறார்கள். இருவரில் யார் நல்லவன், யார் கெட்டவன் என்று யூகிக்கவே முடியவில்லை. திரைக்கதையின் முடிவில் வரும் திருப்பம் யூகிக்க முடியாதது.
Inception போல பெரிய வெற்றி பெற்றிருக்கவேண்டிய படம். சில நம்ப முடியாத Science Fiction-ஆல் தொய்வு தான். சிலர் இதை ஏமாத்து வேலை என்றே சொன்னார்கள்.
The Dark Knight, Inception, Memento போன்ற சிறந்த படங்களை கொடுத்த நோலன் இயக்கியது. பெரிய லாபம் ஈட்டவில்லையென்றாலும் IMDB-யில் 8.4 புள்ளிகள் பெற்று Best Mystery படங்களில் 22-ஆம் இடத்தில் உள்ளது
-
ரவி
-
கார்த்திக்
நன்றி ரவி. Illusionist பார்த்தேன். Prestige போல நல்ல திரைக்கதை அமையவில்லையென்றாலும், ஓரு முறை பார்க்கலாம். 7/10
-
-
கார்த்திக்
Top Mystery பட வரிசையில், சென்ற வாரம் Memoirs of Murder என்ற கொரிய மொழி படம் பார்த்தேன்.
ஒரே மாதிரி நடக்கும் சீரியல் கொலைகளை, ஒரு காவல்துறை குழு துப்பறியும் கதை. 1980-களில் உண்மையாக நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்ட படம்.
ரொம்ப இயல்பான படம். பாலாவின் படங்களில் உள்ள மாதிரி வரும் ”பிளாக் காமடி” ரசிக்க வைக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பவரின் நடிப்பு வியக்க வைக்கிறது.
Warning: Not for family viewing!!
-
ரவி
தமிழ்த் திரை எப்படி எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுக்க சாது மிரண்டா பார்த்தேன். பாதி நேரம் உலாவிக் கொண்டே கதை வசனமாகவே கேட்டு படத்தை ஓட்டிட்டேன்.
இதே போன்ற பின்னணியில் உள்ள Illusionist படம் நன்றாக இருக்கும்..