Tagged: திரைப்படம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 4:52 pm on February 6, 2012 Permalink | Reply
    Tags: contagion, திரைப்படம்   

    Contagion பார்த்தோம். உண்மையில் ஒரு கொள்ளை நோய் எப்படி பரவுகிறது, அதனை மக்கள்-அரசு-ஊடகங்கள்-நல நிறுவனங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்று மிக இயல்பாகவும் பரபரப்பாகவும் காட்டும் படம். ஏதோ ஒரு கற்பனை எதிரி, சதி வேலையால் இம்மாதிரி ஆவதை விட இயல்பாகவே இது மாதிரி ஆனால் நம் கதி என்ன என்று சிந்தித்தாலே பொறி கலங்குகிறது :) கட்டாயம் காண வேண்டிய படம். பார்த்து முடித்தவுடன் உங்களை கைகளை அடிக்கடி கழுவிச் சுத்தமாக இருக்க முனைவீர்கள் :)

     
  • ரவி 8:09 pm on January 17, 2012 Permalink | Reply
    Tags: The Businessman, திரைப்படம்,   

    The Businessman பார்த்தேன். ஓம் மகேசுபாபு நமக :) வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என்று தெரிந்த பிறகும் திரையரங்குக்குச் சென்று காணத் தூண்டும் ஒரே ஆள் மகேசு பாபு தான் :)

     
  • ரவி 8:07 pm on January 17, 2012 Permalink | Reply
    Tags: திரைப்படம், வேட்டை   

    வேட்டை பார்த்தேன். ஆரியா ஒரு காட்சியில், “இந்த ஊரில் சிங்கம், புலி, கரடி எல்லாம் இருக்கு. வேட்டை ஆடுவோம்” என்கிறார். ஆனால், விட்டில் பூச்சி அளவு கூட படத்தில் உள்ள எதிரிகள் அச்சமூட்டவில்லை. படம் செம மொக்கை. அமலா பால், சமீரா அதைவிட…

     
  • ரவி 10:06 am on January 16, 2012 Permalink | Reply
    Tags: திரைப்படம், , பத்ரிநாத்   

    பத்ரிநாத் (தெலுங்குத் திரைப்படம்) பார்த்தேன். மகதீரா மோகத்தில் எல்லா நடிகர்களும் பழங்காலப் பின்னணியில் ஒரு மொக்கைப் படத்தைத் தந்து தொலைக்கிறார்கள். தமன்னாவுக்குத் தெலுங்கிலும் வாய்ப்பு குறைந்து வருகிறது :(

     
  • ரவி 10:04 am on January 16, 2012 Permalink | Reply
    Tags: தடா, திரைப்படம்,   

    Dhada (தெலுங்குத் திரைப்படம்) பார்த்தேன். படம் சுமார் தான். பாடல்கள் பரவாயில்லை. நாக சைத்தன்யாவை விட அவரது அப்பாவையே இன்னும் இரசிக்க முடிகிறது. வழக்கமான முன்னணி நடிகைகள் போல் காச்சல் அகர்வால் எல்லா நடிகர்களுடன் ஒரு சுற்று வந்த விட்டார். அடுத்த சுற்று சிரமம் தான்.

     
  • ரவி 10:02 am on January 16, 2012 Permalink | Reply
    Tags: Detective Dee and the Mystery of the Phantom Flame, திரைப்படம்   

    Detective Dee and the Mystery of the Phantom Flame பார்த்தோம். வழக்கமான சீனச் சண்டைப் பட பாணியில் ஒரு நல்ல விறுவிறுப்பான படம்.

     
  • ரவி 5:54 pm on January 4, 2012 Permalink | Reply
    Tags: திரைப்படம், மயக்கம் என்ன   

    மயக்கம் என்ன பார்த்தேன். படத்தில் ஆழம் குறைவு என்றாலும் முடிவும் கருவும் நெகிழ வைக்கிறது. செல்வராகவன் படங்களில் கொஞ்சம் உருப்படியான ஒன்றாக இருக்கிறது. இதைப் பண்பாட்டுச் சீரழிவு என்று சொல்லும் மக்களுக்கு இன்னும் மூளை வளர வேண்டும்.

     
  • ரவி 5:26 pm on December 27, 2011 Permalink | Reply
    Tags: Mission Impossible 4, திரைப்படம்   

    Mission Impossible 4 பார்த்தோம். செம்ம மொக்கைடா சாமி. துபாய் காட்சிக்குப் பிறகு வருவது எல்லாம் தமிழ்த் திரைப்படத்தைக் காட்டிலும் சொதப்பலாக இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் அமெரிக்கா மீது உருசியா ஏவும் அணு ஆயுதத்தில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றுவார்கள்?

     
  • ரவி 7:38 pm on December 18, 2011 Permalink | Reply
    Tags: திரைப்படம், மௌனகுரு   

    மௌனகுரு பார்த்தேன். விறுவிறுப்பான குற்றப் பின்னணித் திரைப்படம். இரண்டாம் பாதியில் தேவையில்லாத திருப்பங்கள் வருகிறது. செம்மைப்படுத்தி இருக்கலாம். இரண்டாம் முறை கூட திரையரங்கில் பார்க்க முடிகிற அளவுக்கு இருக்கிறது :)

     
  • ரவி 8:17 am on December 15, 2011 Permalink | Reply
    Tags: puss in boots, திரைப்படம்   

    Puss in Boots (3D) பார்த்தோம். கொஞ்சம் அம்புலிமாமா கதை தான். இருந்தாலும், ரசிக்க முடிகிறது. Mask of Zorro பாதிப்பு நிறைய.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel