The Businessman பார்த்தேன். ஓம் மகேசுபாபு நமக
வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
Tagged: திரைப்படம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
வேட்டை பார்த்தேன். ஆரியா ஒரு காட்சியில், “இந்த ஊரில் சிங்கம், புலி, கரடி எல்லாம் இருக்கு. வேட்டை ஆடுவோம்” என்கிறார். ஆனால், விட்டில் பூச்சி அளவு கூட படத்தில் உள்ள எதிரிகள் அச்சமூட்டவில்லை. படம் செம மொக்கை. அமலா பால், சமீரா அதைவிட…
-
ரவி
பத்ரிநாத் (தெலுங்குத் திரைப்படம்) பார்த்தேன். மகதீரா மோகத்தில் எல்லா நடிகர்களும் பழங்காலப் பின்னணியில் ஒரு மொக்கைப் படத்தைத் தந்து தொலைக்கிறார்கள். தமன்னாவுக்குத் தெலுங்கிலும் வாய்ப்பு குறைந்து வருகிறது
-
ரவி
Dhada (தெலுங்குத் திரைப்படம்) பார்த்தேன். படம் சுமார் தான். பாடல்கள் பரவாயில்லை. நாக சைத்தன்யாவை விட அவரது அப்பாவையே இன்னும் இரசிக்க முடிகிறது. வழக்கமான முன்னணி நடிகைகள் போல் காச்சல் அகர்வால் எல்லா நடிகர்களுடன் ஒரு சுற்று வந்த விட்டார். அடுத்த சுற்று சிரமம் தான்.
-
ரவி
Detective Dee and the Mystery of the Phantom Flame பார்த்தோம். வழக்கமான சீனச் சண்டைப் பட பாணியில் ஒரு நல்ல விறுவிறுப்பான படம்.
-
ரவி
மயக்கம் என்ன பார்த்தேன். படத்தில் ஆழம் குறைவு என்றாலும் முடிவும் கருவும் நெகிழ வைக்கிறது. செல்வராகவன் படங்களில் கொஞ்சம் உருப்படியான ஒன்றாக இருக்கிறது. இதைப் பண்பாட்டுச் சீரழிவு என்று சொல்லும் மக்களுக்கு இன்னும் மூளை வளர வேண்டும்.
-
ரவி
Mission Impossible 4 பார்த்தோம். செம்ம மொக்கைடா சாமி. துபாய் காட்சிக்குப் பிறகு வருவது எல்லாம் தமிழ்த் திரைப்படத்தைக் காட்டிலும் சொதப்பலாக இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் அமெரிக்கா மீது உருசியா ஏவும் அணு ஆயுதத்தில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றுவார்கள்?
-
ரவி
மௌனகுரு பார்த்தேன். விறுவிறுப்பான குற்றப் பின்னணித் திரைப்படம். இரண்டாம் பாதியில் தேவையில்லாத திருப்பங்கள் வருகிறது. செம்மைப்படுத்தி இருக்கலாம். இரண்டாம் முறை கூட திரையரங்கில் பார்க்க முடிகிற அளவுக்கு இருக்கிறது
-
ரவி
Puss in Boots (3D) பார்த்தோம். கொஞ்சம் அம்புலிமாமா கதை தான். இருந்தாலும், ரசிக்க முடிகிறது. Mask of Zorro பாதிப்பு நிறைய.
-
ரவி
போராளி பார்த்தோம். சமத்திரக்கனி, சசி இரண்டு பேரிடமும் சரக்கு தீர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. நாடகத்தனமான காட்சிகள், அலைபாயும் கதை, தேவையில்லாத வன்முறை…