அழகர்சாமியின் குதிரை மூலக்கதையிலிருந்து அங்கங்கே விலகியிருந்தாலும் அது துருத்திக் கொண்டிருக்காமல் இயல்பாய் இருப்பது படத்திற்கான அழகு. அழகான இடம் அழகர்சாமியின் காதலும் அவனுக்கான பாடலும், கொஞ்சம் எதிர்மறையான அம்சம் ராமகிருஷ்னனுடைய காதலுக்கான பாடல். 80களின் காலத்தைப் படம்பிடிக்கும் போது சமகாலம் அங்கங்கே எட்டிப்பார்த்துவிடுவது என்னமோ போலிருக்கிறது. இளையராஜா என்னுடைய தலைமுறைக்காகவும் தன்னுடைய முழு உழைப்பைக் கொட்டிக்கொண்டிருக்கிறார், ஆனால், அது படத்திற்குப் பயன்பட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். முதலில் வரும் பின்னணி இசையில் மணிதன் அதகளப்படுத்துகிறார் என்றால், அழகர்சாமி பௌர்னமிக்குஅம்சங்கள்ள் குதிரையுடன் திரும்பி வருவதாக வாக்கு கூறிய பிறகு அந்தப் பெண் அவனைத் தேடி ஓடும் இடத்தில் தவிப்பை காட்சியை விட செவிக்குள் வந்து இசைத்துவிட்டுப் போகிறார். இறுதியில் குதிரை கெட்டவர்களை அனைவரையும் தண்டிப்பதெல்லாம் இது என்னமோ பள்ளி மாணவர்கள் போட்ட நாடகமோ என்ற விளைவைத் தந்துவிடுகிறது.
படத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியத் தகவல், கோடங்கி, குறி சொல்லும் மந்திரவாதி, இவர்களது மூடப்பழக்கங்கள் எல்லாம் பகடி செய்யப்படுவதும், இறுதிக்காட்சியின் கலப்புமனத்தை ஆதரிக்கும் காட்சியும் பாரட்டப்படவேண்டிய .
majid majidi, oscar விருது வாங்கவில்லை. அவர் சிறந்த இயக்குநரா இல்லையா
?