புருனோ
-
12:11:16 pm on November 24, 2008 | # |
//சிங்கை மக்கள் முன்னேறித்தானே இருக்கிறார்கள்,அவர்களுக்கு சிங்கை அரசு எந்த வித இட ஒதுக்கீடு செய்தது என்பதை சிறிது ஆய்ந்து சான்றுகளுடன் எழுதுவீர்களா?//
சிங்கப்பூரில் கடந்த 2000 வருடங்களாக இந்த சமுதாயம் தான் (ஏட்டு) கல்வி கற்க வேண்டும். இந்த சமுதாயம் கற்க கூடாது என்ற கட்டுபாடு ஏதாவது இருந்ததா என்று ஆய்ந்து எழுத கோவியாருக்கு வேண்டுகோள்.
அப்படியே சிங்கப்பூரில் சுமார் 50 வருடங்களுக்கு முன் கூட அங்கு முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு (அவன் ஜாதியை காரணம் காட்டி) வேலை மறுக்கப்பட்டதா என்று எழுதுங்கள்
அதே போல் அங்கு மருத்துவக்கல்லூரிகளில் 50 வருடங்களுக்கு முன் வரை முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விழாவில் பதக்கங்கள் வழங்கப்படும் போது சில பாடங்களில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு (அவர்களின் ஜாதியால்) மட்டும் அலுவலக அறையிலே பதக்கம் வழங்கப்பட்டதா என்று ஆராய்ந்து எழுதுங்கள் - சிங்கப்பூரில் இப்படி எல்லாம் நடந்திருக்கவில்லை என்றால் மட்டும்
கீழ்க்கண்ட கற்பனை உரையாடல் -
நோயாளி : எனக்கு பார்வை மங்கலாக தெரிகிறது
மருத்துவர் : நீங்கள் கண்ணாடி போட வேண்டும்
நோயாளி : பார்வை நன்றாக இருப்பவர்கள் எல்லாம் கண்ணாடி போட வில்லையே. நான் மட்டும் ஏன் போட வேண்டும் -
என்ன கொடுமை சார் இது
Related posts