Updates from கார்த்திக் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • கார்த்திக் 6:36 pm on April 6, 2010 Permalink | Reply
    Tags:   

    (பேருந்தில் வரும் போது தோணிய கவிதை. வைரமுத்து பாணியில் வாசிக்கவும்)

    நீங்கள் படைப்புகளை வியக்கயில்,
    நான் படைத்தவனை படித்து கொண்டிருப்பேன்.

    நீங்கள் படைத்தவனை அறிய முயல்கயில்,
    நான் அவன் படைப்புகளை விஞ்சியிருப்பேன்

     
    • ரவி 11:00 am on April 7, 2010 Permalink | Reply

      கார்த்தி, நல்லா தானடா இருந்த :)

      • கார்த்திக் 11:15 am on April 7, 2010 Permalink | Reply

        :) பேருந்துல சன்னல் சீட்டு கிடைச்சா ஏதோ மந்திரி பதவி கிடச்ச மாதிரி ஒரு நினைப்பு. இது மாதிரி ஏதாவது நினைக்க தோணுது

        • ரவி 2:43 pm on April 20, 2010 Permalink | Reply

          சும்மா பேச்சுக்கு ஓட்டினேன். உண்மையிலேயே கவிதையின் பொருள் அருமை.

  • கார்த்திக் 1:28 pm on October 20, 2009 Permalink | Reply
    Tags:   

    London Dreams is about the journey of two friends from childhood to adulthood. Originally from Punjab, they dream of going to London, forming a band and conquering the world of music. Trouble starts when one becomes more popular than the other, and both fall in love with the same girl.

    Sounds like the story is inspired from Balachandar’s film “Duet”

     
  • கார்த்திக் 11:06 am on October 15, 2009 Permalink | Reply
    Tags: , ,   

    http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-rajapakse-just-joked-says-thirumavalavan.html

    News:

    என்னை அறிமுகம் செய்த போது பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்றார் திருமாவளவன்

    Comment:

    உன்ன நாங்களும் நகைச்சுவையாக தான் நினைக்கிறோம்

     
  • கார்த்திக் 10:57 am on October 15, 2009 Permalink | Reply
    Tags: , ,   

    http://docs.google.com/fileview?id=0Bxj34gffkes3ZDEyMGI1ZjQtNjNlNy00MDgxLWEwYzgtNjZiZGY2NzIwYmYy&hl=en

    இந்த பள்ளியில் தமிழ் விக்கி பயன்படுத்துகிறார்களாம். மாணவர்களுக்கு ஈ-கலப்பை பயன் படுத்த தெரியுமாம்.

     
    • ரவி 2:00 pm on October 15, 2009 Permalink | Reply

      நன்றி கார்த்திக். இது குறித்து தமிழ் விக்கிப்பீடியாவில் உரையாடியுள்ளோம். பள்ளி தலைமை ஆசிரியரிடமும் பேசினேன். விவரங்களுக்கு http://bit.ly/3DDraO பார்க்கவும்.

  • கார்த்திக் 9:59 am on October 8, 2009 Permalink | Reply  

    ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சம் பற்றி யாராவது விளக்க முடியுமா?

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் “நெல் ஆடிய நிலம் எங்கே?” என்ற பாட்டை கேட்டதால் இதை பற்றி அறிந்து கொள்ள விழைகிறேன்.

    நெட்டில் தேடினால் இந்த பதிவு மட்டும்  கிட்டியது

     
    • சந்தோஷ் குரு 11:09 am on October 8, 2009 Permalink | Reply

      பெயரெச்சம்- உண்ட குதிரை
      எதிர்மறை(Opposite)-உண்ணாத குதிரை
      ஈறு கெட்ட – கடைசி எழுத்து போன
      ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்- உண்ணா குதிரை

      நன்றி: http://tamilkkalvi.blogspot.com/2008/01/blog-post_08.html

    • ரவி 2:00 pm on October 8, 2009 Permalink | Reply

      இந்தப் பாட்டுக்கும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்துக்கும் என்ன தொடர்பு?

      பாடல் வரிகள் – http://thenkinnam.blogspot.com/2009/07/blog-post_7370.html

      • கார்த்திக் 2:24 pm on October 8, 2009 Permalink | Reply

        பாட்டின் தொடக்கத்தில் இப்படி வருகிறது:

        பாடுவீரோ தேவரே ? பரணி, கலம்பகம், உலா ஏதேனும்? ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமேனும் அறிவீரோ? (சிரிப்பு)

        பிறகு தான் பாடல் தொடக்கம். பாடல் ஒரு தாக்கத்தை தருகிறது. படம் பற்றிய எதிர்ப் பார்ப்பை கூட்டுகிறது.

      • கார்த்திக் 2:28 pm on October 8, 2009 Permalink | Reply

        நான் குறிப்பிட்ட பாடல் விசய் ஜேசுதாசு மற்றும் நித்தியசிறி பாடியது

    • TBCD 6:02 pm on January 16, 2010 Permalink | Reply

      http://twitter.com/TBCD/status/7826424411

      நெல்லாடிய பாடலில் வரும் “ஈறுகெட்ட பெயரெச்சமறிவீரோ” என்று கேட்பது, தமிழ் கற்றியிருக்கின்றீர்களா என்ற தொனியில் கேட்கப்படுவது
      #1001

    • ஆஷ் 6:45 am on January 18, 2010 Permalink | Reply

    • Anonymous 1:46 pm on May 18, 2012 Permalink | Reply

      ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது சில சொற்களின் இலக்கண குறிப்பு. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது எதிர்மறையான பொருளில் வரும் ஒரு வினைச்சொல், அதன் கடைசி எழுத்து இல்லாமல் (ஈறு = கடைசி; கெட்ட = இல்லாமல்) வந்து, அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் சொல். எடுத்துக்காட்டுகள்:
      செல்லாக் காசு (= செல்லாத காசு.) என்பதில் செல்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். செல்லும் என்பது உடன்பாட்டு பொருள். செல்லாத என்பது எதிர்மறைப் பொருள். செல்லாத என்னும் சொல், செல்லாதது என்று முடிவு பெறாமல் எச்சமாக வரும் வினைச்சொல். செல்லா என்பது செல்லாத என்னும் சொல்லின் கடைசி எழுத்தாகிய த இல்லாமல் (கெட்டு) வருவது. மேலும் செல்லா என்னும் சொல், காசு என்னும் பெயர்ச்சொல்லைப் பற்றிக் கூறவந்த வினைச்சொல். எனவே செல்லாக் காசு என்னும் தொடரில், செல்லா என்னும் சொல்லை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று கூறுவர்.
      பிற எடுத்துக்காட்டுகள்: வணங்காத் தலை, அழியாப் புகழ், கேளாச் செவி, ஓயாத் தொல்லை
      இப்படி ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும் என்னும் இலக்கண விதியின் படி செல்லாக் காசு, அழியாப் புகழ், கேளாச் செவி, ஓயாத் தொல்லை என்று வல்லின ஒற்று[1] மிகுந்து (= கூடுதலாக) வரும்.

  • கார்த்திக் 10:40 pm on September 16, 2009 Permalink | Reply  

  • சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் “ஆன் லைனில் “ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ். பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்துக் கேட்டு கொண்டிருந்தார்
  • —————-
  • ” முதல் மரியாதை” படம் எனது ” கவுண்டர் கிளப் ” குறுநாவலன் மையத்தை ஒத்திருந்தது
  • —————–
  • கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது பட்டு திரைக்கதையை எழுதியவன் என்றார் .ரேவதியும் அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள் என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாக சொன்னார்.
  • —————
  • சென்ற‌ டிச‌ம்ப‌ரில் திருவ‌ன‌ந்த‌புர‌த்திற்கு சென்ற‌ போது காஞ்சீவ‌ரம் திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது.திரையிடப்பட்ட அன்று‌ பார்த்தேன். அதிர்ச்சியாக‌ இருந்தது….. நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகம் வந்தது.

  • Source: http://rpsubrabharathimanian.blogspot.com/

    நாலு வரி, காப்பி பேசுட் பண்ணிய எனக்கே “Source” என்று தொடுப்பு வைக்க தோன்றும் போது, இப்படி ஒரு நாவலையே அடித்து பணம், புகழ் சம்பாதிப்பவர்களுக்கு மூலக்கதை படைத்தவருக்கு ஒரு நன்றி சொல்ல கூடவா முடியவில்லை?

     
    • ரவி 1:19 pm on September 18, 2009 Permalink | Reply

      ஒரு வேளை தமிழ் இயக்குநர்கள் கதையும் தங்கள் சொந்த சரக்குன்னு சொல்லி பெருமை பட நினைக்கிறாங்களோ? (விதிவிலக்குகளும் உண்டு: பாரதிராசா, மகேந்திரன், K.V. Anand) கதை, திரைக்கதை, வசனம்னு நீட்டி முழக்காமல் இயக்குநர் இயக்கத்தை மட்டும் பார்த்தால் நிலைமை மாறலாம்.

      தவிர, அறிவுரிமை தொடர்பான சட்டங்கள் கடுமையாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். சிங்கப்பூரில் நன்யாங் பல்கலையில் படித்த போது ஒரு புத்தகத்தைக் கூட முழுமையாக xerox எடுத்து தர மாட்டார்கள். ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு சில பக்கங்கள் மட்டும் தான் xerox எடுத்து கொடுக்கலாம் என்ற அளவுக்கு பதிப்புரிமை விதிகள் மிக கடுமையாகப் பின்பற்றப்பட்டன. நம்ம ஊரிலோ பல்கலை நூலகத்திலேயே முழுப்புத்தக்கதையும் xerox எடுத்து வைத்திருப்பார்கள் :)

      அறவியல் நோக்கில் பார்த்தால் நாம் எத்தனை பேர் நல்லவர்கள்? திருட்டு VCD பார்ப்பது, சாலையோர மலிவு விலை கடையில் புத்தகம் வாங்குவது எல்லாம் ஒரு வகையில் படைப்பாளிக்கு உவப்பாக இருக்காது தானே?

      • புருனோ 7:38 pm on September 19, 2009 Permalink | Reply

        சாலையோர மலிவுக்கடையில் புத்தகம் வாங்கும் அளவு அந்த அசல் புத்தகத்தில் விலை இருப்பது ஏன் ??

        உதாரணமாக சாலையோரக்கடையில் 100 ரூபாய்க்கு கிடைக்கும் புத்தகம் பதிப்பகத்தால் 150 ரூபாய் என்று விற்கப்பட்டால் யாரும் சாலையோரக்கடையுல் வாங்கப்போவதில்லையே….

        அசல் புத்தகம் 500, சாலையோரக்கடையில் 100 என்று வருவதால் தானே இங்கு விற்பனை கொடி கட்டி பறக்கிறது

        • ரவி 8:48 am on September 22, 2009 Permalink | Reply

          உண்மை தான். இந்த விசயத்தில் http://www.moserbaerhomevideo.com/ நிறுவனத்தின் விற்பனை அணுகுமுறை நல்லா இருக்கு.

  • கார்த்திக் 9:24 am on July 14, 2009 Permalink | Reply
    Tags: , , , ,   

    எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இந்த கர்நாடக சங்கீதம் படிச்சுகினு, ஏதோ இசை எங்களால தான் வாழுதுங்குறாங்களே, அவங்களுக்கு இசை உருவாக்கத் தெரியுமா? இல்ல மத்தவங்க போட்டு தரத பாட மட்டும் தான் தெரியுமா? எனக்கு தெரிஞ்ச வர, எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல. அப்பறம் எதுக்கு இப்படி அலப்பர பண்ராங்கன்னு தெர்ரல!!!

    அப்பறம், இந்த ஆலாபனை பண்ராங்களே, இது இவங்க உருவாக்குனதா? இல்ல, அதுவும் மத்தவங்க போட்டு வச்சதுதானா?

     
    • ரவி 11:11 am on July 14, 2009 Permalink | Reply

      //எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல//

      குன்னக்குடி வைத்தியனாதன், L. subramaniam போன்றவர்கள் (திரைப்பட) இசையமைப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்துசுத்தானி போன்ற எல்லா மரபார்ந்த இசையைக் கற்றவர்களிலும் கண்டிப்பாக இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஏன் ஒரு இசையமைப்பாளராக வெற்றி பெறவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் தானே? கீர்த்தனைகளையும் தியாகராசர் போல யாராவது ஒருவர் தானே முதலில் இயற்றி இருக்க வேண்டும்?

      பாடுவதும் ஒரு திறமை தானே? போட்டு வைத்ததை எல்லாரும் இலகுவாகப் பாடலாம் என்றால், எல்லாரும் பாடகர்களாகி விட மாட்டார்களா? போட்டு வைத்த இசையைப் பாடுறதுன்னாலும் அதிலும் தனித்துவம், நுணுக்கம் காட்டினா தான் நிலைக்கலாம்னு நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. ஆனா, அப்படி ஏதாச்சும் இருக்கணும ;)

      • மணிகண்டன் 2:57 pm on July 14, 2009 Permalink | Reply

        இசைஅமைப்பாளர் அப்படின்னா சினிமாவுக்கு இசை அமைக்கனுமா ? :) -

      • yemkay 11:03 am on July 19, 2009 Permalink | Reply

        //பாடுவதும் ஒரு திறமை தானே
        ஆம். ஆனால், அதை ஒரு உருவாக்கும் திறனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. I’d call it as ”performance”. ஆனால், நாம் performance-க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை creativity-க்கு கொடுப்பதில்லை. எப்படி ஒரு நடிகனுக்கு, இயக்குனரை விட அதிக முக்கியத்துவம் தருகிறோமோ, அத போல தான் ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.

        சினிமாவில் மட்டுமல்ல, பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழர்களின் பலமே உருவாக்கும் திறன் மற்றும் கடும் உழைப்பில் தான் அடங்கி இருகிறது. ஆனால் இன்றைய சூழலில், செயல் திறன் (performance) எனும் மோகத்தில் தான் பெரும்பாலோனரின் நாட்டமே.

        சில உதாரணங்கள்,

        abacus training:
        ஒரு கணக்கை விரைவாக தீர்க்கும் வித்தையா நம் குழந்தைகளுக்கு தேவை? பாட புத்தகத்தில் இல்லாத வேறொரு கணக்கை கொடுத்தால், அதையும் தீர்க்கும் அறிவைதான நாம அவர்களுக்கு கொடுக்கணும்? விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை?

        திருக்குறள் ஒப்பிப்பு, spelling bee:
        1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்

        என்னுடைய முதல் கேள்வியும், இது மாதிரியான ஒரு கோபத்தின் வெளிப்பாடு தான். யாரையும் புண்படுத்த சொல்லவில்லை.

    • ரவி 7:45 am on July 20, 2009 Permalink | Reply

      //ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.//

      இதில் தெளிவில்லை. மரபார்ந்த இசைத்துறையிலும் பாடகர்களுக்கு உள்ள மதிப்புக்கும் கூடுதலாக இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களுக்கும் மதிப்பு உண்டுன்னு தான் நினைக்கிறேன்.

      //பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை//

      //விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை? //

      //1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்//

      ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல :)

      • கார்த்திக் 10:28 am on July 20, 2009 Permalink | Reply

        //ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல
        ஏதோ உளறிட்டேன் ;)

    • sri 7:45 am on July 24, 2009 Permalink | Reply

      dei karnadaga sangeetham pathi unkku pesa arugatha illada naaye

      • புருனோ 9:08 am on July 24, 2009 Permalink | Reply

        தங்களின் மேலான கருத்திற்கு பணிவான வணக்கங்கள் நண்பரே :)

    • ஓவியன் 11:20 pm on September 1, 2009 Permalink | Reply

      ரவி. நான் சொல்லல? கார்த்திக் தெளிவா சொன்ன புரிஞ்சுக்குவார்னு

  • கார்த்திக் 5:02 am on May 28, 2009 Permalink | Reply  

    நேத்து டிவியில ஒரு படம் பாத்தேன். என்னா சிரிப்பு. நேத்து என் தம்பி ஆபிசுல, இந்த படத்த பாக்கிறதுக்குன்னு நிறைய பேர் சீக்கிரமா வீட்டுக்கு போனாங்களாம்.

    இந்த படம் ரிலீசப்போ கல்லூரி மாணவர்கள் முண்டியடித்து படத்த பாக்க போனாங்களாம்.

    கலைஞர் கூட இந்த படத்த சிறப்பு காட்சில பாத்தாரு.

     
    • ரவி 5:44 am on May 28, 2009 Permalink | Reply

      தமிழக மின் துறை அமைச்சர் :)

      • Karthik 6:53 am on May 28, 2009 Permalink | Reply

        பிரமாதம்

  • கார்த்திக் 4:40 am on February 20, 2009 Permalink | Reply
    Tags: ,   

    மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசம் – “ஓ! சாயா” பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்த்துரைக்கப்பட்டுள்ளார்.

    இவர் தந்தை தான் EROS ஆரம்பித்தவராம்.

    ஏன் இவரைப் பற்றி நம் ஊடகங்கள் பிரசுரிக்கவேயில்லை?

     
    • ரவி 9:15 pm on February 22, 2009 Permalink | Reply

      ஏனென்றால் அவர் இலங்கைத் தமிழர். அதுவும் “தீவிரவாத” இயக்கத் தொடர்புடையவர் அல்லது ஆதரிப்பவர்!! இலங்கைத் தமிழர்களைத் தேவையான போது மட்டுமே தமிழராகச் சித்தரிப்பது தமிழக ஊடகங்கள் வழக்கம். கிரிக்கெட் வீரர் முரளிதரன் போல. அதுவும் கூட அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற தமிழர் என்பதால் இருக்கலாம். ரகுமானைக் கூட தமிழர் என்பதைக் காட்டிலும் இந்தியர் என்று முன்னிறுத்தியே எழுதுகிறார்கள்.

      பல்வேறு துறைகளில் ஈழத்தமிழர்கள் நம்மைக் காட்டிலும் சாதித்திருக்கிறார்கள். ஆனால், அவை திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன.

    • சரவணகார்த்திகேயன் சி. 6:44 am on February 23, 2009 Permalink | Reply

      I have written about M.I.A.
      http://www.writercsk.com/2009/02/tamil-girl-oscars.html
      But she missed it..

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel